உலகத்தில் பல்வகை குற்றவாளிகள் இருக்கிறார்கள். கொடூரமானவர்கள், உணர்ச்சிவசப் பட்ட நிலையில் குற்றம் செய்பவர்கள், வஞ்சம் தீர்ப்பவர்கள் என. சில குற்றவாளிகள், தாங்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்து மாட்டிக் கொள்வார்கள். சிலசமயம் இவர்களின் குற்றங்கள் நகைப்புக்கு உரியதாகப் போய்விடுகிறது. அவ்வகை குற்றங்களை நாம் நகைச்சுவைக் குற்றங்களாக பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் நடந்த இரண்டு நகைச்சுவை குற்றங்களை இப்போது பார்க்கலாம்.
1. ஆம்புலன்ஸ் திருட்டு.அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணத்தின் லாரன்ஸ் நகரில், ஜாகப் என்பவன் ஒரு வார நாள் இறுதியில் தனது உத்தியோக உயர்வை முன்னிட்டு ஒரு பாரில் சகட்டு மேனிக்கு குடித்திருக்கிறான்.நள்ளிரவை தாண்டிய பொழுதில், பார் மூடும் நேரம் வெளிவந்து பார்க்க டாக்சிகள் எதுவும் கிடைக்காமல் வீட்டுக்கு எப்படி திரும்ப என யோசித்தவன், அருகே விளக்குடன் ஒரு எமர்ஜென்சிக்காக நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வான் டிரைவரை மண்டையில் தான் குடித்த பீர் பாட்டிலால் அடித்து, ஆம்புலன்சை கடத்திக்கொண்டு, குடி போதையிலேயே வீடு சென்ற ஜாகப், ஆம்புலன்ஸ் விளக்குகள் சுழலவிட்டவாறே, வீடு சென்று உறங்கிப் போனான். சிறிது நேரத்தில் வந்து போலீஸ் கை விலங்கிட்டபோது போதை தெளிந்தவன் , தன் வீட்டின் முன்னால் ஆம்புலன்ஸ் எதற்கு நிற்கிறது என போலீசிடம் கேட்டுள்ளான். அவனது உத்தியோகம் பறிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் திருடியது, குடிபோதையில் வண்டி ஒட்டியது மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியது என குற்றங்கள் அவன் மேல் பதிவு செய்யப்பட்டு அய்யா இப்போது சிறையில்.
3 comments:
:-))))
இந்த வினோதங்களையெல்லாம் மேலை நாடுகளில்தான் பார்க்க முடியும்.
நம்மூரிலும் இது போல் இருக்கிறார்கள். ஆனால் அதை போலீசார் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. குற்றவாளிகளுக்கு நகைச்சுவை உணர்ச்சி இருக்கக் கூட்டதா என்ன?!
Post a Comment