Saturday, February 27, 2010

சச்சின்..!வணக்கம். அலுவலக விடயமாக மூன்று வாரங்கள் வெளியூர் சென்றிருந்ததால் பதிவுலகம் பக்கமே வர இயல வில்லை. ஏகப்பட்ட நிகழ்வுகள் அதற்குள். எதோ தூக்கத்தில் இருந்து கண் விழித்தது போல இருக்கிறது. அடுத்த பதிவு எதைப் பற்றி எழுதலாம் என்ற சிந்தனையில் இருந்தபோது, சச்சின் ஒரு நாள் போட்டியில் இருநூறு ரன்கள் அளித்தது என் மனதில் பாலை வார்த்தார். சச்சின் பற்றி எழுத என்ன இருக்கிறது? அது தான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நம்மை அவர் சந்தித்து கொண்டே இருக்கிறாரே!. செய்தி தாள்களில், பூஸ்ட் இஸ் தி செக்ரெட் ஒப் மை எனர்ஜி என விளம்பரங்களில், அவ்வப்போது சதமடித்து தொலைகாட்சிகளில்.. இருந்தாலும், சச்சினின் ஒவ்வொரு செய்தியும் சுவாரஸ்யம்தான்.

கிரிக்கெட்டை கடவுளாக வணங்கும் ஒரு தேசத்தின் வரப்ரசாதம் சச்சின் என்றே இந்தியர்கள் நினைக்கிறார்கள். உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், அந்த ஒரு தொடர் தவிர, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குறிப்பாக பாகிஸ்தான் என நாடுகள் கிரிக்கெட்டில் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில், கவாஸ்கர் கபில் அசாருதீன் தவிர கிரிக்கெட்டில் நாயகர்கள் இல்லாது திண்டாடிக் கொண்டிருந்த பொது, பச்சிளம் பாலகனாக, பால் மனம் மாறா பருவ பதின் குழந்தையாக பதினாறு வயதில் சச்சின் நுழைந்து ஒரு சூறாவளியை ஏற்படுத்தியதை நாடுமறக்காது.1989 இல் தனது உலக அளவிலான கிரிக்கெட் வாழ்கையை பாகிஸ்தான் மண்ணில் துவங்கியபோது, சிறுவன் என சிரித்தார்கள். அவரது முதல் டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்தது வெறும் பதினைந்து ரன்கள். இருபது ஓவர்கள் கொண்ட ஒரு எக்க்ஷிபிஷன் போட்டியில் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த அப்துல் காதிரின் சுழல் பந்து வீச்சை சவட்டி எடுத்து ஒரே ஓவர்களில் 28 ரன்கள் எடுத்து மொத்தம் பதினெட்டு பந்துகளில் ஐம்பத்து மூன்று ரன்கள் எடுத்து உலகத்தையே வாய் பிளந்தது தன்னை கவனிக்க வைத்தார். அதன் பின்னர் கிரிக்கெட்டில் அவர் கடந்து வந்த பாதைகள், ரன்கள், ரெகார்டுகள்,சவால்கள் அனைத்தும்வரலாறு.

இந்திய கிரிக்கெட்டை, சச்சினுக்கு முன் சச்சினுக்கு பின் என பிரிக்கலாம். உலக அரங்கில் இந்தியா வெற்றிகள் குவிக்க ஆரம்பித்தது சச்சினின் வருகைக்கு பிறகு தான். உலக நாடுகளின் கிரிக்கெட் வீரர்களை கண்டு இந்தியா அஞ்சி கொண்டிருந்த வேளையில், சச்சின் என்ற மாபெரும் ஷக்தி கொண்ட இந்தியாவை கண்டு பிற நாட்டு விளையாட்டு வீரர்கள் அஞ்ச ஆரம்பித்தனர். சச்சினுக்கு பிறகு சவ்ரவ் திராவிட் என அடுத்தது திறமை மிக்க வீரர்களை இந்தியா கண்டெடுத்து, ஒரு வலிமை மிக்க டீமாக இந்திய கிரிக்கெட் மாறிய அதிசயம் நடந்தது. அவருக்கு தலைமை பொறுப்பை அளித்தபோது, அந்த பொறுப்பை தாங்கிக் கொள்ள தனது சின்ன தோள்களுக்கு வலிமை பத்தவில்லை என உணர்ந்து அதனை கிரிக்கெட் வாரியத்துக்கு உணர்த்தி தான் ஒரு சக விளையாட்டு வீரனாகவே இருக்க விருப்பப் படுவதாகவும், தலைமை ஏற்று இந்திய டீமை நடத்தி செல்ல தனக்கு வலிமை போதாது என வெட்கத்தை விட்டு ஒத்துக் கொண்டவர்.

அவரது தீர்மானத்தை போலவே, தலைமை பொறுப்பை விட்டு விலகியதும், தனது விளையாட்டு சொபிப்பதை தேசமே உற்று கவனித்தது.

எனது நண்பர் ஒரு சச்சின் பிரியர். அவர் பிறந்த தேதியும் சச்சினின் பிறந்த தேதியும் ஒன்று ( ஏப்ரல் 24). எனவே சச்சின் செஞ்சுரி அடிக்கும்போதெல்லாம் தனக்கு நல்ல காலம் என்பது அவரது நம்பிக்கை.( அவருக்கு நல்ல காலம் அடிக்கடி வந்திருக்க வேண்டும். அது தான் சச்சின் அடிக்கடி செஞ்சுரி போடுகிறாரே..!). சச்சின் நன்றாக விளையாடும்போதெல்லாம் அவருக்கு தொலைபேசி வாழ்த்துக்கள் சொல்வது எனது வழக்கமாக போனது. சச்சின் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுத்துவிட்டால், அவரது எதிர்காலத்தை அவரால் அறிந்து கொள்ள இயலாமல் போகும் என்பதே இப்போது அவரது கவலை.

அவருக்கு மட்டுமல்ல. சச்சின் இல்லாத இந்திய கிரிக்கெட் அணியை எந்த இந்தியனாலும் ஜீரணிக்க முடியாது. திராவிட் டெஸ்ட் போட்டியில் மிகவும் சிரமப்பட்டு ஆடி செஞ்சுரி போட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்திருப்பார். ஆனாலும் சச்சின் செஞ்சரி போடவில்லையே என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கவலையாக இருக்கும். இந்தியா தொற்றுபோனாலும் சச்சின் செஞ்சுரி அடித்திருந்தால் மகிழும் சச்சின் வெறியர்களை நான் அறிவேன்.

இந்திய வாண்டுகளுக்கேல்லாம் சச்சின் ஒரு கடவுள். அதனால் தான் வர்த்தகங்கள் எவ்வளவு கொடிகளை வேண்டுமானாலும் சச்சினுக்கு, விளம்பரங்களில்நடிக்க கொட்டி கொடுக்க தயாராக இருக்கின்றன.

சச்சினின் ரெகார்டுகளை பட்டியல் போட ஒரு பதிவு நிச்சயம் பத்தாது. இருந்தாலும் அவர் சென்ற வாரத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் கடந்த ஒரே வீரர் என்ற ரெகார்ட், அவரது ரேகார்டுகளுக்கேல்லாம் மகுடமாகிப் போனது. உலகம் போற்றும் கிரிக்கெட் வீரரான 'லிட்டில் மாஸ்டர்' கவாஸ்கர், தனது பட்டத்தை சச்சினுக்கு வழங்கியது மட்டுமல்ல..(இருவரும் குள்ளமானவர்கள்.) கபிலுடனான அவரது ஈகோ சண்டைகள் நாடறிந்தது. அவரது அறிக்கை மிகவும் முக்கியமானது. சச்ச்சின் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் கடந்தபோது அவர் சொன்னது..' நான் சச்சினின் கால்களை முத்தமிட விரும்புகிறேன்'

2011 உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தருவதே தனது லட்சியம் என கூறியுள்ளார் சச்சின்.

சச்சின் இருக்கும்போதே இந்தியா உலகக் கோப்பையை வென்றால் தான் உண்டு. ஏன் என்றால்.. சச்சின் இல்லாத இந்திய கிரிக்கெட் அணியை கற்பனை பண்ணி பார்க்க முடியவில்லை.

வாழ்த்துக்கள் சச்சின்.
--

12 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

I like your post. It was an amazing performance by Sachin.
Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

நிலா முகிலன் said...

நன்றி டெக் ஷங்கர். சச்சினின் அரிய புகைப்படங்கள் அருமை

அஹோரி said...

//இந்தியா தொற்றுபோனாலும் சச்சின் செஞ்சுரி அடித்திருந்தால் மகிழும் சச்சின் வெறியர்களை நான் அறிவேன்.//

உண்மைதாங்கோ

நிலா முகிலன் said...

நன்றி அஹோரி

சீனு said...

//திராவிட் டெஸ்ட் போட்டியில் மிகவும் சிரமப்பட்டு ஆடி செஞ்சுரி போட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்திருப்பார். ஆனாலும் சச்சின் செஞ்சரி போடவில்லையே என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கவலையாக இருக்கும்.//

நிறைய மேட்சுகளில் நீங்கள் கவனித்திருக்கலாம். என்றைக்கெல்லாம் ட்ராவிட் நன்றாக ஆடுகிறாரோ, அன்றைக்கெல்லாம் அவரை விட இன்னொருவர் நன்றாக ஆடி, மே ஆஃப் தெ மேட்ச் வாங்கி விடுவார்கள். இது ட்ராவிட்டின் லக்...

பிரசன்னா said...

//சச்சின் இருக்கும்போதே இந்தியா உலகக் கோப்பையை வென்றால் தான் உண்டு..

எனக்கும் சச்சின் டெண்டுல்கர பிடிக்கும்..ஆனா, இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..
அவர புகழ்ந்து எழுதுங்க,வேணாம்னு சொல்லல..
அதுக்காக சச்சின தவிர மத்த எல்லாரும் வெத்து வேட்டுன்ற மாதிரி சொல்ல வேணாமே..

தியாவின் பேனா said...

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

நிலா முகிலன் said...

உண்மை சீனு. எனக்கு மிகவும் பிடித்த ஆட்டக்காரர் டிராவிட். வெளிச்ச வளைவில் இருந்து தள்ளியே இருக்கும் ஒரு டீசன்ட் வீரர் அவர். அவரின் மட்டை பேசட்டும் என அடக்கியே வாசிப்பார். சச்சின் என்ற சூறாவளியில் சிக்கி கொண்ட தென்றல்அவர்.

நிலா முகிலன் said...

பிரசன்னா.. உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சச்சின் இந்திய கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு தான் நாம் மறக்கமுடியாத வெற்றிகள் ஈட்டியுள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும் சக ஆட்டக் காரர்களின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை. சச்சினும் இருந்தால் இந்திய அணி ஒரு வலிமையான அணிதான் என்றுஇருந்திருக்க வேண்டுமோ?

நிலா முகிலன் said...

nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn@diya

ஹேமா said...

முகிலன் கிரிக்கெட் நானும் தென்னைமட்டை வச்சு விளையாடியிருக்கேன்.அப்புறம் அது பத்தி தெரில.மன்னிச்சுக்கோங்க.உங்க பதிவை வாசிச்சேன்.
அறிஞ்சுகிட்டேன்.ஓட்டும் போட்டேன்.

நிலா முகிலன் said...

அடடே... நீங்கள் சுவிஸ் வந்துவிட்டதால்,ஒரு எதிர்கால கிரிக்கெட் வீரரை, இலங்கை இழந்து விட்டதே ஹேமா.. நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...