நித்தியானந்தர்...இந்த பெயர் தான் இப்போது பத்திரிகை,தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களுக்கும் தலைப்பு செய்திகளை அள்ளித் தருகிறது. எவ்வளவோ காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த நித்யானந்தாவின் ஆட்சிபீடம் இப்போது அஸ்திவாரத்தோடு ஆட்டம் கண்டு கலகலத்து பொய் நிற்கிறது. அனால் இப்போதும் அதே மாறா புன்னகையுடன் ஆசி வழங்குகிறார் நித்யானந்தா.
நித்யானந்தா என்ற மனிதன் யார்? எப்படி அவருக்கு இவ்வளவு புகழும் சொத்துகளும் சாத்தியமாயின?அவரது சீடர்களோ, மெத்த படித்த மேதாவிகள். மருத்துவர்கள், பொறியாளர்கள், அயல்நாட்டு பக்தர்கள், இன்று அவரது தற்கொலை படையாக, இன்று அவர் இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பின்பும் அவருக்கு அரணாக நின்றுகொண்டிருப்பது மிகுந்த ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். தனது குடும்பத்தை, தனது வாழ்க்கையை,தனது கல்வியை உதறிவிட்டு நித்யானந்தாவின் பின்னே அணிவகுத்து நின்றவர்களின் நிலை தான் இன்று பரிதாபம்.
பொதுவாக துறவறத்தில் இருப்பவர்கள், தங்கள் பொதுவாழ்வில் கறை வந்துவிட்டால், அமைதியாக ஓட்டுக்குள் சென்றுவிடுவார்கள். தங்களது கறைகளை களைந்து தங்களை நிரபராதி(நிரபராதியாக இருந்தால்...) என நிரூபிக்கும் வரை , மீடியா வெளிச்சங்களில் இருந்து விலகி இருக்கவே விரும்புவார்கள். உதாரணமாக. சங்கர ராமன் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்ட ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர், ஒரு கன்னியாஸ்திரியை கற்பழித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட செயின்ட் ஜோசெப் கல்லூரி முதல்வர் ராஜநாயகம் போன்றோரை சொல்லலாம். ஆனால் நித்யானன்தரோ, முன்னை விட இப்போது தான் டார்லிங் ஆப் தி மீடியா வாக வலம் வருகிறார்.
கமெராவில் பதிவு பண்ணப்பட்ட வீடியோ டி வீயிலும் பத்திரிக்கை மூலமாகவும் வெளி வந்தபோது எங்கோ பொய் பதுங்கி கொண்டவர் அங்கிருந்தபடி, தான் சமாதி நிலையில் இருந்ததாகவும் அப்போது நடந்தது எதுவும் தனக்கு தெரியாது எனவும் சொன்னார். பின்னர் அது தவ வழிபாட்டில் ஒரு
வழி என்றும் சொன்னவர், ஆட்சி மாறியபின் அடிக்கடி
பத்திரிக்கையாளர்களை அழைத்து பிரஸ் மீட் வைக்கிறார். அந்த சீ டீ பொய் என்றும் மார்பிங் செய்யப்பட்டது என்றும், அது தனது அறையே அல்ல என்றும் பெட்டி கொடுக்கிறார். அந்த பேட்டிகளில் ஒரு துறவி போல பேசாமல், 'தூ' என துப்புகிறார். 'டம்மி பீசு.. காமடி பீசு' என்று சினிமா டயலாகுகள் அவிழ்த்து விடுகிறார். தன்னை பற்றி தவறாக பேசிய ஜெயேந்திரர் மீது வழக்கு போடுவேன் என மிரட்டுகிறார், மதுரை ஆதீனத்தில் தான் பொறுப்பு ஏற்ப்பதை எதிர்க்கும் மற்ற ஆதீனங்களை, தங்களது சீடர்கள் அவர்களது ஆதீனங்களின் முன்னே போராட்டம் செய்வார்கள் என மிரட்டுகிறார். கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை 'தூக்குடா அவனை' என கத்தி தனது சீடர்களை தாக்க சொல்ல அவர்களும் தாக்குகிறார்கள். உச்சகட்டமாக இப்போது ஆர்த்தி ராவ் என்னும் பெண்மணி நித்யானந்தரின் மீது புகார் சொன்னதும்
நித்யானந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட, அவர் சிறையில் இருந்தபடியே கர்னாடக அரசின் மீது மான நஷ்ட வழக்கு பத்து கோடிக்கு போடுகிறார்.
சிறுவயதில் நித்தியானந்தா (நடுவில்).
துறவி என்பவர் யார்? முற்றும் துறந்தவனை தான் துறவி என்பார்கள். மற்றவர்களுக்கு சேவை செய்பவர்களை துறவி என்பார்கள். உதாரணமாக சத்யா ஸ்ரீ சாய்பாபா(புட்டபர்த்தி சாய்பாபா அல்ல), அன்னை தெரேசா, யோகி ராம்சுரத் குமார், என பலரை உதாரணம் கூறலாம். தன்னை துறவி என்று சொல்லிக் கொள்ளும் நித்யனந்தாவுக்கு எதுக்கு தங்கத்தில் மகுடம்? எதற்கு தங்க பல்லக்கு?
புத்தன் ஊருக்கு எல்லாம் உழைத்து மக்களுக்கு ஞானம் வழங்கினான். அவன் காசு எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. புத்தனின் சீடர்கள், பிச்சை எடுத்து தான் உண்டார்கள். நித்யானந்தர் எவ்வளவு காசு வாங்குகிறார் தெரியுமா? பொதுமக்களுக்கு என்ன சேவைகள் செய்துள்ளார்? புட்டபர்த்தி சாய்பாபா சமூக செயல்கள் பலவையும் செய்துள்ளார். அவரை மந்திரவாதி என பலர் விமர்சனங்கள் வைத்தாலும், மக்களுக்கு அவர் தனது சீடர்கள் மூலம் சேவை செய்துள்ளார், வீராணம் குழாய்களை தமிழகத்துக்கு அமைத்து கொடுத்ததுக்கு சாய் பாபாவின் அறக்கட்டளை பெரும் பங்கினை ஆற்றி இருக்கிறது. நித்யானந்தரின் ஆஸ்ரமம் என்ன சமூக தொண்டு ஆற்றி இருக்கிறது. ஆசிரமத்தின் பணம், ஒரு கார்பொரேட் கம்பனியின் வல்லுனர்வுடன் பல தேசங்களில் கிளைகளை திறந்து ஆன்மிக வியாபாரத்தை விருத்தி செய்து மேலும் காசு பார்த்ததே தவிர ஆன்மிகத்தை சேவையாக செய்யவில்லை.
பல நூறு கோடி சொத்துக்களை வைத்திருந்தபோதும், மதுரை ஆதீனத்தின் மேல் நித்யானந்தருக்கு ஏன் அப்படி ஒரு அதீத மோகம்? தனக்கு அந்தப் பதவி கிடைக்காமல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் எதிர்ப்பவர்களை எல்லாம் எதற்கு தாக்கவும், வழக்கு போடவும், மிரட்டி பேட்டி கொடுக்கவும் செய்யவேண்டும்? அவர்களது சீடர்கள் எல்லாம் யார்? எந்த ஸ்டேடஸ் இல் இருந்து வந்தவர்கள்? அமைதியை நாடித்தானே சாமியார்களை நோக்கி வருகிறார்கள்? அவர்கள் எப்படி சாமியார்களின் அடியாட்களாகி அமைதியை தொலைத்து விட்டு நிற்கிறார்கள்?
இவர்களின் குடும்ப வாழ்க்கையில் கிடைக்காத
அமைதி , இப்போது இந்த அடிதடி வாழ்கையில் இவர்களுக்கு கிடைத்து விட்டதா? நித்யானந்தர் தவறு செய்தாரா இல்லையா என எனக்கு தெரியவில்லை அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. எனக்கு உண்டான கவலை எல்லாம் அவரது சீடர்களை பற்றியது. அவர்கள் அந்த அளவுக்கு படிக்க வைக்க அவர்களது பெற்றோர் எவ்வளவு சிரமப்
பட்டிருப்பர் . தனது மனைவியையும் குழந்தையும்
நடு இரவில் தவிக்க விட்டு துறவறம் சென்ற சித்தார்த்தனை கூட என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது மனைவியான யசோதையும் குழந்தையும் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நான் சிந்தித்து பார்க்கிறேன்.
இப்போது கண்ணீரும் கம்பலையுமாக பெட்டி கொடுத்த ஆர்த்தி ராவ் இன்ஜினியரிங் படித்து விட்டு அமெரிக்காவில் ஒரு பன்னாட்டு கம்பனியில் கை நிறைய சம்பளம் வாங்கி கொண்டு திருமணம் செய்து கணவனும் குழந்தையும் என செட்டில் ஆகிவிட்ட ஒரு சாமானிய ஸ்திரீ.. குடும்ப வாழ்கையில் ஏற்படும் சிறு குறைகளுக்காக மனம் வெதும்பி அனைத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு ஆன்மீகத்துக்கு வரவேண்டும் என்று நித்யானந்தரின் பின்னே வந்து விட்டு இப்போது அனைத்தையும் இழந்து நிற்கிறார். ஐந்து வருடங்களாக தன்னை அவர் உபயோகப்படுத்திக் கொண்டார் என சொல்லும் ஆர்த்தி ராவ் ஐந்து வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் நித்யானந்தரின் அறையில் வைத்த காமெரா மூலம் மற்ற பெண்களுடனும் தன்னை போலத்தான் உறவு கொள்கிறார் என்பதை அறிந்த பின்னர் தான் அவர் என்ன இப்படி மோசம் செய்து விட்டார் என மீடியாக்களின் முன்னே புலம்புகிறார். இதை ஏன் அவர் ஐந்து
ஆண்டு காலமாக செய்யவில்லை?
இப்போது நித்யானந்தர் சிறையுள் சென்றுவிட்டால் இவரை ச்வாமியாகவே தரிசிக்கிற சீடர்களின் கதி என்ன? அவர்கள் படித்த படிப்புக்கு இப்போது என்ன மதிப்பு இருக்கும்? ஆசிரமத்தில் இருந்ததால், தங்களது படிப்பை அனுபவரீதியாக பயன் படுத்தாமல் அனுபவமற்ற நிலையில் யார் இவர்களுக்கு வேலை கொடுப்பார்கள்? இவர்களது குடும்பத்தை எப்படி எதிர் கொள்ள போகிறார்கள்? மரத்தின் அடியே அமர்ந்து த்யானம் செய்து கொண்டே சாகப் போகிறார்களா?
ஆன்மிகம் அமைதி தரும் என்றால், அதற்கென ஒரு நேரம்
ஒதுக்கி அமைதியை தேடி கொள்ளுங்கள். அல்லது நீங்களே முழு நேர ஆன்மிகவாதியாகி துறவறம் மேற்கொள்ளுங்கள். இது போன்ற நித்யனந்தர்களின் பின்னே சென்று உங்கள் ஆன்மிகத்தை தொலைத்து அமைதியையும் இழந்து, வாழ்கையையும் வெறுத்து ஒரு
தாதாவின் அடியாட்களை போல வாழாதீர்கள். அவர் சிறை சென்றாலும் சிரித்தபடி போஸ் கொடுப்பார். உங்களை நோக்கி வாழ்க்கை சிரித்துக் கொண்டிருக்கும்.
4 comments:
Excellent The People going behind corporate sannyasis must read
Thnanks Boopathi
\\ஐந்து வருடங்களாக தன்னை அவர் உபயோகப்படுத்திக் கொண்டார் என சொல்லும் ஆர்த்தி ராவ் ஐந்து வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் நித்யானந்தரின் அறையில் வைத்த காமெரா மூலம் மற்ற பெண்களுடனும் தன்னை போலத்தான் உறவு கொள்கிறார் என்பதை அறிந்த பின்னர் தான் அவர் என்ன இப்படி மோசம் செய்து விட்டார் என மீடியாக்களின் முன்னே புலம்புகிறார். இதை ஏன் அவர் ஐந்து ஆண்டு காலமாக செய்யவில்லை?\\ சாமியார் தன்னுடன் கசமுசா செய்த போது சந்தேகம் வரவில்லை, மற்ற பெண்களுடனும் செய்கிறார் என்றதும் இவருக்கு சந்தேகம் வந்ததாம். அதுசரி, தனக்கு மோட்சம் கொடுத்த மாதிரியே மற்றவர்களுக்கும் கொடுக்கிறார் என்று ஏன் இவர் நினைக்க வில்லை? பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்த இவருக்கு ஒரு சாமியார் தன்னுடன் தவறாக முதல் முறை நெருங்கும் போதே அவர் பிராடு என்று உணரவில்லை என்பதை நம்ப முடியவில்லை.
வேறென்ன? சக்களத்திப் பொறாமைதான்!
இந்த நாற்றமெடுத்த செய்திக்கு விமர்சனம் வேறா?
Post a Comment