பல கொடூர, வன்மையான, பயங்கரமான குற்றங்கள் நிகழ்த்தும் குற்றவாளிகளின் மத்தியில், சிரிப்பு திருடன் சிங்காரவேலு போல சில குற்றவாளிகளும் இருக்கவே செய்கிறார்கள். பல நாளிதழ்களில், இணையதளங்களில் காணக் கிடைத்த உண்மை சம்பவங்களின் தொகுப்பு இது.
கோழி மிதித்து(சுட்டு)...
அமெரிக்காவின் மிளுவாக்கி நகரை சேர்ந்தவன் இருபத்தொரு வயது ரிக். ஹாலோவீன் நாள் என்பது, பிசாசுகளுக்காக ஒதுக்கப்பட்ட நாள். அன்றைய தினம் கடைக்கு சென்றிருந்த தன தாயை மிரட்ட திட்டம் போட்டு, கடையில் முகமூடி ஒன்றை வாங்கி வந்து, உடம்பு முழுக்க கருப்பு உடை அணிந்து,உள்ளிருந்து வேறொரு சாவியால் கதவை பூட்டி, தாயை பயமுறுத்த காத்திருந்தான். அவனது தாய் நான்சி தான் வைத்திருந்த சாவியால் வீட்டு கதவை திறந்து உள்ளே வந்து வாங்கிய பொருட்களை பரப்பி அடுக்கி வைக்கும் வரை காத்திருந்தவன் தடாரென தன அன்னை நான்ஸியின் முன் குதிக்க, அலறினாள் நான்சி. 'ஊட்டாண்ட இருக்கறது எல்லாம் சுருட்டிட்டு போக வந்துருக்கேன் ஒழுங்க எல்லாத்தையும் என்னாண்ட குடுத்துரு' என மிரட்ட, நான்சி, சட்டென கிட்செனின் ஒரு டிராவை திறந்து அங்கிருந்த .357 ரிவால்வரை எடுத்து ரிக்கை குறி பார்க்க, கல கலவென சிரித்த ரிக், ஆங்கிலத்தில் 'சுடு சுடு பார்க்கலாம்' என கெக்கலிக்க, நான்சி குறிபார்த்து ரிவால்வரை இயக்க, குறி தவறாமல், ரிக்கின் குறியை பதம் பார்த்தது அந்த புல்லட். ' ஐயோ அம்மா' என (ஆங்கிலத்தில் தான்...) என கதறியபடி ரிக் விழ, உடனே நான்சி 911 எண்ணிற்கு போன் பண்ணி காவலரை அழைக்க, உடனே பறந்து வந்த அவர்கள், முகமூடியை கழட்டிய பின் தான் தனது மகனை சுட்டிருக்கிறோம் என புரிந்தது அந்த தாய்க்கு.
பின்னர் ஆபரேஷன் எல்லாம் செய்து ரிக் பிழைத்துவிட்டான். தாயை ஏமாற்றவே அப்படி செய்தேன் என ரிக்கும், தற்காப்புக்காகவே சுட்டேன் என நான்சியும் கூற யாரும் கைது செய்யப்படவில்லை.
திருடனை போலீஸ் காப்பாற்றிய கதை.
அமெரிக்காவின் டெலவேர் மாகணத்தில் நடைபெற்ற சம்பவம் இது. ஜான் பின்ச் என்ற 44 வயது நபர், ஆளில்லா பங்களாவில் கொள்ளையடிக்க ஒரு சன்னலை உடைத்து உள்ளே நுழைந்திருக்கிறான். அவன் ஏற்கனவே இதே போல உள்ளே நுழைந்து திருடியதால், வீட்டுக்காரன் உள்ளேயும் சாவி போட்டு திறந்தால் மட்டுமே வெளியே வர கூடிய பூட்டை போட்டுவிட்டான்.
வெளியே இருந்து சன்னலை உடைத்து உயரமான இடத்திலிருந்து உள்ளே குதித்த ஜான் வெளியேற முடியவில்லை. உள்ளே இருந்த குட்டி பாரில் வைக்கப்பட்டிருந்த ஜின் வோட்கா என எதையும் விட்டு வைக்காது குடித்திருக்கிறான். மூன்று நாட்கள் உள்ளே இருந்தவன், தட்டு முட்டு சாமான் எல்லாம் போட்டு மேலேறி ஜன்னலை பிடித்த நேரம், அவன் ஏறி நின்ற மேசை, ஸ்டூல் எல்லாம் உருண்டு விழுந்து ஓடியதால், சன்னலை பிடித்து தொங்கியபடி திருடனான அவனே, 911 அழைத்து போலிசை உதவிக்கு கூப்பிடவேண்டிய நிர்பந்தம். அவனை காப்பாற்றிய கையோடு அவனுக்கு விலங்கு போட்டு அழைத்து சென்றனர் போலீஸ் .
--
5 comments:
இந்த மாதிரி செய்திகளை எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்...
இரண்டாவது செய்தி கொஞ்சம் சுமாராகவே இருந்தது... முதல் செய்தி பிரமாதம்... கொஞ்சம் செண்டிமெண்டாகவும் இருந்தது...
மிளுவாக்கி - You mean, Milwaukee - மில்வாக்கி
..... Funny incidents, indeed!
Good that the son got healed. :-)
பிலாசபி இந்த செய்திகள் எல்லாம் செய்தி தாள்களில் சுட்டது தான்.
நன்றி சித்ரா.
Post a Comment