Friday, September 4, 2009

நகைச்சுவை குற்றங்கள் - 2சில குற்றங்களை எப்படி கையாள்வது என காவல் துறை தலையை பியித்து கொள்ளும். சிலர் எதிர்பாராமல் மாட்டுவார்கள்.

அவ்வகையான சில குற்றங்களை இப்பதிவில் காணலாம். இவை முழுக்க முழுக்க உண்மையாக நடந்தது செய்தித்தாள்களில் வெளியானது.

1. நாயும் கறியும்.
===============
மசாசுசெட்ஸ் மாகனத்தின் பிர்மிங்காம் நகரில் ஒரு பாலசரக்கு கடையில் ஆயுதத்தை காட்டி பணத்தை எல்லாம் அள்ளிவிட்டு ஓடி இருக்கிறான் ஒருத்தன். கடை முதலாளியும் அந்த திருடனை பார்த்திருக்கிறார்.காவல் நிலையத்திற்கு சொல்லப்பட்டு காவலதிகாரிகள் ஒரு மோப்ப நாயுடன் வந்து விட்டனர். மோப்பம் பிடித்துவிட்டே சென்ற நாய் திடீரென ஒரு ஆளின் கைய்யை கவ்வி இருக்கிறது. கடைக்கரரோ சரியான முட்டாள் நாயை கூட்டி வந்துவிட்டார்களே என நொந்தபடி இந்த ஆள் இல்லை வேறொருத்தன். அவன் கருப்பன்.இவனோ வெள்ளயன்.உங்கள் நாய்க்கு இது கூட தெரியவில்லை போங்கடா போங்க என சொல்லாத குறையாய் விரட்டி இருக்கிறார். இருந்தாலும் ஒரு பொறி தட்ட எட்வர்ட் பிரவுன் என்ற அந்த அந்த வெள்ளை காரனை சோதனையிட அவர் தனது ஜட்டிக்குள் 67$ பெறுமானமுள்ள பன்றிக் கறியை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது. நல்லவேளை புத்திசாலி நாய் கைய்யை கடித்தது. பன்றி கறி இருக்கும் இடத்தை கடித்திருந்தால்.......?!!!!!!

2. நாயினால் கடித்த வடு...
=====================
அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தில் இருக்கும் பாயோட்டேச்வில் என்ற நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி வந்தது. என்னவென்றால் அங்குள்ள க்ளோரியா பாஸ் என்ற பெண்மணியின் மகள் மிதிவண்டியில் செல்லும்போது ஒரு நாய் துரத்துவதாக.( நம்மூரில் வண்டியில் செல்லும் ரோமியோக்களை போல அல்ல. இது நிஜமான நாய்). இதற்க்கெல்லாம் பொய் விசாரிக்க வேண்டி இருக்கிறதே என அந்த வீட்டிற்கு காரில் சென்றார் காவலதிகாரி. காரை அவர்கள் வீட்டில் நிறுத்திவிட்டு அழைப்பு மணியை அழுத்தி இருக்கிறார். கதவை திறந்துள்ளார் க்ளோரியா பாஸ். அவரை தாண்டி அவரது வீட்டிலிருந்து குதித்த பாக்சர் இன நாய் பாய்ந்து சென்று காவலர் வந்த வண்டியின் அனைத்து டயர்களையும் கடித்து குதறிப்போட்டது. சும்மனாச்சுக்கும் எல்லாம் அமெரிக்காவில் நாய்களை சுட்டுவிட முடியாது. க்ளோரியா பாசினால் நாயை கட்டுப்படுத்த முடியவில்லை. அனைத்தும் முடியும் வரை காவல் அதிகாரி பார்த்துகொண்டிருந்தார். பின்னர் டயர்களை மாற்றுவதற்காக ஐந்நூறு டாலர் க்ளோரியா பாஸ்க்கு பைன் போட்டுவிட்டு வேறு காரில் ஏறி சென்றார்.

நன்றி The Examiner.

3 comments:

Robin said...

:)

ஹேமா said...

முகிலன் இங்கு நம்மவர்களின் ஒரு வாசகம் ஒன்று தெரியுமா?"அட நம்ம ஊரில மனுசனாப் பிறக்கிறதைவிட இங்க ஒரு நாயாப் பிறந்திருக்கலாம்."
என்று.அவ்வளவு மதிப்பு இங்கு நாய்களுக்கு.உயில்கூட எழுதி வைக்கிறார்கள் தெரியுமோ !

முனைவர்.இரா.குணசீலன் said...

அட!
நன்றாகவுள்ளது..
படித்துச் சிரித்தேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...