நியூ யோர்க்கின் ஜ எப் கே விமான நிலையம்.
ஐரோப்பிய பயணம் என்பது எனது சிறுவயது கனவாகவே இருந்தது. நான் அமெரிக்காவில் வசித்தாலும் எப்பொழுதும் ஐரோப்பாவில் அதுவும் குறிப்பாக சுவிஸ் நாட்டில் பயணம் கொள்ள வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவாவாக இருந்தது. அதற்க்கு எனது எம் பி ஏ படிப்பு உதவியதற்காக அதற்க்கு ஒரு வந்தனம்.சுவிஸ் நாட்டில் இருக்கும் ஒரு கல்லூரியில் நான் எம். பி ஏ சேர்ந்ததற்கு காரணம், ஒரு சப்ஜெக்டுக்கு நான் அங்கு சென்று ஐந்து நாட்கள் பயில வேண்டும் என்ற காரணமும் ஒன்று. எனது பயண திட்டம் ஆறு மாதங்களுக்கு முன்னரே துவங்கி விட்டது. சுவிஸ்சில் எங்கு தங்குவது, எப்படி பயணப் படுவது என.
முதல் நான்கு நாட்கள் முழுக்க சுவிஸ்ஸை சுற்றிப் பார்ப்பது, அடுத்த ஐந்து நாட்கள் எம் பி ஏ படிப்பிற்கு, அடுத்த நான்கு நாட்கள் ஆஸ்திரியாவை சுற்றிப் பார்ப்பது என முடிவானது. முதல் நான்கு நாட்களுக்கு சுவிஸ்சில் எங்கெங்கு சுற்றிபார்ப்பது என ஒரு அட்டவணை தயாரித்தோம். ஐரோப்பிய பயணத்துக்கு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி முதல் செப்டம்பர் மாத நடுவாந்திர நாட்கள் வரை பயணம் செய்வது சிறந்தது என கண்டோம். அப்போது பயணச் சீட்டின் விலையும் குறைவாக இருக்கிறது. சீதோஷ்ண நிலையும் அங்கு கடும் வெயிலும் கடும் குளிரும் இல்லாத ஒரு இலகுவான நிலையில் இருப்பதை பழைய பருவ நிலைகளை வைத்து ஒப்பிட்டு அப்போது செல்வது என முடிவாயிற்று.முதலில் விமானத்தில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தோம்.
ஜூரிச் நகரம். பறவையின் பார்வையில்...
அந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதி நாளில் மாலை ஐந்தரை மணி அளவில் அமெரிக்காவின் பால்டிமோர் விமான நிலையத்தில் டெல்டா விமானத்தில் துவங்கியது அந்தக் கனவுப் பயணம். நியூ யார்க் சென்று சேரும்போது மணி ஏழரை. அங்கிருந்து அடுத்து சுவிசின் பெருநகரமான சூரிச் க்கு இரவு பத்தரை மணிக்கு தான் புறப்பாடு. நியூ யார்க்கின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தை 'தி டெர்மினல்' என்ற ஆங்கிலப் படத்தில் பார்த்தது. அது தான் எனக்கு முதல் தடவை. மிகப்பெரிய விமான நிலையம். அங்குள்ள வணிக வளாகங்களை சுற்றி சோர்வடைந்து பத்து மணிக்கு அந்த பெரிய விமானத்தில் ஏறி அமர்ந்தோம். சரியாக பத்தரை மணிக்கு எங்களை சுமந்தபடி வானில் எழும்பியது அது டெல்டா விமானம். என் மகன் அவனது இருக்கையின் முன்னால் இருந்த தொடு திரையில் விரல் வைத்து விளையாட ஆரம்பித்தான். பணிரெண்டு மணி அளவில் விமானப் பணிப்பெண் வந்தளித்த ஸ்பினாச் பாஸ்தாவை வாயில் வைக்க முடியவில்லை. இருந்தாலும் இருந்த அகோர பசியில் தின்று தீர்த்து உறங்கிப் போனோம்.
காலையில் கண் விழித்த பொது சுவிஸ் நகரத்தின் மேல் பறந்து கொண்டிருந்தோம். பூமியில் தெரிந்த மலைகளும், குளங்களும் ஆறுகளும்.. இது வேறு நகரம் என உணர்த்திக் கொண்டே இருந்தது.
ஆல்ப்ஸ் மலை.. ஒரு பறவையின் பார்வையில்...
நான் கண்ட கனவு என் கண்முன்னே நனவாக விரிந்து கொண்டிருந்தது. பரந்து விரிந்திருந்த சின்ன சின்ன மலை தொடர்களும், ஏரிகளும்.. பச்சை பசேல் புல்வெளிகளும் என விரிந்த பூமியின் வரைபடத்தில், தொடுவானம் முடிகிற தொலைவில் ஒரு மலை முகடுகளில் கொட்டி வைத்த ஐஸ் கிரீம் போலத் தெரிந்த ஆல்ப்ஸ் மலை பரவசப் படுத்தியது. பூமியில் நாங்கள் ஒரு சொர்க்கத்தை காணப் போகிறோம் என்ற ஆவல் எங்களை உந்தித் தள்ளியது.
சூரிச் விமான நிலையம்.
விமானம் தரையை தொட்டதும் உள்ளிறங்கி நடந்தோம். இம்மிக்ராஷனில் எந்த கேள்வியும் கேட்கவில்லை. விசா இருக்கிறதா என பார்த்து விட்டு 'வெல்கம் டு சுவிட்சர்லாந்த்' என கூறி அனுமதித்தார்கள்.
விமான நிலையத்தில் தான் எங்களுக்கு முதல் ஆச்சர்யம் காத்திருந்தது!
--
7 comments:
முகிலன்...உங்க கனவு நிறவேறிடிச்சு.நான்தான் உங்களைப் பார்க்கமுடியாமல் போச்சு.இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும்.பயணத்தொடரில் சுவர்க்க பூமியின் ஆரம்பப் படங்களே அழகாயிருக்கு !
i feel that i travelling with u.
Is this the place where 80 Lakh Crores of Indian money is hidden? Fantastic.
வாங்க ஹேமா. ரொம்ப நாளாச்சி. உங்கள சந்திக்க முடியாமல் போனது வருத்தம் தான். அடுத்தமுறை நிச்சயம் சந்திப்போம். உங்கள் கருத்துக்கு நன்றி.
நன்றி ராஜகமல். இன்னும் உங்களை வெகுதூரம் கூட்டி செல்ல இருக்கிறேன்.
ஜெயதேவ இந்தியப் பணம் மட்டும் அல்ல. உலகில் உள்ள அனைத்து கள்ளப் பணங்களும் இங்க தான் இருக்கு.
இனிய நினைவுகளைக் கிளப்பி விட்டது உங்கள் பதிவு. ஸ்விட்சர்லாண்ட் போல ஒரு அமைதியான இடத்தை என் வாழ் நாளில்பார்த்ததில்லை. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். சூரிக் விமான நிலைய காஃபிஷாப்பில் மிக நல்ல காஃபி கிடைக்குமே ருசித்தீர்களா.
Post a Comment