
உங்களை நிஜமாகவே இருக்கை முனையில் ஒன்றரைமணி நேரம் இப்படம் உட்கார வைத்திருக்கும். நகம் கடித்தபடி ஒவ்வொரு காட்சிக்கு பின்னாடியும் 'அடுத்து என்ன நடக்க போகிறதோ' என மனம் பதைபதைத்தபடி காத்திருப்பீர்கள். நான் ஓவர் பில்ட் அப் கொடுக்கிறேன் ஏன் நினைத்தீர்களானால் படத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். அப்படி பட்ட படம் தான் பதினொன்று பதினாலு (
11:14..திரைப்படத்தின் பெயரே அதுதான்.).
படத்தின் மேகிங் மிகவும் புதுசு. இயக்குனர் கொஞ்சம் அமோரோஸ் பெர்ரோசை மேகிங்கில் உல்டா பண்ணி இருப்பது போல தோன்றினாலும் இது வேறு வகை. ஐந்து கதாபாத்திரங்களுக்கு ஒரு நாள் இரவு பதினொன்று பதினாலுக்கு என்ன நடக்கிறது என்பதை த்ரில்லாக (தில்லாக) சொல்லி இருக்கிறார் இயக்குனர் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டர் கிரேக் மார்க்ஸ். ஐந்து வெவ்வேறு கதைகள் ஒரே புள்ளியில் பதினொன்று பதினாலுக்கு இணைந்தாலும் ஒவ்வொரு கதைக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருந்து படத்தின் கடைசியில் நம் மனதில் எழும் கேள்விகளுக்கு தெளிவாக நம் திடுக்கிடல்களுக்கு விடை அளிக்கிறது படம்.
கதை 1.---------
ஜாக் தண்ணி அடித்துக் கொண்டு செல்போனில் பேசியபடி,காரை ஒட்டி வரும்போது எதோ ஒன்று அவன் காரின் மேல் மொத கார் சறுக்கிக் கொண்டு சாலை ஓரத்துக்கு செல்கிறது. அப்போது மணி
11:14. சாலை ஓரத்தில் மான்கள் சாலை கடக்கும் சிக்னலை காணும் அவன், எதோ மான்
தான் காரில் அடி பட்டு செத்து இருக்கும் போல என நினைத்து காருக்கு எதுவும் அடி பட்டிருக்கிறதா என பார்க்க இறங்கி வந்து பார்க்கிறான். அப்போது தான் அங்கு சிதைந்த முகத்துடன் ஒரு மனித உடலை பார்க்கிறான். குடிபோதையில் அவனை இடித்து விட்டதை உணர்ந்து கொள்ளும் வேளையில் இன்னொரு கார் அவனது அருகே வர, அந்த மனிதனை மறைத்து வைக்கிறான் ஜாக். அந்த காரில் வரும் நார்மா ஒரு நடுத்தர வயதுப் பெண். மானை அடித்து விட்டதாக அவள் கருதி அவனுக்கு உதவ, காவலருக்கு 911 என்ற என்னை அடித்து பேசி சொல்லி விட்டு போகிறாள். அவசர அவசரமாக அந்த பிணத்தை காரின் டிக்கியில் வைத்து பூட்டி காரை எடுக்க எத்தனிக்கும் வேளையில் அவனது காரின் பின்னே ஒரு போலீஸ் கார் நிற்கிறது. இறங்கி அவனிடம் வரும் போலீஸ் அவன் குடித்திருப்பதை உணர்ந்து அவனுக்கு விலங்கு பூட்டுகையில் அவனது காரின் டிக்கியில் ரத்தகரை பார்த்து உள்ளே ஒரு பிணம் இருப்பதை கண்டு திடுக்கிடுகிறான் போலீஸ். அவனை போலீஸ்
கார்க்கு அழைத்து செல்ல அங்கே உள்ளே ஏற்கனவே பச்சி மற்றும் டப்பி(duffy) இருப்பதை பார்கிறான். அவர்கள் இவனுக்கு இடம் தர மறுக்க அந்த களேபரத்தில் போலிசிடம் இருந்து தப்பி ஓட, போலீஸ் இவனை துரத்த, பச்சி மற்றும் டப்பி தப்பி ஓடுகிறார்கள். ஜாக் ஓடி செல்ல அங்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கு இருந்து வெளி வரும் நார்மா, தனது கணவனை காணவில்லை என்றும் தனது மகள் விபத்தில் இறந்து
விட்டாள் என்றும் அவள் கூற அந்த நேரம் போலீஸ் வந்து அவனை பிடிக்கிறான். அவன் தான் தனது மகளை விபத்தில் கொன்று விட்டதாக கூறி அவனை அடிக்கிறாள் நார்மா.
கதை 2.--------

டிம் மார்க் மற்றும் எட்டி என்ற டீன் ஏஜ் வாலிபர்கள் ஒரு வேனில் பீர் அறிந்தியபடி தாறுமாறாக ஒட்டி செல்கிறார்கள்.
அவர்கள் போதை வரவழைக்கும் கோகைனை
உறிய ஒரு புத்தகத்துக்கு தீ வைக்கிறார்கள் அது குபு குபு என எரிய அதனை தூக்கி சாலை ஓரத்தில் எறிகிறார்கள். அப்போது போதையின் உச்சத்தில் எட்டி வேன் ஜன்னல் கதவை திறந்து அப்படியே ஒன்றுக்கு போக, அதனை வேனை ஒட்டி கொண்டிருக்கும் மார்க் தடுக்க, சாலையின் நடுவே வந்துவிட்ட ஷேரி என்ற பெண்ணை இடித்து விட அந்த பெண் அங்கேயே மரணிக்கிறாள். அப்போது மணி 11:14. செய்வதறியாது அவர்கள் திகைக்க அங்கே ஓடி வருகிறான் ஒரு வாலிபன் (டப்பி). அவள் இறந்து போனதை உணர்ந்ததும் இடுப்பில் உள்ள துப்பாக்கியை எடுத்து வேனை நோக்கி சுட ஆரம்பிக்க, அவர்கள் வேனை கிளப்பி கொண்டு தப்பிக்கிறார்கள், அப்போது தான் டிம் எட்டியின் இடுப்பு பகுதியில் ரத்தம் கொப்பளிப்பதை பார்க்க, எட்டி, அந்த விபத்தில் ஜன்னல் கதவு மூடிக்கொள்ள, தனது ஆண் குறி வெட்டு பட்டு அந்த விபத்து நடந்த இடத்தில் துண்டாகிவிட்டதை சொல்லி அழுகிறான். டிம் அதனை தேடி விபத்து நடந்த இடத்துக்கு செல்ல, அங்கே இறந்த ஷேர்ரியை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டிருக்கும் இருவர் அந்த விபத்துக்கு இவன் காரணமாக இருக்கலாம் என துரத்த, டிம்மின் ஆண் குறியை தூக்கி கொண்டு வேனில் ஓடி வந்து ஏறி வேனில் பறக்கிறார்கள். டிம் ஏட்டிக்கு அவனுடையதை அளித்து தனது நட்பை பறை சாற்றிகொள்கிறான்.
கதை 3---------
தனது நாயை வாக்கிங் கூட்டி செல்கிறான் பிரான்க். அப்போது ஒரு கல்லறை தோட்டத்தை கடக்கும் போது அங்கே தனது மகள் ஷேர்ரியின் கார் சாவி கிடப்பதை காண்பவன், தனது மகளின் பாய் பிரெண்டான ஆரோன் கல்லறையில் உள்ள ஒரு தேவதையின் சிலை விழுந்து தலை நசுங்கி செத்து கிடப்பதை கண்டு தனது மகள் பிரச்னையில் இருக்கிறாள் என உணர்ந்து அவளை காப்பாற்ற, அந்த பிணத்தை தனது காரின் டிக்கியில் ஏற்றி ஒரு பாலத்தின் மேல் சென்று சுற்றும் முற்றும் பார்த்தபடி அந்த மேம்பாலத்தின் மேலிருந்து பிணத்தை வீசி எறிய அது ஒரு காரின் மேல் விழுகிறது. அப்போது மணி
11:14 (கவனிக்க, இந்த பிணம் தான் முதல் கதையில் வந்த ஜாக்கின் காரில் விழுந்தது). அவனது ஜாக்கெட்டை தெருவில் எரிந்து கொண்டிருக்கும் புத்தகத்தில் போட்டு அதை எரிக்கிறான்.(இந்த புத்தகம் தான் இரண்டாம் கதையில், அந்த டீன் ஏஜ் வாலிபர்களால் வேனிலிருந்து தூக்கி எறியப்பட்டது).
கதை 4---------

பச்சி ஒரு கடையில் வேலை பார்க்கிறாள். அங்கு வருகிறான் அவளது சிநேகிதனும் கடையில் வேலை பார்ப்பவனுமான டப்பி. தனது காதலி ஷெர்ரி கர்ப்பமாக இருக்கிறாள் என்றும் அதனை கலைக்க உடனே ஐநூறு டாலர் வேண்டும் என கேட்க, பச்சி தனது உடல் நிலை சரி இல்லாத சகோதரியின் வைத்திய செலவுக்கே பணம் இல்லை என அவனிடம் புலம்ப அவன் அவளிடம் ஒரு பிளானை சொல்கிறான். அதாவது, அந்த கடையை தான் கொள்ளையடித்து பணம் எடுத்து சென்று விட திட்டம் இடுவதாக கூறுகிறான். அதற்காக அவன் கொண்டு வந்துள்ள ரிவால்வரையும் காட்டுகிறான்.போலீஸ் தன்னை தேடிக்கொண்டிருக்கும் வேளையில் தன காதலியை அழைத்து சென்று அவளது கர்ப்பத்தை கலைத்து விட எண்ணி இருப்பதாக கூறுகிறான். அப்போது அந்த டீன் ஏஜ் வாலிபர்கள் வந்து கடையில்
பீர் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். அப்போது அங்கே வருகிறாள் டப்பியின் காதலியான ஷெர்ரி. அவளை அழைத்து தனி அறைக்கு செல்கிறான் டப்பி. அப்போது பச்சி அவனது ரேவோல்வரை எடுத்து தன்னை ஒரு ஜேம்ஸ் பாண்டாக நினைத்து கொண்டு விளையாடிகொண்டிருக்க ரேவோல்வேர் வெடித்து விடுகிறது. பயந்து போன டப்பி பச்சியை திட்டி கொண்டிருக்க, அவனது கோட்டை வாங்கி கொண்டு புறப்படுகிறாள் ஷெர்ரி. அப்போது கல்லாவிலிருந்து பணத்தை திருடுகிறான் டப்பி. பச்சி, கொள்ளை அடிப்பது நிஜம் போல இருக்க வேண்டும் என சொல்லி தனது கையில் சுட சொல்கிறாள். டப்பி அவளது கையில் ஓரத்தில் சுட்டு விட்டு அவளுக்கு மருத்துவ உதவி செய்து அவளை போலிசை அழைக்க சொல்லி விட்டு வெளியேற, பச்சி பொலிசில் பேசி கொண்டிருக்கும்போதே போலீஸ் வந்துவிட மயிரிழையில் தப்பிக்கும் டப்பி, எப்படி அவ்வளவு சீக்கிரம் போலீஸ் வந்தது என குழப்பமடைகிறான். ஷெர்ரி இன் கார் இருக்கும் இடம் சென்று தனக்கு பணம் கிடைத்து விட்டதாக கூற, ஷெர்ரி தன காரில் இருந்து இறங்கி அவனை நோக்கி வருகையில், வேனில் அடிப்பட்டு சாகிறாள். அப்போது மணி
11:14 ஓடி வரும் டப்பி அவள் இறந்து விட்டதை கண்டு வேனை நோக்கி சுட துவங்க, அவர்கள் தப்பிக்க, யாரோ கொடுத்த தகவலின் படி அங்கு வரும் போலீஸ் டப்பியை கைது செய்கிறது. பச்சியும் அதற்க்கு உடந்தை என அவளையும் கைது செய்கிறது.
கதை 5.-------------
இது ஷெர்ரி இன் கதை. நமக்கு எழும் கேள்விகளுக்கு எல்லாம் இந்த பகுதி விடை அளிக்கிறது. முதல் கதையில் ஜாக் யாரிடம் பேசி கொண்டிருந்தான்? ஆரோன் எப்படி இறந்தான்? டப்பி மற்றும் பச்சியை போலீஸ் க்கு போட்டு கொடுத்தது யார் என்பதை நச்சென்று விவரிக்கிறது இந்த பகுதி.
படத்தில் ஏகப்பட்ட கதைகள் முடிச்சிகள் இருந்தாலும் படத்தின் இறுதியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு தெளிவான கதையை நமக்கு புரிய வைப்பது திரைக்கதையின் வெற்றி. படம் முழுக்க நடப்பது ஒரு நாள் இரவு மட்டுமே. எனினும் அதனை படமாக்கிய விதம் நம்மை இங்கு அங்கு என நகர விடாமல் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் கிரேக் மார்க்ஸ். இவரே இந்த படத்தை சிறிதும் தொய்வின்றி எடுத்து செல்ல முழு முதல் காரணம். படத்தின் ஒளிப்பதிவாளர் ஷேன் ஹில்பர்ட் இயக்குனரின் வலது கையாக இருந்து படத்தின் வேகத்திற்கு உதவி இருக்கிறார்.
11: 14 விறுவிறுப்பின் உச்சம்.
படத்தின் முன்னோட்ட காணொளியை காண இங்கே சொடுக்கவும்
--