Saturday, May 8, 2010

மதர்!

வணக்கம்.
இது எனது நூறாவது பதிவு. நான் பதிவு எழுத ஆரம்பித்து ஒண்ணரை ஆண்டுகளில் நான் சம்பாதித்தது இருபத்தைந்து பாலோயர்களையும் இருபதாயிரத்தை நெருங்கும் ஹிட்ஸ் களையும். என்னை வாசித்த, வாசித்து கொண்டிருக்கிற, வாசிக்க போகும் அனைவருக்கும் எனது நன்றிகள். நான் ஒரு சிறந்த பதிவர் என்றோ சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன் என்றோ மார் தட்டி கொள்ள வில்லை. அதற்க்கு எனக்கு தகுதியும் கிடையாது என்றும் எனக்கு தெரியும். எனினும்  சிறுகுழந்தை ஒரு பலப்பத்தில் 'அ' 'ஆ' என எழுதி பழகுதல் போல என பதிவு பயணம் இப்போது துவங்கியுள்ளது என்றே கருதுகிறேன். தோள் கொடுக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும், குறிப்பாக எனது எழுத்தை நம்பி என்னை தொடரும் அந்த இருபத்தைந்து பேர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் ஒரு வாரமாக பதிவு இடாத காரணம், அன்னையை பற்றி அன்னையர் தினம் அன்று எழுத வேண்டும் என்ற உந்துதலே. தற்செயலாக இது எனது நூறாவது பதிவாகவும் அமைந்து விட்டதால், இந்தப் பதிவை, அன்னைக்கும் உலகெங்கும் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் காணிக்கைஆக்குகிறேன்.




அன்னை என்றாலே என் நினைவுக்கு வருவது அன்னை தெரேசா தான். ஒரு துறவி எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவர்.
 காரணம் அவர் இறந்த பொது அவருக்கென சொத்து எதுவும் இல்லை.
 அவரது சொத்து எல்லாம் தெருவில் கிடக்கும் ஆதரவற்றோரும் அநாதைகளும் தான்.
ஆகஸ்ட் 26 1910இல் அல்பானியா நாட்டின் குக்கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் கடைசி மகளாக பிறந்தவர் அக்னேஸ். தனது பதின்ம வயதுகளிலேயே ஒரு கத்தோலிக்க துறவியாக, பிறருக்கு சேவை செய்யும் செயல் வீரராக ஆக வேண்டும் என முடிவு செய்தவர், தனது பதினெட்டாவது வயதில் லோரெட்டோ என்ற சபையில் தன்னை ஒரு கன்னிகாஸ்த்ரியாக இணைத்து கொண்டார்.

அவரது சபையின் கிளை இந்தியாவில் இருக்க அவர் டார்ஜீலிங் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் கன்னிகாஸ்த்ரியாக பட்டம் பெற்றதும் இந்தியாவில் தான். அவரை சபை ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்ய பணித்தது. கல்கத்தாவின் வறுமையும், தெருவோரத்தில் கிடக்கும் குஷ்டரோகிகளும், முடவர்களும், கை விடப்பட்டவர்களும் அவர்களின் கஷடங்களும் அவரை வாட்ட, அவர்களுக்காக தனது சபையை துறந்து மிஷனரீஸ் ஆப சாரிடீஸ் என்ற சபையை ஆரம்பித்தார். அநாதை குழந்தைகள், தெருவில் கிடந்த தொழு நோயாளிகளை அழைத்து வந்து அவர்களை சுத்தப்படுத்தி, உணவளித்து, அவர்களுக்கும் ஒரு உலகத்தை தனது பதிமூன்று பேரால் ஆரம்பிக்கப்பட்ட சபையின் மூலம் காண செய்தார்.
அவரது சேவைக்கு கோடி கொடியாக பணம் கொட்டவில்லை. அவருக்காக அவர் மாளிகை எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை. அவரிடம் பணமும் கிடையாது. பிச்சை எடுத்தார். கல்கத்தாவின் தெருக்கள் முழுக்க அவரது பாதம் பட்டிருக்கிறது. தெரு தெருவாக பிச்சை எடுத்தார்.

ஒருமுறை ஒரு கடை காரனிடம் 'எனது குழந்தைகளுக்கு ஏதாவது தாருங்கள்' என கை ஏந்தியபோது, அவன் எரிச்சலில் அவரது இடது கையில் காரி துப்பி விட்டான். சிறிதும் சஞ்சலப்படாத அன்னை,'இது நீங்கள் எனக்கு கொடுத்த பரிசு, இந்த மறு கையில் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்' என சொல்ல, தன தவறுணர்ந்த அந்த கடை முதலாளி, அவருக்கு அன்று முதல் தீவிர கொடையாளியாக மாறினான்.

இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட அந்த சேவை நிலையம் இன்று உலகெங்கும் தனது கிளைகளை பரப்பி, கைவிடப்பட்ட மக்களுக்கு, ஒரு அன்னையாக சேவை புரிந்து வருகிறது.

மதர், நாட்டின் சிறந்த முதல்வர்களுள் ஒருவராக மதிக்கப்படும் வங்காள முன்னாள் முதல்வர் ஜ்யோதி பாசுவுக்கு சிறந்த நட்பாக இருந்தார். மதரின் இல்லம், வங்காள அரசாங்கம் மூலம் அவர் வழங்கியது தான்.

உலகின் உயரிய விருதான நோபெல் பரிசு முதல் அவர் வாங்காத விருதில்லை. 'வாழும் புனிதர்கள்' என டைம்ஸ் இதழ் இவரின் அட்டைப்படத்துடன் செய்தி வெளி இட்டது.


செப்டம்பர் 5 1997 மதர் மறைந்த அதே சமயத்தில் இளவரசி டயானாவும் மறைந்ததால், டயானாவின் உலகளாவிய அழகும் புகழும் அவளுடைய செய்தியே பிரதானமாக போனது. உலகத்தை, அழகு வென்றது.


மதரின் சேவை பற்றியும் குறை சொன்னவர்கள், சொல்பவர்கள் இன்றும் உண்டு. அவர் ஒரு மதத்தின் பெயரால் இதை செய்து மதம் மாற்ற முயல்கிறார் என்று. சாகும் தருவாயில், அன்னையின் அரவணைப்பில் இருந்த ஒரு குஷ்ட நோயாளி பின்வருமாறு கூறுகிறான்.

 'ஒரு பிச்சைக் காரனாக வாழ்ந்தேன். அன்னையின் கருணையால், ஒரு தேவதையை போல சாகிறேன்'

இந்த மகிழ்ச்சியை எந்த மதத்தினரும் அளிக்கலாம். ஒவ்வொரு மதத்தினரும் இப்படி சேவை நிறுவனங்கள் துவங்கி கைவிடப்பட்டோருக்கு சேவை செய்ய துவங்கினால், நாட்டில் எவருமே கைவிடப்பட்டவர்களாகவும்,அநாதைகளாகவும் இருக்கமாட்டார்கள்.

நாம் ஒவ்வொருவருமே, பிறக்கும்போது கைவிடப்பட்ட குழந்தைகள் தான். நம்மை தமது அரவணைப்பில் வைத்து பாதுகாப்பது நமது தாய் தான்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

8 comments:

ஸ்ரீ.... said...

முகிலன்,

நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதற்கும்!

ஸ்ரீ....

ஹேமா said...

முகிலன் வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் எழுதணும் நீங்க.

உலகறிந்த தாயின் பதிவோடு அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.உங்கள் வீட்டு அன்னைக்கும் வாழ்த்து முகிலன்.

karthik lekshmi narayanan said...

முகிலன்
இக்கணத்தில் நங்கள் இருக்கிறோம் உங்களோடு.!!
எழுத்து மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.!!:)

கேஎல்என்..!!

வால்பையன் said...

சதத்திற்கு வாழ்த்துக்கள் தல!

NILAMUKILAN said...

நன்றி ஸ்ரீ.

NILAMUKILAN said...

நன்றி ஹேமா.

NILAMUKILAN said...

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் கே எல் என்

NILAMUKILAN said...

வாங்க தல வால். உங்கள் வருகையால் இந்த பதிவு பக்கத்தை சிறக்க செய்து விட்டீர்கள். நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...