அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது சட்டசபை தேர்தல். வரலாறு காணாது தேர்தல் குழுவினரின் கெடுபிடிகளால் தங்களது தகிடுதத்தங்களை அரங்கேற்ற கட்சிகள் திண்டாடியதும், எழுபத்தி ஏழு விழுக்காடுகள் வோட்டுகள் பதிவானதும் இதுவே முதல் முறை.வோட்டுக்கு பணம் என்று வோட்டு போடவே லஞ்சம் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது தி மு க. இதனை மற்ற கட்சிகளும் பின் பற்ற துவங்கவே, தனது சாட்டையை சுழற்றியது தேர்தல் கமிஷன். விளைவு கொடிகளும் லட்சங்களும் பிடிபட ஆரம்பித்தன.இதற்க்கு நேர்மையான மாவட்ட கலெக்டர்கள் பலரும் காரணமாக வாக்காளருக்கு லஞ்சம் கொடுக்க பயன் படும் பணம் பிடிபட ஆரம்பித்தன. இவ்வளவு நேர்மையாகவும் அமைதியாகவும், திராவிட கழகங்களின் வருகைக்கு பிறகு நடந்ததற்கான சரித்திர கூறுகள் இல்லை.
திமுகாவின் தேர்தல் அறிக்கையில் ஆரம்பித்த காமெடி தேர்தல் நாள் வரை குறையவில்லை. வோட்டுக்கு பணம் லஞ்சம் தருவது போல, மிக்சி கிரைண்டர் லாப்டாப் என இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டிருந்தன தேர்தல் அறிக்கையில். இலவசங்களும் ஒரு வகை லஞ்சமே என என் யாரும் உணர்வதில்லை. உழைக்காமல் வருவது எதுவுமே லஞ்சம் மட்டுமே என்பதை எப்போது தமிழ் மக்கள் உணர்கிறார்களோ அதுவரை நமது தமிழகம் முன்னேற்றப் பாதையில் அடிபோடுவது சந்தேகமே. திமுகாவை தொடர்ந்து அதிமுகா வும் இலவசங்களை அள்ளி தெளிக்க ஆரம்பித்தது.கவனிக்க நமது தமிழக அரசுக்கு 80000 கோடி கடன் இன்னும் நிலுவையில் உள்ளது. எவன் வீட்டுப் பணத்தை இவர்கள் இலவசமாக அள்ளி கொடுக்கிறார்கள். மக்களின் பணம் தானே. கல்லூரி வரையிலான இலவச கல்வி, இலவச மருத்துவம் கொடுங்கள். அதனை அரசின் பெயரால் கொடுங்கள். எந்த ஒரு தனிமனிதனின் பெயரும் அந்த திட்டத்துக்கு இருக்க கூடாது. வேலை வைப்பு கொடுங்கள் அப்போது தானே தமிழகம் முன்னேறும்.
அதிமுகவுடன் விஜயகாந்தின் தே மூ தீ கா மற்றும் மதிமுக இணைந்தால், தி மு க வெற்றி பெற சான்சே இல்லை என அனைவரும் ஆரூடம் சொன்ன பொது அதனை தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்ளும் கதையாய், மன்னார்குடி குடும்பம் இடையில் புகுந்து தனிச்சையாக நூற்றி அறுபது தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம் அந்த ஆரூடத்தை பாக்க பார்த்தது அதிமுக. துன்ப நாட்களில் துணை இருந்த நண்பன் மதிமுகவை வெளியேற்றிவிட்டு புதிய நண்பனாக விஜயகாந்தை அங்கீகரித்து தனக்கு நூற்றி அறுபது சீட்டுகளை வைத்துக் கொண்டது, தன்னை தேர்தலுக்கு பின் மைனாரிட்டி கட்சி என எதிர்கட்சிகள் சொல்லி விட கூடாது என்ற கவுரவ பிரச்சனையை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.
தனது கட்சியின் வேட்பாளரின் பெயரை தவறாக சொல்ல அதனை திருத்த வந்த வேட்பாளரின் தலையில் அடித்த விஜயகாந்த், அதனை எங்கேயோ நின்று படம் பிடித்து அதற்க்கு சவுண்ட் எபெக்ட் குடுத்து திரும்ப திரும்ப ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் டிவி, அவர் அடிக்கவில்லை என தே மு தி க வேட்பாளர் சொல்ல, அப்பா அடித்தல் என்ன தப்பு என விஜயகாந்த் கேட்க, தேர்தல் காமெடிகள் அளவில் அடங்கா.
தனிப்பட்ட பிரச்சனையை ஊத்தி பெருசாக்க வடிவேலு அரசியலில் இறங்கி தனிப்பட வசை பாடிய காமெடி சிரிப்பை வரவழைக்கவில்லை. அவர் மேல் வெறுப்பை தான் சம்பாதித்து கொடுத்தது. இனிமேல் அவர் திரையில் செய்யம் காமெடிகள் மக்கள் மத்தியில் எடுபடுமா என தெரியவில்லை.
இவர்கள் செய்யும் காமெடிக்கு தான் சளைத்தவனில்லை என காங்கிரசின் தங்கபாலு தன் மனைவியை வேட்பாளராகி, சரியான படிவங்கள் தராமல் தானே வேட்பாளரானது பெரும் காமெடி.தேர்தல் முடிந்ததும் எஸ் வீ சேகர், கராத்தே த்யாகராஜன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை இவர் நீக்கியது உச்சகட்ட காமெடி.
எலெக்ஷன் அன்று, ரஜினியை சுற்றி மீடியா மக்கள் சூழ்துள்ள நேரம் அவர் யாருக்கு ஒட்டு போட்டார் என்பதை துல்லியமாக காண்பித்தது தெலுகு டி வீ சானல் ஒன்று. அதன் மூலம் அவர் ஆளுங்கட்சிக்கு வில்லனாக மாறிப் போனாலும், வரிசையில் நின்று ஓட்டு போடாமல் நேராக ஒட்டு சாவடிக்குள் நுழைய முன்ற த்ரிஷாவை அங்கு வரிசையில் நின்ற ஒருவர் ஆட்சேபிக்க இவர் ஆங்கிலத்தில் திட்ட, நிஜ வில்லியாக மாறிப்போனார் த்ரிஷா. தன்மையாக சொல்லி இருக்க வேண்டும் அவர் கூச்சல் போட்டார் அதனால் நானும் சத்தம் போட்டேன் என்ற விளக்கம் வேறு. அவ்வளவு மனிதர்கள் வரிசையில் நிற்கையில் தான் மட்டும் வரிசை தப்பி போக முயற்சித்ததே தவறு என்பதை அவர் கடைசி வரை உணரவே இல்லை. அவரை விட பெரிய நிலையில் உள்ள, சிவகுமார் குடும்பம், அஜித்குமார் இவர்களை பார்த்து இவர் பாடம் கற்று கொள்ளலாமே.
தனது சுயமரியாதையை விட்டு விட்டு போட்டி இட விரும்பாமல் ஒதுங்கி கொண்ட வை கோவும், தன கட்சி போட்டி இடாமல், காங்கிரசை கருவறுப்போம் என முழங்கிய சீமானும் தான் கௌரவ நடிகர்கள்.
இப்படி ஒரு காமெடி திரைப்படமாக மாறிவிட்ட 2011 சட்டசபை தேர்தலின் ஹீரோ, நேர்மையாக வேலை பார்த்த எலெக்ஷன் கமிஷனும், நேர்மையான கலெக்டர்களும் தான்.
படத்தின் ரிசல்ட் தெரிய நாம் மே 13 வரை பொறுத்திருக்க வேண்டும்.
வாழ்க ஜன நாயகம்.