Friday, July 31, 2009
நகைச்சுவை குற்றங்கள் -1
கொலை செய்வது, திருடுவது,கற்பழிப்பது மட்டும் தான் குற்றம் என்று இல்லை. அமெரிக்க செய்தி தாள்களை பார்த்தால் சில சிரிப்பான கைதுகளும் அகப்படும். அவற்றில் சில.
மோட்டார் சேஸ்
--------------------------------
ஒரு ஞாயிற்று கிழமை.யூட்டா மாநிலத்தின் சிறு நகரொன்றில் காவல் நிலையத்துக்கு ஏகப்பட்ட புகார்கள். ஒரு கார் ரோட்டில் தறிகெட்டு ஓடுவதாக. அந்தக் காரை துரத்தியது காவலர் வண்டிகள். அவர்களுக்கு ஆச்சர்யம். குற்றவாளிகள் காவலரை கண்டால் மிக வேகத்தில் காரில் பறப்பது வழக்கம். அப்போது தானே தப்பிக்க முடியும். ஆனால் இந்த கார் நாற்பது மைல் வேகத்துக்கு மேல் போகவில்லை. துரத்தப்பட்ட கார் ஓரிடத்தில் நிற்க, காவல் கார்கள் சுற்றி வளைக்க அதிலிருந்து வெளிப்பட்டது ஒரு ஏழு வயது சிறுவன். சர்ச் செல்வதை தவிர்க்க தன பெற்றோரிடம் தப்பிக்கவே தான் காரை ஒட்டி சென்றதாக சொல்ல தலையை சொரிந்தது போலீஸ். அச்சிறுவன் மீது வழக்கு போடாமல் எச்சரித்து அனுப்பி விட்டது போலீஸ்.
காவல் ஹோட்டல்.
-------------------------------------
லூசியான மாநிலத்தில் மிட்செல் தேச்லட்டே என்ற இருபத்தைந்து வயது இளைஞன் ஸ்டைலாக தனது கரை பார்கிங் லாட்டில் பார்க் செய்து விட்டு ஒரு கட்டிடத்தின் கதவை தட்டி, திறந்தவரின் சீருடையை கண்டு சிரிப்பை அடக்கி கொண்டு
' ஒரு ரூம் புக் பண்ணனும் கொஞ்ச நேரத்தில் என் கேர்ள் பிரண்டை கூட்டிட்டு வரேன் ' என்று சொல்ல அவர் அவன் தலையில் தட்டி விலங்கிட்டு விட்டார். பின்னே, குடி போதையில் போலீஸ் ஸ்டேஷனை ஹோட்டல் என நினைத்து இந்ஸ்பெக்தரிடமெ ரூம் வேண்டும் என்று கேட்டால்?... அய்யா குடிபோதையில் கார் ஒட்டியதற்காக கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
நன்றி: The Examiner.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இப்படியெல்லாம் நடக்குதா! கொஞ்சம் சிரிக்க வச்சதுக்கு
நன்றி முகிலன்.
இரண்டாவது செம்ம :-) சிரிப்பு
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நன்றி ஹேமா. நான் எனது காரை சர்வீஸ் க்கு விட்டிருந்தபோது கிடைத்த இடைவேளையில் அமெரிக்க செய்தி தாளில் கண்ட செய்திகள் இவை.
நன்றி சுரேஷ். எனக்கும் அவ்வாறே இருந்தது.
நன்றி துபாய் ராஜ. உங்களுக்கு என நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
Post a Comment