உத்தரப்ரதேசத்தின் எல்லையோர கிராமத்தில் வாழ்ந்து வருபவள் கிருஷ்ணா. அவளது கணவனின் சமூக விரோத போக்கு பிடிக்காமல், காவல் துறையிடம் சரணடையுமாறு மன்றாடுகிறாள். அவனும் சரி என மறு அறைக்கு செல்ல அங்கு சிலிண்டர் வெடிக்கிறது.
கலுஜான் மற்றும் பப்பான் இருவரும் திருடர்கள். கலுஜானின் மருமகன் தான் பப்பான். இருவரும் கலுஜானின் மைத்துனனிடம் கொள்ளையடித்து விட்டு, நேபாளின் எல்லையோர கிராமத்துக்கு வருகிறார்கள். அவர்கள் கையில் இரண்டரை லட்ச ரூபாய் பணம். கிருஷ்ணாவின் கணவன் வர்மா தாங்கள் நேபாளுக்கு தப்பி செல்ல உதவி புரிவான் என எண்ணத்துடன் வந்தவர்களுக்கு, சிலிண்டர் வெடித்து வர்மா இறந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். எனினும் அந்த விபத்தில் தப்பித்த கிருஷ்ணா அவர்களுக்கு உதவுகிறாள்.அவர்களது பணம் காணாமல் போக, ஒருவனை கடத்தினால் தங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் என்றும் அதற்க்கு உதவுவதாகவும் கூறுகிறாள் கிருஷ்ணா. மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். இடையே கலுஜான் கிருஷ்ணாவின் மேல் காதல் கொள்ள, பப்பானோ கிருஷ்ணாவின் ஒப்புதலுடன் அவளுடன் கலவி கொள்ள, அந்த மனிதனை கடத்தும் சமயம், கலுஜானுக்கும், பப்பானுக்கும் மோதல் வெடிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொள்ளும் கிருஷ்ணா, அவனை கடத்தி சென்று விடுகிறாள்.
கிருஷ்ணா எதற்கு அவனை கடத்தினாள், கலுஜான் மற்றும் பபபானின் காதல் என்னவானது என்பதை சொல்கிறது திருப்புமுனைகள் பல கொண்ட கிளைமாக்ஸ்.
கிருஷ்ணாவாக வித்யா பாலன், அவரது திரைப்பட வரலாற்றில் நிச்சயம் இந்த படம் ஒரு மைல் கல். இத்தகைய கதாபாத்திரத்தை எடுத்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். அவரது கண்களே படத்தில் பாதி வசனங்களை பேசி விடுகின்றன. அவரும் பப்பானாக வரும் அர்ஷாத் வாசியும் முத்தமிட்டு கொள்ளும் அந்த முழு நீள நிமிடம் பொறி பறக்கிறது.
நாசருதின் ஷாவின் காதலும் பப்பானின் காமமும் கவிதை. 'உன்னுடையது மட்டும் காதல், என்னுடையது மட்டும் காமமா?' (துமாரா இஷ்க் இஷ்க் ஹமாரா இஷ்க் செக்ஸ் ?) என கேட்கும் அர்ஷத் வர்சியின் நடிப்பு அருமை. படத்தின் பெரும் சக்தியே இது போல படம் முழுவதும் வரும் ப்ளாக் ஹ்யூமர் தான்.
விஷால் பரத்வாஜின் போக்குடன் கலந்த கசல் இசை காட்சிகளுகேட்ப படத்துடன் ஊடாடுகிறது. 'டில் தோ பச்சா ஹாய் ஜி ' பாடல் இன்னமும் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிறது.
சிக்கலான கதையை கம்பி மேல் நடப்பதை போல இலகுவாக்கி இயக்கி இருக்கிறார், விஷால் பரத்வாஜின் ஆஸ்தான திரைக்கதை எழுத்தாளரான அபிஷேக் சௌபி. படத்துக்கு பெரும் பலம் மோகன கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு.எந்த ஒரு மிகைப்படுத்தலும் இன்றி ஒளி அமைப்புகள் துல்லியம்.
ஒரு கமெர்ஷியல் சினிமாவுக்கே உரிய கதையை, சினிமாத்தனங்களை வெகுவாக குறைத்து முடிந்தவரை எதார்த்தமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இஷ்கியா...பிடிச்சிருக்கு...
--
8 comments:
தமிழ்ல சுட்டுடுவாங்க.சீக்கிரமா
Thanks for the review.
படம் பார்த்தேன்,பிடித்தது,வித்யாபாலனை தேடிப்பார்க்கிறேன்,நல்ல நடிகை
நல்ல கதையாக இருக்கு முகிலன்.
தமிழில் எடுத்தல் ரசித்துப் பார்க்கலாம் !
நன்றி உங்களுக்கு.
தமிழ்ல சுட்டா இந்த படம் ஓடுமா தெரில. நன்றி செந்தில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
நன்றி அனானி.
நன்றி கீதப்ரியன். வித்யாபாலன் தேர்ந்தெடுக்கும் கதைகள் வித்தியாசமாக இருக்கின்றன.
நன்றி ஹேமா. தமிழில் எடுத்தால் ஓடும் என்பது சந்தேகமே. கதை களன் அப்படி
Post a Comment