ஆர்மிகாரனின் தோட்டாக்கள்
உன்னை துளைக்கும் பொழுது
என் மேலும் பட்டு தெறித்தது,
உன் ரத்த துளிகள்.
என் ரத்தம் கொதித்தது...
உள்ளம் துடித்தது...
ஏன் என்றால் நான் இந்தியன்.
முல்லைத்தீவில்
பள்ளிக்கூடத்தின் மீது
குண்டுகள் விழுந்து
துண்டுகள் ஆனது..
அங்குள்ள மொட்டுகள்
மட்டுமல்ல..
எனது இதயமும்...
நீங்கள் நிராகரிக்கப்படவில்லை...
நேசிக்கப்படுகிறீர்கள்...
உங்களுக்காக கண்ணீர் வடிக்கும்
இந்தியனால்...
நமக்குள்
தொப்புள் கொடி உறவில்லை என்றாலும்
தனுஷ்கோடி உறவு உள்ளது..
நான் உன் சகோதரன்.
நான் உன் இனம்...
பிணங்களின் குவியல்களில் ,
நீ
உன் உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் போது...
நான்
உன்னை தேடி கொண்டிருக்கிறேன்..
ஏன் என்றால்...
நீ என் உறவு...
நான்
அமெரிக்காவில் இருந்தாலும்
என் சகோதரன்
இந்தியாவில் இருந்தாலும்...
நீ
இலங்கையில் இருந்தாலும்...
நம்மை இணைக்கும் பாலம் தமிழ்...
இதில்,
இதில்,
இந்தியன் தமிழன் ,
இலங்கை தமிழன்..
மலேசிய தமிழன்
என
கூறுபோட்டு பார்க்க...
நாம்
மீன்களின் கூட்டம் அல்ல
நானும்,
நீயும்,
அவனும்
தமிழர்கள் தான்.....
உனது
கண்ணீர் துடைக்க
என் கைகள் நீளும்
உறைந்து போகாமல்
உனது சொந்தங்கள் உன்னை சேரும்
இலங்கையில்
தமிழ் இனம் வாழும்...
தமிழ் வாழும்....
கண்ணீர் துடைக்க
என் கைகள் நீளும்
உறைந்து போகாமல்
உனது சொந்தங்கள் உன்னை சேரும்
இலங்கையில்
தமிழ் இனம் வாழும்...
தமிழ் வாழும்....
2 comments:
ஓ...முகிலன் இதுக்குதானா
3- 4 நாட்கள் பொறுமையில் இருந்தீர்கள்..என்னோடு என் கவிதை பற்றி நிறையக் கதைக்க வேணும் என்றதும் இதுதானா! மனம் நிறைகிறது.அரசியலை நாம் ஒன்றும் செய்யமுடியாது.சாதாரண மக்கள் எங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையும் அன்பும் ஆதரவும் இருக்கே என நினைக்கையில் இறக்கைகள் முளைத்து உயரப் பறப்பது போல் ஒரு உணர்வு.
இல்லை...இல்லை உண்மையிலேயே பறக்கிறேன்.நன்றி...நன்றி முகிலன்.
//***
தோட்டாக்கள் உன்னை துளைக்கும் பொழுது என் மேலும் பட்டு தெறித்தது, உன் ரத்த துளிகள். என் ரத்தம் கொதித்தது... உள்ளம் துடித்தது... ஏன் என்றால் நான் இந்தியன்
***//
இந்தியாவில் உள்ள எல்லோர்கும் ரத்தம் கொதிப்பதில்லை, நம் தமிழர்களூக்கு மட்டும்தான் கொதிக்கும், இங்கு இந்தியாவில் நம் தமிழ் மினவர்களை இலங்கை கடல்துறையினர் கொத்து கொத்தாக சுட்டு கொன்றாலும், இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக சுட்டு கொன்றாலும் இந்திய அரசு ஒருநாளும் கவலைபட்டதில்லை
இலங்கையில் மட்டும் அல்ல எங்கு தமிழர்களூக்கு எதிராக வன்முறை நடந்தாலும், தமிழக அரசோ, இல்லை தமிழக அரசியல் தலைவர்களோ இல்லை தமிழக மக்களோதான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், தமிழ் நாட்டை பொருத்தவரை நடுவன அரசு ஒரு மண்தான், நாம் இந்தியாவுடன் இருப்பதால் பலவற்றை இழந்தோம் எ-டு மொழியின் தனித்துவத்தை இழந்தோம், தமிழன் என்ற அடையாளத்தை இழந்தோம், நாணயங்களில், ரூபாய் தாளில் தமிழை இழந்தோம் பின் வரும் காலங்களில் நம் தமிழர்களூக்கு என்று என்ன அடையாலம் இருக்கிறது
Post a Comment