நேற்றைய,
பியர் விருந்தின்,
மிச்சங்களை நக்கிவிட்டு
மயங்கிக் கிடந்தன
நடுநிசி நாய்கள்...
குப்பையை கிளறி,
இலைகளின் எச்சங்களை
தேடி கொண்டிருந்தன...
நாளைய மாணவனின்
விரல்கள்...
தம் மக்கள்
சுமை சுமந்து
சோர்ந்து போக..
கட்டணம் கட்டிய
தாயும் தகப்பனும்,
நாளைய மருத்துவனுக்கோ பொறியாளனுக்கோ
தவமிருந்தனர்...
அவர்களின் தந்தையும் தாயும்...
முதியோர் இல்லத்தில்...
பேரனின் வரவுக்கு காத்திருந்தனர்...
காந்திக்கு மாலை இட்ட கையோடு,
தீக்குளித்த தொண்டனின்,
மனைவியுடன்
போன்னாடையோடு
புகைப்படம் எடுத்துக் கொண்டான்...
தலைவன்.
சாலையின் சந்திப்பின் ...
விளக்குச் சிவப்பில்...
இடுப்பில் உறங்கி கிடந்த
குழந்தையை கிள்ளிய பெண்
'சாமீ' என ஆரம்பித்தாள்...
மாலைப் பேருந்தின் மூச்சு திணறலில்,
அவள் புட்டம் உரசும்
மனிதனின் பேரனுக்கு...
நேற்று மூன்றாவது பிறந்தநாள்.
அலுவலக கணினியில்
'சுதந்திரம்'
என கவிதை எழுதினான்
நிகழ் காலக் கவிஞன்.
இப்படியாக...
முடிந்து போனது....
அறுபத்து நாலாவது
சுதந்திர தினம்...
சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
--
1 comment:
:))))
Post a Comment