Monday, August 17, 2009
உலக சினிமா: தி கியூ ரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (The Curious case of Benjamin Button)
அயல் மொழி திரைப்படங்களை பார்க்கும்போதெல்லாம்.. எப்படி இப்படி வித்யாசமாக சிந்திக்கிறார்கள், ஏன் நமது தமிழ் மொழி படைப்பாளர்கள் இப்படி சிந்திப்பதில்லை என நான் நினைப்பதுண்டு. Irreversible என்ற பிரெஞ்சு படம் தலைகீழாக ஓடும். அதாவது முதலில் படத்தின் முடிவும், படம் முடியும் தருவாயில் படத்தின் துவக்கமும் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த இஸ்பஞொல் இயக்குனரான அலெஜாண்ட்ரோ கோன்ழேலஸ் இன்னரிட்டுவின் படைப்புகள் 'இப்படித்தான்' என அனுமானிக்க முடியாதது போல வழமையான திரைக்கதை அமைப்பை கட்டுடைத்தன. அந்த வரிசையில் வருவது தான் பெஞ்சமின் பட்டன்.
ஒரு வித்யாசமான கரு உடைய ஒரு சிறுகதையை இந்த அளவுக்கு ஒரு அற்புதமான திரைக்கதை நேர்த்தியுடன் திரைப்படம் ஆக்க முடியுமா? என எனக்குள் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய படம் தான் பெஞ்சமின் பட்டன்.
ஸ்காட் பிட்ஸ் ஜெரால்ட் எழுதிய சிறுகதையே, எரிக் ரோத்தின் திரை கதை ஆக்கத்தால் டேவிட் பின்ச்செரின் இயக்கத்தில் பிரமாண்ட திரைப்படம் ஆனது.
ஒரு குழந்தை முதியவனாக பிறந்து வளர வளர இளமைக்கு திரும்பி, வயதாகும்போது கைக்குழந்தை ஆவது தான் கதை.
முதல் உலகப்போர் முடிந்திருந்த நேரம், அமெரிக்கா தனது வெற்றியை ஊரெங்கும் கொண்டாடி கொண்டிருக்க, தாமஸ் பட்டன் என்ற பட்டன் கம்பெனி முதலாளி கொண்டாடும் கூட்டத்துக்குள் புகுந்து ஓடி தனது வீட்டை அடைகிறான். அங்கு ஒரு அவனது மனைவி ஒரு குரூபியான குழந்தையாய் பெற்றுவிட்டு இறந்து போய்விடுகிறாள்.குழந்தையின் அவலட்சண முகம் அவனை தாக்குகிறது. அது ஒரு பிசாசு என நினைக்கிறான். டாக்டேர்களோ அக்குழந்தைக்கு கண்களில் காடராக்ட் என்றும் மூட்டு வலி என்கிற ஆர்திரிடீஸ் என்றும் கூறி அதிக நாள் தாங்காது என கூறுகின்றனர்.
மனைவியின் இழப்பு, மிக மிக வயதானதாக சுருக்கமான தோலுடன் தோற்றமளிக்கும் அவலட்சண குழந்தையின் மேல் அவனது கோவம் பாய்கிறது. அதனை நதியில் போட்டுக் கொல்ல தூக்கி கொண்டு ஓடுகிறான். போலீஸ் அதனை கண்டு அவனை துரத்த, ஒரு முதியோர் இல்லத்தின் வாசலில் குழந்தையாய் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.
அந்த முதியோர் இல்லத்தை நடத்துபவள் அன்பும் ஆதுரமும் கொண்ட ஒரு கறுப்பின பெண். அவனது கணவன் தடுத்தாலும் அவளது தாயுள்ளம் அந்த அவலட்சணமான குழந்தையை வளர்க்க தூண்டுகிறது. அக்குழந்தையை முத்தமிட்டு பெஞ்சமின் என பெயரிடுகிறாள்.அவளது பராமரிப்பில் அந்த குழந்தையும் வளர்கிறது. மற்ற குழந்தைகளிடம் இருந்து மாறாக அக்குழந்தைக்கு ஒரு எண்பது வயது தாத்தாவின் தோற்றம். ஆனால் மனதில் குழந்தையின் வயதுக்கேற்ற மனது. மற்ற குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்க பெஞ்சமினோ முதியவர்களின் மத்தியில் தானும் ஒரு முதியவனாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்.அவனுக்கு இருக்கும் வ்யாதியை பற்றி தெரியாமல், அவனையும் ஒரு முதியவன் என்றே கருதி தங்களது கதைகளை பகிர்ந்துகொள்கின்றனர் அந்த முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை தன பாட்டியை காண அவ்விடுதிக்கு வருகிறாள் டெய்சி. அவளுக்கு பெஞ்சமின் மீது அவனது வயதான தோற்றத்தையும் மீறி ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. தனது தோற்றம் கண்டு தன்னை ஒதுக்காமல் தன்னுடன் விளையாடும் அந்த பெண் மீது பெஞ்சமினுக்கும் ஒரு பாசம் ஏற்ப்படுகிறது. இருவரும் நட்பாக பழகுகிறார்கள். பெஞ்சமின் நாளடைவில் சற்கர நாற்காலியை விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கிறான்.( அவன் இளமை ஆகிக்கொண்டு போவதை அற்புதமாக காட்சிக்கு காட்சி செதுக்கி இருக்கிறார்கள்). ஒரு கப்பலில் வேலைக்கு சேர்கிறான்.
அமெரிக்க வழக்கப்படி அவனுக்கு பதினேழு வயது ஆனா போது வீட்டை விட்டு வெளியேறுகிறான்.அந்த கப்பலில் வேலை செய்தவாறு அலைகிறான். எனினும் அவர்களுக்குள்ளான உடன்படிக்கையின்படி டெய்சிக்கு எங்கு இருந்தாலும் ஒரு போஸ்ட் கார்ட் அனுப்பிவிடுவான் பெஞ்சமின். பனிகாலத்தில் கப்பலை ஓட்ட முடியாததால் ஓரிடத்தில் ஹோடேலில் தாங்கும் பெஞ்சமினுக்கும் அங்கு தங்கி இருக்கும் மற்றொரு பயணி எலிசபெத்துடன் தொடர்பு ஏற்ப்படுகிறது. எனினும் ஒரு நாள் அவனை விட்டு விலகி போகிறாள் எலிசபெத். பேர்ல் ஹார்பர் குண்டினால் தாக்கப்பட்ட சமயம் பெஞ்சமினின் கப்பலும் போரில் ஈடுபட பெஞ்சமின் சகாக்கள் கொல்லப்பட்டு விடுகின்றனர்.
போர் முடிந்து வீடுதிரும்பும் பெஞ்சமின் அழகான இளைஞனாக உருமாறி இருப்பதை கண்டு ஆனந்தப்படுகிறாள் அவனது வளர்ப்புத் தாய் குயினி. அப்போது மீண்டும் டெய்ஸியை தேடி கண்டுபிடிக்கிறான். அவள் அழகான யுவதியாக ஒரு பாலே டான்செராக உருபெற்று இருக்கிறாள். இருவரும் காதல் கொண்டு மனம் செய்து கொள்கின்றனர். டெய்சி ஒரு பெண் குழந்தையை கருத்தரிக்கிறாள். பெஞ்சமினுக்கு பயம். எங்கே அவளும் தன்னை போல பிறந்துவிடுவாளோ என்று. நல்லவேளையாக அவள் எல்லோரையும் போல ஆரோக்கியமான குழந்தையாக பிறக்கிறாள்.
பெஞ்சமின் டெய்ஸியை உயிராய் காதலிக்கிறான். அதனாலேயே அவளை விட்டு விலகி போக தீர்மானிக்கிறான். தன இளமை திரும்ப திரும்ப அவன் விரைவில் தான் குழந்தையாக போக போகிறோம் என அவனுக்கு புரிந்து டெய்சிக்கு தொந்தரவு தர அவன் விரும்ப வில்லை.
அவளை வேறொரு மணம் புரிந்து தனது குழைந்தைக்கு ஒரு நார்மல் மனிதன் தகப்பனாக இருக்க வேண்டும் என அவளிடம் சொல்லி அவளிடம் இருந்து விடைபெற்று உலகமெங்கும் சுற்றி திரிகிறான். பல வருடங்கள் கழித்து டெய்ஸியை சந்திக்கும்போது அவனுடைய குழந்தை பனிரெண்டு வயது சிறுமியாக வளர்ந்து நிற்கிறாள். டெய்சி மனைவி இழந்தவனை மணம் செய்து இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் விலகுகிறான். அவனுடைய வளர்ப்பு தாய் இறந்ததும் அந்த முதியோர் விடுதியை அவளுடைய மகள் நடத்துகிறாள். அங்கு வந்து சேர்கிறான் பெஞ்சமின் அப்போது அவன் சின்னஞ்சிறு சிறுவனாக இருக்கிறான். அவனுக்கு பலதும் மறந்துவிடுகிறது என கூறுகிறார்கள்( அவனுக்கு வயது ஆகிவிட்டதை அப்படி தெரிவிக்கப் படுகிறது).டெய்சி அந்த சிறுவனை தத்தெடுத்துக் கொள்கிறாள். அந்த சிறுவன் பின்னர் கைகுழந்தைஆகி வயதான டெய்சி இன் கைகளில் அவளை பார்த்தபடியே உயிரை விடுகிறது.
படத்தில் எனக்கு பிடித்த வசனம், பெஞ்சமின் தன வளர்ப்பு தாய் குயினி இடம் கேட்கிறான். 'எதற்கு எல்லாரும் செத்து செத்து போகிறார்கள்?'அதற்க்கு அவள் பதில்,'மகனே, உயிருடன் இருப்பவர்களின் மதிப்பு நமக்கு தெரியாது. இறந்தபின்பு தான் அவர்கள் நமக்கு முக்கியமானவர்கள் என நமக்கு புரியும் நமக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என காட்டவே அவர்கள் இறந்து போகிறார்கள்.'
படத்தில் பிரம்மிக்க வைக்கும் விடயம் படத்தின் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்ப மாறும் படத்தின் உடைகள், கலை இயக்கம், மற்றும் ஒளிப்பதிவு. பெஞ்சமினுக்கு வயது குறைந்து கொண்டு வருவதை ஒவ்வொரு காட்சியிலும் செதுக்கி வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மற்றும் பெஞ்சமினாக நடித்திருக்கும் பிராட் பிட் மற்றும் டேய்சியாக நடித்திருக்கும் கேட் ப்லன்செத்தின் நடிப்பு அற்புதம். அந்த வயதுக்கேற்ற முகபாவங்களை அனாயசமாக கொண்டு வருகிறார் பிராட். தனது கணவனின் வினோத வ்யாதியை தாங்கி கொண்டும் தங்கி கொள்ள முடியாமலும் என பின்னி எடுத்திருக்கிறார் கேட்.
படத்தின் நீளம் சில சமயங்களில் ஆயாசத்தை கொடுக்கிறது. பெஞ்சமின் போருக்கு செல்வதும் போர் காட்சிகளும் படத்தின் ஓட்டத்துக்கு ஒரு தடை கல்.
இத்திரைப்படம் பதிமூன்று பிரிவுகளில் ஆஸ்கார் க்கு பரிந்துரைக்கப்பட்டு ஸ்லம்டொக் மில்லியனர் எட்டு விருதுகள் அள்ளிக் கொள்ள, பெஞ்சமினுக்கு கிடைத்த விருதுகள் மூன்று. கலை இயக்கம், மேக் அப் மற்றும் விசுவல் எப்பெக்ட்.
படத்தை இழைத்து இழைத்து கொடுத்திருக்கிறார்கள். அற்புதமான படைப்பு.
---------------------------
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
1.தி க்யூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON )
(இதில் மனிதர் 90 வயது கிழவனின் தோற்றத்துடன் பிறந்து படிப்படியே இளமையடைந்து கடைசியில் 1 வயது குழந்தையாக இறக்கிறார்)கை தேர்ந்த நடிப்பு,அசல் ஒப்பனை,(முக மூடிகள் அறவே இல்லை)எல்லா வேடங்களையும் நான் தான் செய்து கெடுப்பேன் என்ற பிடிவாதம் இல்லை.குரலிலும் ,உயரத்திலும் ,உடம்பு கூனன் முதல் திடகாத்திரன் வரை..)கலக்கியிருக்கிறார்.உண்மைக்காதலுக்காக தன் சொத்து சுகங்களை தியாகம் செய்து தனிமையில் வாடும் அற்புத கதாபாத்திரம்.படம் அனைவருக்கும் பிடிக்கும்,படம் பார்த்தால் வியப்பும் சிரிப்பும் பரிதாபமும் நம்மை பீடித்துக் கொள்ளும்.
இந்த படத்தின் போஸ்ட்டரே வித்தியாசமாக இருக்கும். தலைப்பே திரும்பி இருக்கும்.
படம் துவக்கத்தில் 20 நிமிடம் மெதுவாய் போனாலும் போகப் போக ஃபாரஸ்ட் கம்பிற்க்கு ஈடான வேகம் விருவிருப்பு
மறக்க முடியாத படம்.
இந்த படத்தில் ப்ராட் பிட்டிர்க்கு ஆஸ்கார் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.
ஆனால் கேட் ப்லான்செட் வென்றுவிட்டார்.
நல்ல பகிர்வு.
ஆனால் பின்னூட்டமே இல்லை. என்ன கொடுமை.
ஒட்டு போட்டாச்சு.
இதனால் தான் நானும் படங்கள் எழுதுவதை குறைத்து விட்டேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்தி.பின்னூட்டங்களைப் பற்றி கவலைபடாதீர்கள். படங்களை பற்றி எழுதுங்கள். நீங்கள் ரசித்தவைகளை பிறரும் ரசிக்கட்டுமே. மேலும் கேட ப்ளன்சே இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் வாங்கவில்லை. கேட் வின்ஸ்லெட் தான் ஆஸ்கார் வாங்கியுள்ளார் அதுவும் 'தி ரீடர்' படத்திற்காக.
பின்னுட்டங்களைப் பற்றி கவலைபடாதீர்கள். எப்போதும் போல நீங்கள் உங்கள் பதிவுகளை தொடருங்கள். நல்ல பதிவு. மிக விரிவான விமர்சனம்
Sorry type in English.
Thank you for your review.
- Kiri
மிக நல்ல பதிவு நண்பரே. ஒரு சிறு டிப் உங்கள் பதிவுகளை மெருகூட்ட. நீங்கள் ஒரு பதிவை அனுபவித்து எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அப்படி நினைக்காமல் ஒரு மூன்றாம் மனிதனின் நிலையில் நின்று படித்து பாருங்கள். உங்களுக்கே பலவற்றை குறைக்க தோன்றும். மேலும் விமர்சனம் என்றால் படத்தின் கதையை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கதையை சொல்லாமலும் சுவாரசியமாக பதிவு போடலாம். எனது பதிவில் Kundun மற்றும் In Bruges திரைப்படங்களுக்கு, இவ்வாறாக தான் விமர்சனம் எழுதியுள்ளேன். முடிந்தால் வந்து பாருங்கள்...
நண்பர் நிலா முகிலன்
கேட் ப்லான்செட்டுக்கு
கிடைத்தது Best Actress-Saturn Award
அதைதான் தவறாக குறிப்பிட்டுவிட்டேன்.
ப்ராட் பிட்டிற்க்கு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மற்றபடி கேட் விசிறி யாதலால் அவர் அவார்டு வாங்கியது நெகிழ்வே,முன்னமெ அறிந்ததே
@நண்பர் ப்ரசன்னா
என்ன இது எல்லொருக்கும்
அறிவுறையா?
அவரவர் பாணி என ஒன்று மிச்சம் இருக்கட்டும்.நீஙகள் உஙகள் படைப்பை காண் அழைக்கலாம்.ஆனால் அது தான் சிறந்த பாணி என சொல்லுவது போல இருக்கிறது.உங்களிடம் வந்து இப்படி யாராவது வந்து என் விமர்சனம் போல எழுதுங்கள் சொன்னால் எப்படி உணர்வீர்கள்?ஏதோ ஒன்றிரண்டு பேர் நல்ல விரிவாக விமர்சனம் எழுதுகிறோம்.அதற்கும் ஆப்பா?
கவிதை காதலன் மற்றும் கிரி, உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
பிரசன்னா ராசன், புரியாமல் படம் பார்க்கும் பலருக்காகத்தான் விரிவான பதிவு. படம் பார்க்க வழியில்லாதவர்களுக்கு இது உதவும் தமிழ் படங்கள் மற்றவர்களும் பார்க்க வசதி இருக்கும் எனவே நாம் கூறுவது புரியும் படம் பார்த்து ஒப்பீடு அளிக்க இயலும். நிச்சயம் உங்கள் விமர்சன பதிவுகளை பார்க்கிறேன்.
நீங்கள் சொல்வது சரியே கார்த்தி. நானும் கேட் இன் ரசிகனே. அவருடைய தி ஹாலிடே என்ற கமர்ஷியல் திரைப்படத்தை நான் ஒரு பதினைந்து முறை பார்த்திருப்பேன். நீங்கள் பட விமர்சனங்களை குறைத்து விட்டீர்கள் போல. மற்றவர்களின் பின்னூட்டங்களைப் பற்றி கவலைப் படாதீர்கள். உங்கள் படங்களை பற்றி பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
Post a Comment