வரலாற்று புத்தகத்தில் படித்திருக்கிறேன். அந்நிய சக்திகளை எதிர்த்து சுதந்திரம் வேண்டி மக்கள் ஒன்று கூடி அகிம்சை போராட்டம் நடத்தினர் என்று. இப்போ நம்ம ஊருகாரங்களை எதிர்த்தே நாம சுதந்திரம் வேண்டி போராட வேண்டி இருக்கு. படிப்பறிவில்லாத மக்கள் தானன்னு நெனச்சி கொண்டு வந்தாங்க அணு உலைய கூடங்குளத்துல. ஆரம்பத்துல இத அங்க உள்ள மக்களும் கண்டுக்கல. ஆங்கங்கே போராட்டம் நடத்தினாங்க, அது எந்த பத்திரிக்கையிலும் வரல. அரசு.. அப்படிப்பட்ட போராட்டமே நடக்கல ன்னு மள மளன்னு கூடங்குளத்துல அணு உலை கட்ட ஆரம்பிச்சாங்க.
அமெரிக்கால பனிரெண்டு வருஷம் வாழ்ந்துட்டு, அணு சக்தியின் தீமைகளை பத்தி பல ஆராய்சிகளும் செஞ்சி ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி உள்ள நாகர்கோயில சேர்ந்த டாக்டர் உதயகுமார் வந்தாரு. மக்களுக்கு அணு உலைகளினால் வரும் தீமைகள எடுத்து சொல்ல... அப்போ தான் மக்களுக்கு அது எவ்ளோ பெரிய அழிவு சக்தி நு புரிஞ்சிது. இதே சமயத்துல சப்பான்ல பூகம்பம் வரவும் அங்குள்ள பூக்குஷிமா அப்டிங்கற நகரத்துல அணு உலைகள் வெடித்து பெரிய சேதாரம் ஆகவும், கூடங்குளத்தை சுற்றி உள்ள மக்கள் முழிச்சிக்கிட்டு போராட்டத்த தீவிரப் படுத்தினாங்க.
கடந்த ஒரு வருஷமா, இவங்க போராட்டத்த ஒரு பொருட்டா நெனைக்காத நம்ம அரசாங்கம், சீக்கிரம் இவங்க போராட்டம் பிசுபிசுத்து போய்டும்னு நெனச்சி சும்மா இருக்க...இந்த போராட்டம் ஒரு மாபெரும் அகிம்சை போராட்டாமா ஒரு வருஷத்துக்கும் மேல... குறிப்பா பெண்கள் குழந்தைகளும் இணைந்து வெற்றிகரமா நடக்க காரணம் டாக்டர் உதயகுமார். அணுஉலை தொறப்பாங்க நமக்கு மின்சாரம் கெடைக்கும், டி வீல சீரியலும் கிரிக்கட் மாச்சும் பாக்கலாம் நு ஜொள்ளு விட்டு திரிந்த கூட்டத்துக்கு அங்க பாதிப்புக்கு பயப்படற மக்களை பத்தி எதுக்கு கவலை? ஒடனே உதயகுமார் அமெரிக்கா கிட்ட பணம் வாங்கிட்டான், ஒன்னும் தெரியாத மக்களை ஏவி புடறான் அப்டின்னு ஆளாளுக்கு பத்த வைக்க ஆரம்பிச்சாங்க. அமெரிக்காவோட அணு ஒப்பந்தம் போட்ட
அப்புறமா தான் இந்த அணு உலை ஆரம்பிச்சாங்க நு அந்த மடபசங்களுக்கு புரியவே இல்ல.அவனுக்கு மக்கள் எக்கேடு கேட்டு போனா என்ன? அவனுக்கு கறன்ட் வேணும்.
அணு உலை ஆரம்பிச்சப்பரம் ஒடனே கறன்ட் வந்துருமா? தேவையான கரண்ட் கடச்சிருமா? இல்ல. ஆனா எதாச்சும் ஒரு பேரழிவு வந்தா... அணு உலை இருந்த இடத்தின் சுற்று புறத்த முழுக்க தாக்கி, வருங்கால சந்ததிகள மிகப் பயங்கரமா பாதிக்கும் நு இவனோட சின்ன அறிவுக்கு புரிய மாட்டேன்குது. ஏன்னா அவன் அந்த சுற்று புறத்துல இல்ல. இவன் சென்னைல இருப்பான், இல்ல துபைல இருப்பான் இல்லாங்காட்டி அமெரிக்காவுல இருப்பான். அவன பொய் இடிஞ்ச கரைல இல்ல கூடன்கொளத்துல
போய் வாழ சொல்லுங்க. அங்க இருந்து எழுதட்டும் இப்படி.
சில பதிவர்கள் எழுதறாங்க, மக்களோட அச்சத்தை போக்கணும்னு. என்னமோ இவங்களுக்கு அணு உலை பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதிரியும், அங்க இருக்கற மக்களுக்கு தான் அணு உலை பத்தி ஒன்னும் தெரியாம பயப்படறாங்க அப்டின்னும் நெனச்சிட்டு.. அணு உலை பத்தி மக்களுக்கு இருக்கற அச்சத்தை போக்கனுமாம். இவங்கள விட, அணு உலைகள் பத்தியும் அதோட ஆபத்துகள் பத்தியும் அந்த மக்களுக்கு தான் ரொம்ப தெரியும்னு இவங்களுக்கு தெரியாம கண்டபடி எழுதிபுடறாங்க.
பதினாலாயிரம் கோடி செலவு பண்ணினப்பறம் எப்படி அதை கை விட முடியும் நு சிலர் பொலம்பறாங்க. ஒரு லட்சம் கோடி ஊழல் பண்ணவன் இருக்கான். எழுவதாயிரம் கோடி ஊழல் பண்ணவன் கொழுத்து பொய் கெடக்கான். கோடிகள்ள கட்டப்பட்ட தலைமை செயலகம் இந்தம்மாவோட கர்வத்தால, தலை தெரிச்சதனதால பாம்புகள்
வந்து பூட்டி கெடக்குது. மக்களோட வாழ்வாதரத்தோட, உயிரோட விளையாடக் கூடிய அணு உலை மூடினா கொறஞ்சா போய்டும்?
சேது சமுத்திர திட்டம் நு ஒன்னு கொண்டு வந்து பல்லாயிர கோடிகள் செலவு பண்ணதுக்கு அப்பறம், இந்து மத சமுதாயத்தின் மனதை புண் படுத்தும் படி நடந்துக் கொள்ளக் கூடாது நு நிறுத்தினான்களே, அதனால என்ன பலன்? மக்களுக்கு என்ன ஆதாயம்? ஒரு வருஷமா, அரசுக்கு எந்த பாதிப்பும் வராம அகிம்சை வழில போராட்டம் பண்ண மக்களை, அந்த கள்ள போலிஸ் ராஜேஷ் தாஸ் உசுப்பேத்தி உசுபேத்தி
லட்டிய சொழட்டி
ரணகளம் ஆக்கிட்டாயங்க அதுல ரெண்டு உசுரு போய்டுச்சே, அடக்குமுறைல மக்களை அடக்கிற முடியுமா? இதை இன்னொரு சுதந்திரப் போராய் தான் பாக்க வேண்டி இருக்கு. அடக்க அடக்க வெகுண்டு எழுந்து மக்கள் சக்தி என்னன்னு காட்டிட்டு இருக்காங்க இடிந்த கரை மற்றும் கூடன்குள மக்கள்.
உள்நாடு வெளிநாடு என அனைத்து மக்களையும் அணு சக்திக்கு எதிராக ஒன்றிணைக்கற ஒரு போராட்டமா இந்த போராட்டம் வளந்துட்டு வருது. இதை தன்னோட இரும்புக்கரம் வச்சி அமுக்க, ஒடுக்க மத்திய மாநில அரசு முயற்சி செஞ்சிட்டு வருது. மத்திய அரசான காங்கிரசுக்கும், இன்றைய முந்தய மாநில அரசுகளான திராவிட அரசுகளுக்கு சாவுமணி அடிச்சாச்சு. இன்றைய தமிழகத்தில் வை கோ மட்டுமே மக்களுக்காக போராடும் ஒரு அரசியல் தலைவனா தெரியறாரு. வேறு எந்த பெரிய கட்சிக்கும், ஒட்டு கேட்டு வர கூட தகுதி இல்லை மக்கள் தங்களது விளக்குமாறுகளை தீட்டிட்டு தான் இருக்காங்க. இப்போ தன்னோட சொத்து விவரத்த பப்ளிக்கா அறிவிச்சிருக்காரு உதயகுமார். இவ்ளோ வெளிப்படையா இருகறவர மக்கள் நம்பாம இருப்பாங்களா...?
அமெரிக்கால பனிரெண்டு வருஷம் வாழ்ந்த உதயகுமார் தான்
அமெரிக்கால பனிரெண்டு வருஷம் வாழ்ந்த உதயகுமார் தான்
இந்த நூதன, சாத்வீக, கட்டுகோப்பான போராட்டத்தை முன்னின்று நடத்திட்டு வரார். எவனும் இனிமே, அமெரிக்கால ஐரோப்பால பீசா பர்கர் சாப்பிடறவன் நாட்டப் பத்தி பேசக்கூடாதுன்னு எழுதவோ பேசவோ முடியாது. கடல் தாண்டி வாழ்ந்தாலும் தமிழன் உயிர்காக்க புறப்பட்டிருக்கும் உதயகுமாரன்கள். கடலலைகளை போல ஆர்ப்பரிக்கும், அந்த கடல் மாந்தர்களையும் அவர்களை ஒருங்கிணைத்து செல்லும் உதயகுமாரன், புஷ்பராயன் போன்றவர்களையும் வணங்குகிறேன்.
ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ எப்போதும், இல்லாத ஒரு வாய்ப்பு நமக்கு இருக்கிறது அது, சூரிய ஒளி. ஒவ்வொரு இடத்துக்கும் சோலார் சக்திகளை சேமித்து மின்சார தயாரிப்பை நாம துவக்கணும் அதை கூடங்குளத்துல இருந்தும், இடிந்த கரையில் இருந்தும் நாம ஆரம்பிச்சு வைப்போம்.
வேண்டாம் அணு உலை.. அது நமது உயிருக்கு உலை.
No comments:
Post a Comment