என்றோ படித்த நாவலை,
மீண்டும் துவக்குதல் போல்,
உறங்கிப்போன குழந்தையின்
கண்விழிப்பு அழுகை போல்...
குடை மடக்கிய பின்,
துவங்கும் மழையை போல் ,
முடிந்து போன
என் முதல் காதல் வரியின்,
முற்றுப்புள்ளியில்
தொடங்குகிறது....
உனக்கெனதாகிய
எனது அடுத்த காதல்...
முதல் தான்
முடிவு என இருந்த நான்,
முடிவில் இருந்து
மீண்டும் ,
நீ துவக்கிய தடுமாற்றத்தில்,
கிழித்தெறிந்தேன்...
கடந்து போன
இந்தக் கவிதையை....
-- நிலா முகிலன்
--
12 comments:
முகிலன்....நீங்களுமா !
இருக்கிறவங்களையே
சமாளிக்க முடில !
"கடந்துபோன கவிதை"ன்னு
அழகா தொடங்கியிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
முகிலன்
:)
வாழ்த்துகள்!
ரொம்ப நல்லாருக்கு மக்கா.
அருமை முகிலன்
முற்றுப்புள்ளியே வைக்காதீங்க காதலுக்கு .
வாழ்த்துக்கள்
நன்றி ஹேமா. நீங்களுமான்னா என்ன? கூட்டத்தோட சேத்து என்னையும் சமாளிங்க!
நேசமித்திரன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நன்றி பா ரா.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மா.
//முடிந்து போன
என் முதல் காதல் வரியின்,
முற்றுப்புள்ளியில்
தொடங்குகிறது....//
காதல் எப்போதும் முடிவதில்லை,
ஆட்களும் பொருளும்தான் மாறுகின்றன,
தொடருங்கள் உங்கள் கவி மழையை..
//முதல் தான்
முடிவு என இருந்த நான்,
முடிவில் இருந்து
மீண்டும் ,
நீ துவக்கிய தடுமாற்றத்தில்,
கிழித்தெறிந்தேன்...
கடந்து போன
இந்தக் கவிதையை....//
அழகா இருக்குங்க வரிகள்....
நன்றி தமிழ் வெங்கட்.
நன்றிங்க சங்கவி
Post a Comment