Friday, June 5, 2009

பாபா ஆம்தே - தொழுநோயாளிகளின் தோழன்


பாபா ஆம்தே, முரளிதர் என்ற பெயர் தாங்கி ஒரு பிராமண குடும்பத்தில் 1914 ஆம் ஆண்டு கிறிஸ்துவின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் (டிசம்பர் 26) பிறந்தார். 'பாபா' எனப்படும் பெயர் அவர் மேல் உள்ள பிரியத்தினால் அவர் சிறுவயதிலிருந்த பொழுது அவரது பெற்றோரால் அவருக்கு சூட்டப்பட்டது.

சிறுவதிலிருந்தே அவரிடம் முற்போக்கு சிந்தனை காணப்பட்டது. படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லாமல் வீட்டில் வேலை செய்பவரின் குழந்தைகளுடன் விளையாடி கழித்தார். இதனால் அவரை ஆச்சாராமான அவருடைய தந்தைக்கு பிடிக்காமல் போனது. தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார் ஆம்தே.

வக்கீலுக்கு படித்த ஆம்தே, சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட தியாகிகளுக்காக வாதாட ஆரம்பித்து தன்னையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டார்.

காந்தீய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், காந்தியை போலவே கதராடை உடுத்தி விளிம்பு நிலை மனிதர்களுக்காக பாடுபட ஆரம்பித்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்திலிருந்து கைவிடப்பட்ட தொழுநோயாளிகளிடம் அவரின் இளகின மனம் சென்றது. அவர்களை ஒதுக்கி வைத்த சமூகத்திடம் அவர்களைப்பற்றி விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. இதற்காக கல்கத்தா சென்று தொழுநோயை பற்றி படித்தார். பின்னர் தொழு நோயாளிகளுக்காக ஆசிரமமான 'அனந்த வனத்தை' நிறுவினார். 1952 இல் அரசாங்கத்தின் 250 ஏக்கர் நிலம் பெற்று ஆசிரமங்கள் அமைத்தார். ஆனந்த வனத்தில் வசிக்கும் குழந்தைகள்

நோயாளிகளையும் சமூகத்தில் கைவிடப்பட்டவர்களையும் ஆசிரமத்தில் சேர்த்து அவர்களுக்கு இலவச வைத்தியம் அளித்தார்.

அவருககு பக்க பலமாக இருந்து உதவியவர் அவருடைய துணைவி சாதனா.அவரது இரண்டு மகன்களையும் மருத்துவர்களாக படிக்க வைத்த பாபா அவர்களையும் தனது புனித பணியை தொடரச் செய்தார்.

இப்போது ஆனந்த வனத்தில் இரண்டு மருத்துவமனைகள், ஒரு பலகலை கழகம், ஒரு அநாதை இல்லம் மற்றும் கண் பார்வையற்றவர்கள் மற்றும் காத்து கேளாதோர் பள்ளிகள் உள்ளது.

அவர் சமூக சேவகியான மேத்தா பட்கருடன் இணைந்து நர்மதா அணைக்கட்டு போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

ராமன் மகசேசே, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் என பல விருதுகள் அவரை தேடி வந்தது.

இப்படி ஆண் வடிவத்தில் ஒரு அன்னை தெரேசாவாக விளங்கிய பாபா ஆம்தே புற்றுநோயால் தாக்கப்பட்டு பிப்ரவரி 9, 2008 அன்று உயிர் நீத்தார்.

ஆனந்தவனம் இன்றும் இந்த மா மனிதனின் தியாக வாழ்க்கைக்கு சாட்சியாக நிற்கிறது.

தகவல் உதவி நன்றி: விக்கிபீடியா

3 comments:

Surya said...

Good Message please continue like this

salai said...

"ஆண் வடிவத்தில் ஒரு அன்னை தெரேசாவாக விளங்கிய பாபா ஆம்தே .............." நன்றாக soneergal
itharku coments illai enpathu than varutham.

ராஜசுப்ரமணியன் S said...

இவரப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய இவ்வளவு விவரம் தெரியாது.நல்லவர்களைப் பற்றிய இதுபோன்ற இடுகைகள் நம் மனதிலும் நல்லெண்ணங்களை விதைக்கும்தானே?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...