Wednesday, August 13, 2008

அம்மா என்ற உயிர் எழுத்து...



அன்பு என்றால் அம்மா

ஆறுதல் தருபவள் அம்மா

இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா

ஈகை விளக்கியவள் அம்மா

உயிரைக் கொடுப்பவள் அம்மா

ஊழ் உரைத்தவள் அம்மா

என்னைப் பெற்றவள் அம்மா

ஏணியாய் இருந்தவள் அம்மா

ஐயம் நீக்கியவள் அம்மா

ஒற்றுமை விதைத்தவள் அம்மா

ஓய்வின்றி உழைத்தவள் அம்மா

ஔடதம் ஆனவள் அம்மா..

எஃக்கின் உறுதி அம்மா..

நான் மண்ணில் முளைக்க காரணம் ஆனாய் ..

இன்று எனக்கு ஞாபகம் ஆனாய்..


-- அம்மாவின் நினைவாக...

3 comments:

ஹேமா said...

வாழக்கையின் வழிகாட்டிகள்.
கண்ணுக்குள் வாழும் அன்புத் தெய்வங்கள்.அகர வரிசையில் அசத்தல் முகிலன்.உங்கள் அப்பா அம்மாவுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.தொடருங்கள் இன்னும்.

NILAMUKILAN said...

நன்றி ஹேமா.. மறைந்த அம்மாவின் முதல் வருட நினைவு நாளின் பொழுது எழுதியது. அம்மா எல்லோருக்கும் உயிர் எழுத்து தானே...!

Shravan said...

ஆத்திச்சூடி மாதிரி சிறிய வரிகளில் பெரிய கருத்துக்கள்... அதுவும் உயிரெழுத்துக்களை அகரப்படுத்தி .. அருமையான கருத்தோட்டம்... :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...