Tuesday, June 2, 2009

உலக சினிமா - தி ரீடர் (The Reader)


உலக திரைப்பட வரலாற்றில் இங்கிலாந்து நடிகையான கேட் வின்ஸ்லெட் க்கும் ஒரு நல்ல இடம் இருக்கும். உலக திரைப்பட சரித்திரத்தில் இது வரை வந்த படங்களில் வசூல் ராஜாவாக இருப்பது தொண்ணூறுகளின் இறுதியில் வந்த 'டைட்டானிக்' தான். அதன் கதாநாயகி ரோஸ் ஆக நடித்த கேட் வின்ச்லேடின் அழகில் மயங்கியது அப்படத்தின் நாயகன் ஜாக் மட்டும் அல்ல. படத்தை பார்த்த நாமும் தான்.
டைட்டானிக் திரைப்படம் அவருக்கு ஆஸ்கார் பரிந்துரை அளித்தாலும் அவர்க்கு கிடைக்கவில்லை ( அந்த திரைப்படம் அனைத்து ஆஸ்கர்களை அள்ளினாலும் சிறந்த நடிகர்கள் விருது 'As good as it gets' திரைப்ப நடிகர்களான ஜாக் நிகல்சன் மற்றும் ஹெலன் ஹன்ட் க்கும் சென்றது.). பின்னர் பல படங்களில் கவனிக்க பட்டாலும் ( ஆறு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னர் கடந்த வருடம் தான் அவருக்கு 'தி ரீடர்' என்ற திரைப்படம் மூலம் கிடைத்தது

சும்மா சொல்ல கூடாது. அற்புதமான நடிப்பு. தனது தாழ்வு மனப்பான்மையை உள்ளுக்குளேயே பூட்டி வைத்துக் கொண்டு தனது உறுதிக்காக உயிரையே விலை பேசும் ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் கேத்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்பு நடக்கிறது கதை. உடம்பு சரி இல்லாத மைகேல்,என்ற பதினைந்து வயது சிறுவன், ட்ராம் வெயில் நடத்துனராக வேலை பார்க்கும் ஹன்னா வீட்டின் முன்பு வாந்தி எடுக்கிறான். அப்போது அவனை கடக்கும் ஹன்னா, அவனுக்கு உதவி புரிகிறாள். அவன் எடுத்த வாந்தியை கழுவி விடுகிறாள்.

மைகேல் இதனை வீட்டில் வந்து சொல்ல, அவளுக்கு அவன் தகுந்த முறையில் நன்றி சொல்லவேண்டும் என அவன் பெற்றோர் அவனுக்கு கூற ஒரு பூச்செண்டுடன் சில நாட்கள் கழித்து உடம்பு சரி ஆனதும் ஹன்னாவின் வீட்டிற்கு செல்கிறான். அவனை ஒரு சிறுவனை பாவிக்கும் ஹன்னா அவள் உடை மாற்றும் போது மறைந்து பார்க்கும் மைக்கேல் அவள் அழகில் மயங்கிப் போக அவள் வீட்டிற்கு அடிக்கடி போக ஆரம்பிக்கிறான். அவர்களின் பழக்கம் உறவு கொள்ளும் அளவுக்கு செல்கிறது.

ஒரு நாள் அவன் பள்ளியில் படிக்கும் பாடத்தை படிக்க சொல்கிறாள். மைக்கேல் அவளுக்கு லத்தீன் கிரேக்கம் பிரெஞ்சு போன்ற இலக்கியங்கள் எல்லாவற்றையும் அவனுக்கு படித்து காட்ட ஆரம்பிக்கிறான். அவளோ நீ மிக சிறந்த படிப்பாளன்( Reader ) என புகழ மைக்கேல் ஹன்னாவின் மேல் காதல் கொள்கிறான். அவள் இல்லாவிட்டால் அவனுக்கு உலகமே சூனியமாகிறது.

அப்போது தான் தான் மைகேலின் பருவத்துடன் விளையாடுவது அவளுக்கு புரிகிறது. அவனுடைய பருவம் தன்னால் வீணாவதை உணர்கிறாள். அவனை விட்டு விலக ஆரம்பிக்கிறாள். கடுமையான மனதுடன் அவளை பிரிகிறான் மைகேல்.

வக்கீலாவதற்க்காக மேல்படிப்பு படிக்கிறான். அப்போது அவனை கோர்ட்டில் வாதாடுவதை நேரில் காண அவனுடைய வகுப்பாசிரியர் மற்ற மாணவர்களை அவனுடன் கோர்ட்டுக்கு அழைத்து செல்கிறார். அன்று வந்துள்ள கேஸ், நாஜி படையை சேர்ந்த ஒரு பெண் சில பெண்களை உயிருடன் எரித்த வழக்கு. குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்ணை கண்டதும் அதிர்ச்சி ஆகிறான் மைகேல். ஆம் அந்த பெண் ஹன்னா . தான் அப்படி செய்யவில்லை என கடைசி வரை வாதிடுகிறாள். ஆனால் உடன் இருந்த பெண்களோ அவள் அப்படி செய்ய சொல்லி கடிதம் எழுதி தந்தை குறிப்பிட நீதிபதி அவ்வாறு நடந்ததா என கேட்கிறார். ஹன்னாவும் ஒத்துக் கொள்கிறாள். மைக்கேல் கண்ணீர் விட்டு கதறுகிறான்.

இங்கு தான் ஒரு மர்மம் உடைகிறது. ஹன்னாவிற்கு எழுத படிக்க தெரியாது. அதனாலேயே அவள் மைக்கிலை படிக்க சொல்லி கேட்கிறாள் அவளுக்கு இலக்கியங்களிலும் வாசிப்பிலும் அதி தீவிர நாட்டம் அல்லது வெறி இருந்தாலும் அவளுக்கு எழுத படிக்க தெரியாததால் மைக்கிலை படிக்க சொல்லி அதற்க்கு விலையாக தன்னையே தருகிறாள். ஆனால் அவளுக்கு படிக்க தெரியாததால் அவளுக்குள்ள தாழ்வு மனப்பான்மையால் தனக்கு எழுத படிக்க தெரியாது என்கிற உண்மையை மறைக்கிறாள். நீதிமன்றத்தில் இருந்த அவளுடன் வேலை செய்த பெண்கள் அவள் எழுதி கொடுத்தால் என கூறியதும் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொள்கிறாள். எங்க அவளுக்கு எழுத படிக்க தெரியாது உலகத்துக்கு தெரிந்துவிடுமோ என அஞ்சியே அவ்வாறு ஒத்து கொள்கிறாள்.

தனக்கு உண்மை தெரிந்தும் அவளை காப்பாற்ற முடியவில்லையே என மருகும் மைக்கேல் அவளை சிறையில் சென்று சந்திக்க முயன்று சந்திக்காமலேயே திரும்பி விடுகிறான். தினமும் புத்தகங்கள் வாங்கி படித்து ஒலிநாடாக்களில் பதிவு செய்து ஹன்னாவிற்கு அனுப்புகிறான். குரலை கேட்டதும் அது மைக்கேல் தான் என உணர்கிறாள் ஹன்னா. அவளுக்கு சிறையிலும் இலக்கியங்கள் படிக்க நேர்ந்தது உணர்ந்து ஆனந்தபடுகிறாள். மைக்கேல் அனுப்பிய ஒலிநாடாக்களை கேட்டபடி அந்த புத்தகத்தை சிறையிலிருக்கும் நூலகத்தில் வாங்கி இரண்டையும் ஒப்பிட்டு படிக்க துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக எழுத படிக்க துவங்குகிறாள் ஹன்னா.( படத்தின் இப்பகுதி வரை மைக்கேல் தான் Reader என நினைத்திருந்தேன். உண்மையில் ஹன்னா தான் படத்தின் தலைப்பான 'The Reader').

காலங்கள் ஓடுகின்றது. மைக்கேல் லண்டனில் ஒரு சிறந்த வக்கீலாகிறான். ஹன்னாவிற்கு அவன் ஒளிநாடாகளை அனுப்புவதை நிறுத்த வில்லை. ஹன்னா விடுதலையாகும் நாள் வருகிறது. சிறையிலிருந்து மைக்கிளுக்கு அழைப்பு. ஹன்னவுக்கு தெரிந்தவன் அவன் ஒருவனே என அழைத்து அவளை விடுதலை அடையும் நாளில் அவளை அழைத்து செல்ல வேண்டுகிறார்கள். அப்போது தான் ஹன்னாவை சந்திக்கிறான் மைக்கேல். பலவித பரவசங்களுடன் மைக்கிலை எதிர்கொள்ளும் ஹன்னா அவன் மிகவும் அந்நியமாக தன்னிடம் பேசுவதை எண்ணி அதிர்ச்சி அடைகிறாள். அவன் திருமணம் செய்து விவாகரத்து ஆனதையும் தனக்கு மகள் ஒருவள் உண்டு என்றும் அவளிடம் கூறுகிறான். தனக்கு எழுத படிக்க தெரியாத விஷயம் மைக்கிளுக்கு தெரிந்தது அறிந்து வேதனை அடைகிறாள்.

ஹன்னாவின் விடுதலை நாளன்று பூங்கொத்துடன் சிறைக்கு வரவேற்க செல்லும் மைக்கேலுக்கு அவள் தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வருகிறது. அவள் கட்சியால் அவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அவளிடம் இருக்கும் சேமிப்பு பணத்தை தான் எரித்ததாக சொல்லப்பட்ட பெண்களில் தப்பி பிழைத்த ஒரு பெண்ணுக்கு அளிக்க அக்கடிதத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறே செய்கிறான் மைக்கேல். பலநாட்கள் கழித்து தன மகளை ஹன்னாவின் கல்லறைக்கு அழைத்து சென்று அவளது கதையை கூற துவங்குவதுடன் படம் முடிகிறது.
கேத் வின்ச்லேடின் நடிப்புலக வாழ்க்கையில ஒரு மைல் கல் இப்படம்.

படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் அற்புதம். படத்தின் ஆரம்பத்தில் வரும் பாலுணர்வு காட்சிகள் சற்று அதிகப்படியாக இருந்து ஆயாசத்தை தருகின்றன. அதனை சிறிது குறைத்திருக்கலாம்.

மற்றபடி 'தி ரீடர்' ஒரு நல்ல திரைப்படம். கேத்தின் நடிப்புக்காக படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

17 comments:

Anonymous said...

படம் இயூதர்களின் இடர்பாடுகளை உலகுக்கு எடுத்து சொல்லும் படம். அந்த படத்தை அனைத்துலக மக்களும் பாராபட்ச்சம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றால் அந்த ஆரம்ப காட்சிகளின் அவசியம் இந்த படத்திற்கு வருகின்றது.

பனிமலர்.

Raj said...

நல்ல படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

geethappriyan said...

முகிலன்
இது நிஜமாகவே என்னை மிகவும் உலுக்கிய படம்,எவ்வளவு பெரிய அதி பயங்கரத்தை செய்து விட்டு குற்றுணர்வு கொஞ்சமும் இன்றி சாதுவான பூனை மாதிரி சிறுவனுடன் உறவு கொள்ளும் ஒரு பாத்திரம்,யாரும் செய்ய தயங்கும் சவாலான பாத்திரம்.தினமும் கதை கேட்டல் பின் புணர்தல்,என்ன ஒரு வித்தியாசமான உறவு முறைகள் ,அவளது கதை கேட்கும் ஆர்வம்.எல்லாதிற்கும் மேல்
அவளுக்கு கடைசியில் ஏற்ப்படும் குற்ற உணர்வு
தற்கொலைக்கு தள்ளுகிறது.
தான் திருடிய சாக்லேட் டப்பாவிலே பணம் சேர்த்து வைப்பது,சிறுவனுக்கு உடலுறவு சொல்லித் தருவது,அவனை தலை முதல் கால் வரை தேய்த்து குளிப்பாட்டுவது,என்று கேட நடிப்பு அபாரம்.
கேடடின் தற்போதைய வயதிர்க்கேற்ற பாத்திரம்,
வயதான கேட்டின் ஒப்பனையும் அற்புதம்

NILAMUKILAN said...

உங்கள் கருத்துக்கு நன்றி பனிமலர்.

படத்தின் ஆரம்ப காட்சிகள் யூதர்களின் இடர்பாடுகளைப் பற்றி பேசவில்லை. அந்த சிறுவனின் பாலியல் வேட்கையை அவள் தீர்த்து வைப்பதாகவே படுகிறது. அந்த சிறுவனும் அவளை காதலியாக ஏற்றுக்கொண்டு மகிழ்கிறானே? இதில் இடர்பாடுகள் எங்கே இருந்து வந்தது என்பதே என் கேள்வி.

NILAMUKILAN said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ்.

NILAMUKILAN said...

உங்கள் வருகைக்கு நன்றி கார்த்திகேயன். கேட் வின்ஸ்லெட் நடித்த கமர்ஷியல் படமான 'The holiday' படமும் எனக்கு பிடித்த ஒன்று. அதிலும் அற்புதமாக நடித்திருப்பார். பார்த்திருக்கிறீர்களா?

NILAMUKILAN said...

நன்றி அனானி.

geethappriyan said...

Dear Mugilan,
Ihave posted a blog on this Film,(I have drafted it before 2 months)and after saw your review,i posted it after a fine tuning,please give ur valuable comments,it will useful to me.
i haven't seen her Holiday movie,i will see soon and revert back to you.
thanks dude for refresh my memories
karthikeyan

NILAMUKILAN said...

கார்த்திகேயன்,
நிச்சயம் உங்கள் பதிவை படிக்கிறேன்.

குமரன் said...

ஒரு முறை படங்களை வாங்கும் பொழுது, விருதுகள் பெற்றிருக்கிறதே என வாங்கினேன். துவக்க காட்சிகள் நீங்கள் சொன்னபடி, நிறைய படுக்கையறை காட்சிகள் வருவதால்... அப்படியே எடுத்து வைத்துவிட்டேன். உங்கள் விமர்சனத்திற்கு பிறகு, மீண்டும் பார்க்கலாம் என முடிவுக்கு வந்திருக்கிறேன். நன்றி.

geethappriyan said...
This comment has been removed by the author.
NILAMUKILAN said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நொந்தகுமாரன். ஆரம்ப காட்சிகளில் இது 'அந்த' மாதிரி படமோ என எழும் ஐயத்தை தவிர்க்க முடியவில்லை. எனவே தான் அம்மாதிரி காட்சிகளை சிறிது குறைத்திருக்கலாம் என கருத்திட்டேன். எனினும் கேத்தின் நடிப்பு படத்தின் குறைகளை தூக்கி சாப்பிட்டு விடுகிறது.

NILAMUKILAN said...

நன்றி கார்த்தி. அடுத்து என்ன எழுதுவது என யோசித்து வருகிறேன்.
பியானிஸ்ட் படம் பார்த்தேன். நான் விரும்பும் இயக்குனர்களில் முக்கியமானவர் போலன்ஸ்கி. சீக்கிரம் அத்திரைப்படம் பற்றியும் ரோமன் போலன்ஸ்கி குறித்தும் பதிய இருக்கிறேன்.

திரைப்படங்கள் தவிர்த்தும் பல எழுதி உள்ளேன். பிரிவுகளை பார்க்கவும் படித்து கருத்து சொல்லுங்கள்.

nanri

Muruganandan M.K. said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி. கட்டாயம் பார்க்க வேண்டும் எனத் தூண்டுகிறது.

ஹேமா said...

மனதை நெகிழவைக்கும் அருமையான படம்.நிச்சயம் தேடிப் பார்ப்பேன்.நன்றி முகிலன்.

Anonymous said...

முகிலன், படம் இயூதர்களின் அந்தகால கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டும் படம். அந்த ஆரம்பகாட்சிகள் படத்தை இளைய சமுதாயத்தை படத்தினில் கட்டி போடும் ஒரு உத்தி. அந்த காட்சிகளுக்கு பிறகு படம் சொல்ல வந்த பிரச்சணைகளை மட்டுமே பேசிச் செல்லும் படமாக தான் இருக்கும்.

படபிடிப்பில் இந்த மாதிரியான காட்சிகளை கதைகள காட்சிகள்(Establishment shots) என்று சொல்வார்கள். படம் எந்த களத்தில் நடக்கின்றது என்று மனதில் பதிய வைக்கும் காட்சிகளாக அவைகள் அமையவேண்டும்.

அதைத்தான் எனது கருத்தில் சொன்னேன்.........

பனிமலர்

NILAMUKILAN said...

புரிகிறது பனிமலர். உங்கள் கருத்துக்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...