அளவற்ற காதலையும், அதனால் விளையும் பெருந்துயரையும் சொல்லும் பிரெஞ்சு காவியம் தான் பெட்டி ப்ளூ. கற்பு கலாசாரம் என்பவர்களுக்கான படம் அல்ல இது. அதையும் தாண்டி வருபவர்கள் மட்டுமே இந்த படத்தை உள்வாங்கி ரசிக்க முடியும். படத்தில் ஏராளமான நிர்வாணங்கள் உண்டு. ஆனால் அது கிளுகிளுப்புக்கானது அல்ல. வாழ்கையின் உண்மைகளை பேச, அந்த காட்சிகள் தேவைப் படுகிறது. இப்படத்தின் முக்கிய காதாபாத்திரங்களான ஜோர்க்(Zorg) மற்றும் பெட்டி (betty) ஆக வாழ்ந்திருக்கும் பிரெஞ்சு நடிகர்களான ழான் அங்க்லாடே(Jean-Hugues Anglade) மற்றும் பீட்ரிஸ் தல்லே (Béatrice Dalle) இருவரும் உயிர் பெற்ற சித்திரங்களாக நம் கண் முன்னே உலவுகிறார்கள். அந்த வெற்றி படத்தின் இயக்குனரான ழான் பீனிக்ஸ் (Jean-Jacques Beineix) கே சேரும்.
ஜோர்க் மற்றும் பெட்டி இருவருக்குமான கலவியில் தான் படமே துவங்குகிறது. ஜோர்க் கிடைத்த வேலைகளை செய்து வாழ்கையை கொண்டாட்டமாக கருதும் ஒரு சாதாரணன்.அவன் வசிக்கும் இடத்தின் அருகே இருப்பவள் பெட்டி. இருவரும் அவ்வப்போது சந்திப்பதாக இருந்து வந்த சமயத்தில், அவளது காதலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஜோர்க் உடன் வந்து தங்கி அவனுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறாள். அவளுக்கு கோவம் வந்தால் என்ன செய்வாள் என அவளுக்கே தெரியாது. ஒருவகையான சைக்கிக் பாரனோயா உடன் இருக்கும் அவளது செய்கைகள், ஜோர்குக்கு பிடித்து விடவே அவளை காதலிக்க ஆரம்பிக்கிறான். கவனிக்க, கலவி முடித்தபின் தான் காதலே ஆரம்பிக்கிறது.
அவனுடைய அறையை ஆராயும் அவள் அவன் எழுதி வைத்துள்ள நாவலை வாசிக்க ஆரம்பித்து, அது உலக புகழ் பெறப்போகும் ஒரு நாவல் என கூற, அதுவரை அதனை ரகசியமாய் வைத்திருக்கும் ஜோர்க் தன நாவலை அவள் ரசிக்க ஆரம்பித்து விட்டால் என்றதும் அவள் மீது அவனது காதல் அதிகமாகிறது.ஜோர்கை, அவனது வீட்டுக்கு சொந்தக்காரன், தனது வேலைகளுக்கு உபயோகித்துக் கொள்கிறான் என்பதை உணர்ந்த பெட்டி, அந்த வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே எரிந்து விட்டு அந்த வீட்டையே கொளுத்தி விட, இருவரும் எதிர்படும் வாகனத்தில் வேறு ஊரு செல்கிறார்கள். பெட்டி இன் ஒரு உறவுக்கார விதவைப் பெண்ணின் வீட்டில் தங்குகிறார்கள். உடைந்து கிடக்கும் பைப்புகளை பழுது பார்க்கும் வேலை செய்கிறான் ஜோர்க். பேட்டியோ, ஜோர்க் எழுதிய நாவலை, இரவும் பகலும் கண் விழித்து டைப் ரைட்டரில் அடித்து அந்த ஊரில் உள்ள புத்தக வெளியீட்டாளர் எல்லாருக்கும் அனுப்புகிறாள்.
இதனிடையே அவளுடைய உறவுக்கார பெண்மணிக்கு ஒரு பணக்காரன் பாய் பிரெண்டாக அமைய, நால்வரும் வாழ்க்கையின் துயரங்களை மறந்து கூத்தடிக்கிறார்கள். அந்த சமயத்தில் அந்த பாய் பிரெண்டின் தாய் மரணிக்க, அந்த துயரத்தில் பங்கு கொள்ள அந்த கிராமத்துக்கு நால்வரும் செல்ல, தன் தாயின் பியானோ கடையை இவர்களுக்கு தந்து தன் தாயின் வீட்டையும் அவன் தர, சொற்கும், பெட்டியும் புதிய வாழ்கையை துவங்குகிறார்கள்.
இதற்கிடையே, எந்த பதிப்பாளரிடமிருந்தும் ஜோர்கின் நாவல் குறித்து தகவல் வரவில்லை. தான் உலகத்தின் சிறந்த எழுத்தாளனாக கருதும் ஜோர்குக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற நினைவு அவளை ஆத்திரத்தின் எல்லைக்கே கொண்டு செல்ல, அந்த ஆத்திரத்தை எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத மனிதர்களிடம் காட்ட துவங்குகிறாள். எரியும் தணலை அணைக்கும் நீரை போல, ஜோர்க் மட்டுமே அவளை புரிந்து கொள்ள முடிகிறது.அவர்களது வெறித்தனமான காதலே அவர்களை கட்டி போட்டு வைக்கிறது. இடையே, பெட்டி கருத்தரிக்க, அந்த குழந்தையும் கருப்பைக்குள்ளே இறந்து போக, பெட்டி தனது ஒரு கண்ணை தானே நோண்டி எடுத்துவிட, அவளை ஆஸ்பத்ரியில் கோமா நிலையில் சேர்க்க, ஜோர்குக்கு ஒரு பதிப்பாளரிடம் இருந்து போன் வருகிறது.
படத்தின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ். ஒவ்வொரு சமயங்களிலும் படத்தின் காட்சிகளுக்கேற்ப வண்ணங்கள் மாறுவது அழகு. பெட்டியாக நடித்திருக்கும் பீட்ரிஸ் க்கு இது முதல் படமாம். அற்புதமான நடிப்பு. ஜோர்க் தனது நிர்வாணத்தை பற்றி கவலை இன்றி நடித்துள்ளார். பல இடங்களில் இவருக்கு நிஜமாகவே பீட்ரிஸ் மீது காதலோ எனும் அளவுக்கு அவர்களுக்கிடையே அற்புதமான செமிஸ்டிரி.
பிலிப் ட்ஜியான் என்பவரின் நாவலே பெட்டி ப்ளூ ஆக திரைப்படம் ஆகி இருக்கிறது.
.
ழான் பீனிக்ஸ் இயக்கத்தில் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. 1987 வருடத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் பல விருதுகளை வென்று இருக்கிறது
.
படம் நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.
பெட்டி ப்ளூ - ப்யூட்டிபுல்
2 comments:
இந்த படத்தை சில நாட்களுக்கு கீதப்பிரியன் சார் எழுதனுதா ஞாபகம்.விமர்சனம் வழக்கம் போல சிறப்பு பாஸ்....நீங்க, ரொம்ப அழகா கச்சிதமாக எழுதி இருக்கீங்க.மிக்க நன்றி.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
நன்றி குமரன். கீதப்ரியன் எழுதிருக்கார் நு நீங்க சொல்லித்தான் அவர் வலைத்தளம் பொய் பார்த்து கமெண்டும் போட்டு வந்தேன்.
Post a Comment