சீமான்..!
தற்போதைக்கு ஈழ தமிழர்கள் தங்கள் விடிவெள்ளியாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர். சில எழுத்தாளர்களைத் தவிர்த்து பலரும் விடுதலைப் புலிகளின் மேலும் இலங்கை அரசின் மேலும் பழிகளைப் போட்டு ஈழத் தமிழர்களின் சாவுக்கு பரிதாபம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்த வேளையில்...ஈழத்தமிழர்களுக்காக ஓங்கி குரல் கொடுத்து இயக்குனர்களை ஒருங்கிணைத்து ராமேஸ்வரத்தில் தைரியமாக இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிராக உண்மைகளை போட்டு உடைக்க.. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஈழ மக்களை , தங்களுக்காக ஒருவர் பேசி சிறை சென்று இருக்கிறாரே என திரும்பி பார்க்க வைத்தார் சீமான்.
ஈழம் என்று ஒன்றை இருப்பதையே மறந்துவிட்ட தமிழக அரசியல் வாதிகள், பொதுத் தேர்தல் முடிந்த வேளையில்.. கொத்து கொத்தாக ஈழத்தில் மடிந்து கொண்டிருந்த தமிழர்களை நினைத்து பார்க்காமல், தன் குடும்பங்களின் வாரிசுகளுக்கு ஏற்ற துறையை வேண்டி சக்கர நாற்காலியில் தமிழர் தலைவராக கருதப்பட்டவர் டில்லியில் பேரம் பேசி கொண்டிருக்க, ஈழ போரில் இலங்கை அரசுக்கு உறுதுணையாக பல உதவிகளை செய்து கொண்டிருந்த இந்தியாவுக்கு எதிராக, தமிழனுக்கு ஆதரவாக இவரும் இவரது ஆதரவாளர்களும் செய்த பிரச்சாரத்தில்... பல பெரிய காங்கிரஸ் தலைகள் மண்ணில் உருள காரணமாய் இருந்தவர்.
பல தமிழ் மீனவர்களை நிர்வாணப் படுத்தி, சித்திரவதைப்படுத்தி சின்னாபின்னமாக குத்துயிரும் குலை உயிருமாக அனுப்பிக் கொண்டிருந்தது சிங்கள ராணுவம். பலரின் உயிர்களையும் பறித்து கொண்டு வெறும் பிணங்களை திருப்பி படகில் அனுப்பி கொண்டிருக்க, அதனை எதிர்த்து ஒரு தீர்மானம் கூட இயற்றாமல், பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார் தமிழக முதல்வர். அதனை கண்டித்தவர் சீமான். நீங்கள் எங்கள் மீனவர்களை அடித்தால், நாங்கள் உங்கள் மாணவரை அடிப்போம் என்று சொன்னதற்காக, சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், மீண்டும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பொதுத் தேர்தல் மிக அருகில் வருகிற நேரத்தில், இவரது பிரச்சாரத்தின் சூடு தாங்காமல் எங்கே தாங்கள் கவிழ்ந்து விடுவோமோ என எண்ணி சிறையில் அடைத்தவர்களின் வாயில் மண். நீதி தேவதை இன்னமும் கண் விழித்துக் கொண்டிருப்பதால், சீமானை, தேசிய பாதுகாப்பின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது நீதி மன்றம்.
நம் தொப்புள் கோடி சொந்தங்களான இலங்கை தமிழர்கள் அங்கே சித்ரவதைப்படுத்தப்பட்டு , சீரழிக்கப்பட்டு கண்டந்துண்டமாய் கொந்தப்பட்டு கொல்லப்பட்டு கொண்டிருக்கையில், இங்கு முதல்வரின் சொந்தங்கள் பதவிக்காக அடித்துக் கொண்டிருந்ததை, தொலைபேசி உரையாடல்களை ஒலிபரப்பியதன் மூலம் புண்ணியம் கட்டிக் கொண்டன ஊடகங்கள். போர்குற்றங்களை இழைத்த ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து தமிழர்களின் ரோஷத்தில் ஒரு சதவிகிதம், நம் உள்ளூர் தமிழர்களுக்கு இருந்திருந்தால், இந்தியாவில் காலடி வைத்திருக்கமாட்டான் அந்த கொடுங்கோலன். கோவையில் ஒரு சிங்கள அமைச்சர் விரட்டி அடிக்கப்பட்டார். அவரை இங்கிருந்து அழைத்தவர்களும் தமிழின துரோகிகளே. அவரையும் விரட்டி அடித்திருக்க வேண்டாமா..?
சானல் 4 போன்ற ஊடகத்துறைகள் இல்லாவிட்டால், இலங்கையில் அவர்கள் தமிழர்களுக்கெதிராக போட்ட பேயாட்டங்கள் வெளியே தெரியாமல் போய் இருக்கும். ஊடகத்துறை இல்லா விட்டால்.. பதவிக்காக எம் முதல்வரின் சொந்தங்கள் போட்ட ஆட்டங்களும் வெளியே தெரியாமல் போய் இருக்க கூடும். சில பத்திரிக்கைகளும் சில தொலைகாட்சிகளும் உண்மையாய் இருப்பதால் தான் திருவாளர் பொது ஜனம் சிறிது நம்பிக்கையோடு நடமாடிக் கொண்டிருக்கிறான்.ஈழம் என்று ஒன்றை இருப்பதையே மறந்துவிட்ட தமிழக அரசியல் வாதிகள், பொதுத் தேர்தல் முடிந்த வேளையில்.. கொத்து கொத்தாக ஈழத்தில் மடிந்து கொண்டிருந்த தமிழர்களை நினைத்து பார்க்காமல், தன் குடும்பங்களின் வாரிசுகளுக்கு ஏற்ற துறையை வேண்டி சக்கர நாற்காலியில் தமிழர் தலைவராக கருதப்பட்டவர் டில்லியில் பேரம் பேசி கொண்டிருக்க, ஈழ போரில் இலங்கை அரசுக்கு உறுதுணையாக பல உதவிகளை செய்து கொண்டிருந்த இந்தியாவுக்கு எதிராக, தமிழனுக்கு ஆதரவாக இவரும் இவரது ஆதரவாளர்களும் செய்த பிரச்சாரத்தில்... பல பெரிய காங்கிரஸ் தலைகள் மண்ணில் உருள காரணமாய் இருந்தவர்.
பல தமிழ் மீனவர்களை நிர்வாணப் படுத்தி, சித்திரவதைப்படுத்தி சின்னாபின்னமாக குத்துயிரும் குலை உயிருமாக அனுப்பிக் கொண்டிருந்தது சிங்கள ராணுவம். பலரின் உயிர்களையும் பறித்து கொண்டு வெறும் பிணங்களை திருப்பி படகில் அனுப்பி கொண்டிருக்க, அதனை எதிர்த்து ஒரு தீர்மானம் கூட இயற்றாமல், பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார் தமிழக முதல்வர். அதனை கண்டித்தவர் சீமான். நீங்கள் எங்கள் மீனவர்களை அடித்தால், நாங்கள் உங்கள் மாணவரை அடிப்போம் என்று சொன்னதற்காக, சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், மீண்டும் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பொதுத் தேர்தல் மிக அருகில் வருகிற நேரத்தில், இவரது பிரச்சாரத்தின் சூடு தாங்காமல் எங்கே தாங்கள் கவிழ்ந்து விடுவோமோ என எண்ணி சிறையில் அடைத்தவர்களின் வாயில் மண். நீதி தேவதை இன்னமும் கண் விழித்துக் கொண்டிருப்பதால், சீமானை, தேசிய பாதுகாப்பின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது நீதி மன்றம்.
நம் தொப்புள் கோடி சொந்தங்களான இலங்கை தமிழர்கள் அங்கே சித்ரவதைப்படுத்தப்பட்டு , சீரழிக்கப்பட்டு கண்டந்துண்டமாய் கொந்தப்பட்டு கொல்லப்பட்டு கொண்டிருக்கையில், இங்கு முதல்வரின் சொந்தங்கள் பதவிக்காக அடித்துக் கொண்டிருந்ததை, தொலைபேசி உரையாடல்களை ஒலிபரப்பியதன் மூலம் புண்ணியம் கட்டிக் கொண்டன ஊடகங்கள். போர்குற்றங்களை இழைத்த ராஜபக்ஷவை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து தமிழர்களின் ரோஷத்தில் ஒரு சதவிகிதம், நம் உள்ளூர் தமிழர்களுக்கு இருந்திருந்தால், இந்தியாவில் காலடி வைத்திருக்கமாட்டான் அந்த கொடுங்கோலன். கோவையில் ஒரு சிங்கள அமைச்சர் விரட்டி அடிக்கப்பட்டார். அவரை இங்கிருந்து அழைத்தவர்களும் தமிழின துரோகிகளே. அவரையும் விரட்டி அடித்திருக்க வேண்டாமா..?
ஏழு மாதங்களுக்கு முன் நாம் தமிழர் என்ற இயக்கம் கண்ட சீமான் ஐந்து மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். அடுத்த பொது தேர்தலில் போட்டி இடப்போவதாய் சூளுரைத்திருக்கிறார். தன்னை சிறையில் இட்ட அரசுக்கு பழி வாங்குவதற்காக, பதட்டத்தில் திட்டங்கள் போடாமல், தமிழர்களுக்காக என திட்டங்கள் போட வேண்டும். அரசியலுக்கு வந்ததும்.. பதவிக்கு ஆசைபடாமல், இப்போது போலவே எப்போதும் போராட்ட குணத்தோடு தமிழர்களின் துணை நிற்கவேண்டும்.
இப்போது உலக தமிழர்கள் முழுமையாக நம்பி இருப்பது.. உங்களைத்தான் சீமான்!..
--
8 comments:
ஆமோதிக்கிறேன்...
நிறைவான அலசல் முகிலன்.எங்கு சுற்றிப் பார்த்தாலும் தமிழனுக்கு தமிழனேதான் எதிரியாய் இருக்கிறான்.நாம் அத்தனை பேரும் ஒன்றுபட்டாலே 90% எங்களின் கொள்கைகள் வெற்றி.சீமான் முடிந்தவரை தமிழுக்கு ஏதாவது செய்வார் என்று நம்புவோம் !
Wish to get success
உண்மை சற்று நேரம் கழித்து வந்தாலும் வட்டி போட்டு திருப்பித்தாக்கும்.
நன்றி பிரபாகரன்
நன்றி ஹேமா. நல்லதே நடக்குமென நம்புவோம்.
நன்றி வாணிஸ்ரீ
உண்மைதான் விக்கி.
Post a Comment