Tuesday, December 6, 2011

முற்றுப் பெறாதக் கவிதை!

முற்றுப் பெறாதக் கவிதை!



 
தாள்கள் கிழிபட்ட

ஒரு சமூக நாவலின்,

முற்றுபெறாத அத்தியாயமாய்,

வந்தவன் எல்லாம்,

தன் கை மறந்து,

தங்கையை கேட்க...

மணந்து போன தங்கையை

வாழ்த்த தான் முடிந்தது.


ஆடைகளும்,

அணிகளும்,

அலங்கரிக்க மறுக்கும் உடலுடன்,

ஒரு

அகோரியின் மன நிலையில்,

நிலைத்து நின்றன

வளைகள் பூட்டிய விழிகள்.

 
வெள்ளியின் விலை ஏற்றமோ

என்னவோ..

அவள் சிரசு மயிரில்

ஏறி விட்டன

சில வெள்ளிக் கம்பிகள்..


இரவின்

தனிமையில்,

தவிப்பில்,

குளித்த நீர்த்துளி..

தொட்டு சென்றன..

அவளது

தொடக்கூடாத இடங்களை...


தனிமை தவத்தை

கலைக்க வருமோ..?!

தவிப்பின் தாகம்

தீர்க்க வருமோ..?!

தொலைந்து போனவனின்..

துவண்ட கைகள்..?


அணைப்பும் வேண்டாம்...

அரவணைப்பும் வேண்டாம்..

இறுகப் பற்ற

ஒரு கரம் போதும்..

இன்னமும்

முற்று பெறாத

இக்கவிதையை படிக்க...

எங்கே இருக்கிறாய்..

என் ராஜகுமாரா...?

7 comments:

தீபிகா(Theepika) said...

அணைப்பும் வேண்டாம். அரவணைப்பும் வேண்டாம். இறுகப்பற்ற கரங்கள் போதும். வலித்துக் கொண்டிருக்கிற நெஞ்சங்களில் வழிகிற கண்ணீர்த்துளிகளை வார்த்தையாக்கி காட்டியிருக்கிற அருமை வ(லி)(ரி)கள்.
http://theepikatamil.blogspot.com/

தீபிகா.
07.12.11

NILAMUKILAN said...

நன்றி தீபிகா.

sakthirevathy said...

ஆடைகளும்,அணிகளும்,அலங்கரிக்க மறுக்கும் உடலுடன்,ஒருஅகோரியின் மன நிலையில்...............
காயப் பட்ட மனதின் கண்ணீர் வரிகள்............
அற்புதம் நிலா முகிலன் ......

ஹேமா said...

முகிலன்...எப்பிடி இருக்கீங்க.சுகமா!

இப்படி எத்தனையோ முற்றுப்பெறாத கவிதைகள் எங்களுக்குள் நிறையவே.ராஜகுமாரர்களெல்லாம் விற்பனைக்காக மட்டுமே !

NILAMUKILAN said...

நன்றி சக்தி ரேவதி.

NILAMUKILAN said...

சுகம் தான் ஹேமா. நீங்கள் சுகமா? கவிதைக்கு முற்றுபுள்ளி வைக்க உங்கள் ராஜகுமாரன் தேடி வருவான்.

NILAMUKILAN said...

நன்றி சக்தி ரேவதி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...