Friday, January 28, 2011

புகைப்பட கவிதை... மீனவ நண்பன்

(எனது முதல் பதிவு மீண்டும் மீள் பதிவாக...)
http://www.savetnfisherman.org/
அன்று...
சிதிலமான என்னை செப்பனிட
மனைவியின் தாலி தங்கத்தை விற்றாய்.

உன் வியர்வை துளிகளால்...
எனக்கு வர்ணம் பூசினாய்.

உன் சுவாசக் காற்றால்
என்னை சுத்தப்படுத்தினாய்

கிழிந்த புடவையுடன்...
மனைவி தைத்து தந்த வலையை
என் மேல் போர்த்தி அழகு பார்த்தாய்.

எனது ஓட்டைகளை அடைத்தாய்
குடிசை ஓட்டைகளில்
நனைந்தது உன் குடும்பம்.

நான் முன்னேறி செல்ல
துடுப்பு வழித்தாய்
கை வலித்தாய்
பொறுமை சகித்தாய்
வெய்யிலில் தகித்தாய்.

நீ பசித்திருக்க
என்னை மீன்களால் நிரப்பினாய்.

இன்று...
ஓலசத்தம்
உன் ஓலை குடிசையில்...

நான் கரை ஏறிவிட்டேன்.
நீ..?
இலங்கையிலா? இந்தியாவிலா?
சிதைக்கப்பட்டாயா சிறையிடப்பட்டாயா?

அலைகளின் ஓசையில்
அலறிகொண்டிருகிறது...
என் மௌனங்கள்..

- நிலா முகிலன்

-புகைப்படம் -நிர்மல்



6 comments:

மாணவன் said...

சரியான நேரத்தில் பதிவிட்டு பங்கெடுத்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

நம்மால முடிந்தவரை உதவியாய் இருப்போம்...

மதுரை சரவணன் said...

அருமை.. வாழ்த்துக்கள்

NILAMUKILAN said...

நன்றி மாணவன். மீனவருக்கு தோள் கொடுப்போம்.

NILAMUKILAN said...

நன்றி சரவணன்.

மாணவன் said...

வணக்கம் நண்பரே, உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...நன்றி

Rajasubramanian S said...

அருமை.வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...