Friday, April 9, 2010
கிளைமாக்ஸ் கதைகள்-2 மல்லிகா..ஓ மல்லிகா..
கோவையில் அன்று இரவு..ராகவனும் கனகாவும் கட்டிலில் படுத்திருந்தனர்.
மின் விசிறி ஓடி கொண்டிருந்தாலும் வேர்த்துக் கொட்டியது.
'எனக்கு மல்லிகாவ நெனச்சா கவலையா இருக்கு. இவ்ளோ வயசாகியும் அவ பண்ற ரகளை தாங்க முடியல' ராகவன் கவலையோடு பேசினான்.
'போன மாசம் கூட பாரு, அவ ஸ்கூல்ல படிக்கற ராஜீவ அடிச்சிட்டா. அந்த பையனோட அப்பா பிரின்ஸ்பால் கிட்ட கம்ப்ளைன் பண்ணி இவள சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க'
'ஸ்கூல்ல சேந்து ஆறு மாசம் தான ஆகறது. போக போக சரி ஆய்டும்' என்றாள் கனகா.
'எப்போ பாரு ஸ்கூல்ல இருந்து எதாச்சும் பிரச்சன பண்ணிட்டு வந்துடறா.ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் அவ மேல..'
'ஸ்கூல் நா அப்படி தான் இருக்கும். '
'ஸ்கூல் விட்டா சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டியது தான.. அவ வீட்டுக்கு போறேன் இவ வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு ரொம்ப லேட்டா வீட்டுக்கு வரா..'
' அவளுக்கும் பிரெண்ட்ஸ் இருக்க கூடாதா'
'பக்கத்துக்கு வீட்டு மாலதி கூடையும் சண்டை.'அன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வரேன்.. ரெண்டு பெரும் முடிய புடிச்சிட்டு நிக்கறாங்க. சமாதனம் பண்றதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆய்டுச்சி.'
'அவ மல்லிகா கிட்ட என்ன பிரச்சனையை பண்ணினாளோ..?'
'அவ பிரச்சனையை பண்ணினா என்ன. இவ அடங்கி போகலாம்ல.அவளுக்கு ரொம்ப கோவம் வருது. இந்த வயசுல இந்த அளவுக்கு கோவம் வரகூடாது. கைல கெடைக்கறத தூக்கி அடிக்கறா..'
'நீங்க தான் கொஞ்சம் பொறுமையா இருக்கனும்' என்றாள் கனகா.
'நீ எப்போ பாரு அவளுக்கே சப்போர்ட் பண்ணு. பெரியவங்கள எதுத்து பேசறா. எங்க அம்மாக்கு கூட மரியாதை குடுக்க மாட்டேன்கறா. இத எப்படி மாத்தறதுன்னு தெரில.'
'எல்லா பொண்ணுகளும் இப்போ அப்படி தான் இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க'-கனகா.
'இப்போ கூட சம்மர் வக்கேஷனுக்கு சென்னை போகணும்னு ஒரே அடம். சரி அவ ரகளை கொறஞ்சா சரின்னு அனுப்பி வச்சிட்டேன்.'
' அவ கேட்டான்னா ஒடன அனுப்பி வச்சிடிங்களே.அது அவளுக்கு குடுக்கற செல்லம் ஆகாதா..?.' கேட்டாள் கனகா.
'எப்படியோ அவள் ரகளை கொறஞ்சி நாம நிம்மதியா இருந்தா சரி.' என்றான் ராகவன்.
'சரி எனக்கு நேரம் ஆய்டுச்சி. குடுக்க வேண்டியது குடுத்தா நான் கெளம்பிட்டே இருப்பேன்' உடைகளை அணிந்தபடி கூறினாள் கனகா.
ராகவன் எழுந்து தனது பர்சில் இருந்து ரூபாய்களை எண்ண ஆரம்பித்த அதே நேரம், கோவை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறியபடி பள்ளிகூடத்தில் ஆறு மாதங்களுக்கு முன் டீச்சராக வேலைக்கு சேர்ந்த ராகவனின் மனைவி மல்லிகா தனது அப்பா அம்மாவுக்கு 'டாடா' சொல்லிக்கொண்டிருந்தாள்.
--
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
:)))))
Post a Comment