Monday, June 28, 2010
செம்மொழி மாநாடு...வீணடிக்கப்பட்ட கோடிகள்!
செம்மையாக நடந்து முடித்திருக்கிறது, செம்மொழி மாநாடு... கிட்டத்தட்ட முன்னூத்தி ஐம்பது கொடிகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டுக்காக பல்லாயிரம் மரங்கள், கோவை நகரில் வெட்டப்பட்டுள்ளன.பல லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டுக்கு வந்து 'தமிழை வளர்த்துள்ளனர்'.
எதற்காக இந்த மாநாடு? இந்த மாநாட்டினால் என்ன பயன்? கவியரங்குகளும் பட்டிமன்றங்களும் 'தலைவனை' துதிபாடியே துவங்குகின்றன... மாநாடு செம்மொழிக்கா? அல்லது செந்தலைவனுக்கா..? மூத்த குடும்பத்தின் பணத்தில் செம்மொழி மாநாட்டை ஒட்டி கொடிகளில்கோவையில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்பது உடன்பிறப்புகளுக்கு தெரியாமல் போனதோ?
இலங்கை போரில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் நடுவே சிக்கி சின்னா பின்னமாகி குற்றுயிராய் கிடக்கும் தமிழர்கள் இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் போனதே. அங்கு ஒரு வேளை சோற்றுக்கு சிங்கி அடிக்கும் தமிழர்கள் இருக்க.. இங்கோ ஏற்கனவே வளர்ந்து விட்ட செம்மொழியான தமிழ் மொழிக்கு எதற்கு இவ்வளவு செலவில் ஒரு மாநாடு? போரினை நிறுத்த தவறிய தலைவனின் பாவ மன்னிப்பா? தமிழுக்கும் தமிழனுக்கும் செம்மொழி மாநாடு நடத்தி தான் தலைவனின் தமிழ் பாசத்தை உலகுக்கு உயர்த்த வேண்டுமா? தமிழனை காப்பாற்றினால் தானே தமிழை காப்பாற்ற முடியும்? தமிழர்கள் எல்லாம் இறந்துவிட்டால், தமிழ் பேச தலைவன், குடும்பம் தானே எஞ்சும்.
தமிழகத்தில் இருந்தால் மட்டும் தான் தமிழனா? அயல்நாட்டில் இருக்கும் தமிழன் தமிழன் இல்லையா?
அயல்நாட்டில் இருக்கும் தமிழ் மகன்கள்.. பர்கரும் பீசாவும் உண்டு தான் உயிர் வாழ்கின்றனரா? அவர்களுக்கு தமிழ் பற்றி பேச அருகதை கிடையாதா? தமிழகத்தில் எவரும் பர்கரும் பீசாவும் உண்பதில்லையா?. தமிழகத்தில், இருக்கும் தமிழனை விட அயல்நாட்டில் இருக்கும் தமிழனுக்கு தனது மொழியின் மேல் பற்று சற்றும் குறைந்தது இல்லையே. தமிழகத்தில் தனது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசும்படி பணித்து கொண்டிருக்கிறார்கள் பெற்றோர். அயல் நாட்டில் தனது குழந்தைகள் தமிழில் பேசவேண்டும் என கவலை படுகிறார்கள்.
தலைவன் தனது தமிழ் தாகத்தை முன்னூற்றைம்பது கோடி கொடுத்து தீர்த்து கொண்டிருக்கிறார். மூன்று வேளை சோறில்லாமல் பட்டினி கிடக்கிறது தமிழனின் குடும்பம்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் இருக்கட்டும். தமிழிலேயே பெயர் பலகைகள் வைக்கவேண்டும் என்ற அதிகாரம் இருக்கட்டும். முதலில் தனது பேரன்களின் 'ரெட் ஜெயின்ட் மூவீஸ்' மற்றும் 'கிளௌட் நயன் மூவீஸ்' என்ற ஆங்கில கம்பெனி பெயர்கள் மாறட்டும். தலைவன் தமிழை தனது வீட்டிலிருந்து முதலில் வளர்க்கட்டும்.
செம்மொழி மாநாட்டால், கோவை நகருக்கு நல்ல சாலைகளும், ஏ ஆர் ரகுமானின் 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற நல்ல பாடலும் தான் மிச்சம்.
--
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//போரினை நிறுத்த தவறிய தலைவனின் பாவ மன்னிப்பா?//
முகிலன் நினைக்கிறீர்களா நீங்கள்.
நம் மொழியின் மூதாதையரிடம் இருந்துகூட மன்னிப்புக் கிடைக்கும் என்று !
இது தொடர்பான நினைவுப் பதிவொன்று போட்டிருக்கேன் பாருங்களேன்.
http://santhyilnaam.blogspot.com/
350 கோடியை நாளுக்கு ஒரு கோடியென தமிழ் மண்ணின் வளத்திற்குச் செலவளித்திருந்தால் ...தமிழன்னையோடு தமிழ் மண்ணும் சேர்ந்து வாழ்த்தியிருக்குமே
இதற்க்கு ஆறு கோடி மெட்ராஸ் டமிலர்கள்(தமிழர்களை சொல்லவில்லை )
பத்து லச்சம் பேரு வந்தார்களாம் !!!!!!!!!!இதில் வெளி நாட்டு டமிலர்கலும்
வந்தார்களாம் ,எப்படி இவர்களை தமிழர்கள் என்று சொல்லுவது.si na manian.
pl check this news to know how Tamil scholars are treated in TN . High court has slammed the GOVT .
Read this .http://www.vikatan.com/news/news.asp?artid=3803
நண்பரே,
நலமா?
நீண்டநாட்களாய் பின்னூட்டவேண்டும் என நினைப்பேன்,பெட்டி வேலைசெய்யாது,மெய்யான உள்ளக்குமுறல் பதிவில் வெளிப்பட்டிருக்கிறது!!!
மக்களுக்கு இலவசம் தந்தே கெடுத்து வைத்துள்ளனர்.யாரும் வீணாகும் கோடிகளைப்பற்றி கவலைப்படப்போவதில்லை,
இன்னும் மேலே போய் அண்டை மாநிலத்தில் உள்ள அவலத்தையும் இங்கே உள்ளதையும் ஒப்பிட்டு அட்டவணை கொடுப்பார்கள்.கொடுமை!!
மீண்டும் பிடித்த படத்துக்கு திரை விமர்சனம் எழுத ஆரம்பியுங்கள் நண்பரே
உண்மை தான் ஹேமா. நினைக்க நினைக்க மனம் பதை பதைக்கிறது...
சந்தி நிலையம் சென்று பார்த்து அங்கு பின்னூட்டம் இட்டிருக்கிறேன் ஹேமா.
350 கோடியில் என்னனமோ செய்திருக்கலாம் கோமா. இன்னொன்று தெரியுமா...பல கோடிகள் கொடுத்து கோவை நகரில் பெரிய மால் ஒன்றை தளபதி வாங்கி போட்டிருக்கிறார். அவ்வளவு பணம் ஏது என கேட்டால் என்னிடம் விடை இல்லை.
நீங்கள் சொல்வது சரிதான். ரஜினிகாந்த் ஒருமுறை தூர்தர்ஷனில் தமிழ் பேசும் அனைவரும் தமிழர்களே என சொன்னது நினைவுக்கு வருகிறது.
இணைப்புக்கு நன்றி கஸ்தூரி.
இலவசங்கள் எல்லாம் இங்கிருந்தே பிடுங்கப்பட்டது என மக்கள் அறிவதில்லை. வாங்க கீதப்ரியன். நானும் விடுமுறை எடுத்து விட்டதால் பல நாட்களாக இணையத்திற்கு வரஇயலவில்லை.
Post a Comment