'நிலா வேணுமா...'
கேட்ட என் குட்டி நிலாவிடம்...
'ஆம்' என்று சொல்ல..
நீரில் தெரிந்த நிலாவை,
தன் குட்டிக் கரங்களால்...
அள்ளியெடுத்து
என் கைகளில் கொட்டினாள்.
'நிலா போய்டுச்சே''
என்ற என் குட்டி நிலாவின்
துக்கம் தாளாமல்,
ஒரு நிலவை
வாங்கி அளித்தேன்.
' நிலாவை' கொஞ்சி,
கூத்தாடி,
கட்டி அணைத்தபடி,
நிலவொளியில்
அவள் உறங்குவதை..
நிலாவே
பொறாமையுடன் பார்த்தது.
'நிலாவுக்கு உடம்பு சுகமில்லை'
டாக்டர் சொன்னதும்,
குட்டி நிலாவுடன்
எடுத்து சென்றிருந்த
'நிலா'
பதற்றத்தில் கீழே விழுந்து
உடைந்தது.
'நிலா உடஞ்சிருச்சி'
முனகிய நிலாவுக்கு...
உடைந்த நிலாத் துண்டுகளை,
பொறுக்க தெம்பில்லை.
இன்று,
நிலா இல்லை.
உடைந்த நிலாத் துண்டுகளை
ஓட்டத் தெரியாமல்
அழுதுகொண்டிருக்கிறேன் நான்.
- நிலா முகிலன்.
3 comments:
migavum rasiththu..oru men thedaludan padiththen nanbaaaa..arumai
நன்றி கவிதை நாடன்.
சூப்பர் பதிவு, தங்கள் எழுத்து எல்லா பதிவுகளிலும் சிறப்பாக இருக்கிறது, தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது. ரோஜர் பெடரரின் பதிவு எங்கே ? அதித் தேடித்தான் வந்தேன்!!
Post a Comment