
அவன்
கனவுகளில்,
காலையின் உதயத்தில்,
புல்லின் பனித்துளியில்,
வானவில்லின் வர்ணங்களில்,
குழந்தையின் ஸ்பரிசத்தில்,
மழைக்கு முந்தய வாசத்தில்,
தூறலின் சாரல்களில்,
அலைகளில் நனைகையில் ,
கணினி திரையின் பிம்பங்களில்,
பட்டாம்பூச்சியின் சிறகுகளில்,
ஒளித்து வைத்த மயிலிறகில்,
அவளையே கண்டும்,உணர்ந்தும்,ஸ்பரிசித்தும் வாழ்ந்தான்....
அடுத்தவளை காணும் வரை...!
----------------------------------------
4 comments:
முகிலன்,
ஓ...வெளிநாட்டுக் காதல்போல.
அல்லது பொய்யான காதல்.
கற்பனை சரிதான்.
அயல் நாடு எதற்கு ஹேமா. தமிழகத்தில் கூட இப்போ இப்படி தான் இருக்கு.
மென்மையை மென்மையாக சொல்லி, முரட்டுத்தனமாக முடிகிறது!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுமஜ்லா
Post a Comment