Tuesday, November 2, 2010

பூலோக சுவர்க்கம் - 3 சுவிஸ் பயணம்.

                                       ஆர் நதியின் அணைப்பில் பெர்ன் நகரம்.
சூரிக்கில் இருந்து ஒரு மணி நேர ரயில் பயணத்தில்,நாங்கள் பகல் இரண்டு மணிக்கு பெர்ன் சென்று சேர்ந்தபோது, அங்கு இருந்த கட்டடங்களும், சாலைகளும், அது ஒரு மிகப்பழமையான ஒரு நகரம் என்பதை உணர்ந்தேன். காண்டினெண்டல் என்ற விடுதியின் அறையை நான் முன்பே முன்பதிவு செய்திருந்தேன். இருவர் படுக்க கூடிய ஒரே ஒரு படுக்கை, ஒரு மேசை மற்றும் ஒரு சோபா என எட்டுக்கு எட்டு அளவில் இருந்த அறை. சிறிது ஓய்வு எடுத்து விட்டு பெர்ன நகரில் நடை பயணம் செய்தோம். பெர்ன நகரத்தின் தெருக்களை அடித்தபடி மேசை சேர்கள் போடப்பட்டு மக்கள் குடித்துக் கொண்டோ, உண்டு கொண்டோ இருந்தனர். நான் விசாரித்த பொது, வெயில் காலங்களில் மக்கள் வெளியில் மட்டுமே அமர்ந்து உண்ணவும் குடிக்கவும் விரும்புவர் என நான் அறிந்தேன். சாலை முழுவதும் நமது ஊரைப் போல தார் சாலையாக இல்லாமல் கற்களாக பதிக்கப் பட்டு இருந்தது. பெர்ன் நகரம் பழமையான நகரமாதலால் யுனெஸ்கோவின் பராமரிப்பின் கீழ் வருகிறது என உணர்ந்தேன். மக்கள் அனைவரும் நட்பாக புன்னகைத்தனர்.
                                            புராதனமான 'ட்சீட்கிலோக்' (Zytglogge)
வலை தளங்களை ஆய்வு செய்த பொது பெர்ன நகர வரலாறு, என்னை கி பி பனிரெண்டாம் நூற்றாண்டுகளுக்கு அழைத்து சென்றது.
  1196 ஆம் ஆண்டு பெர்தோல்ட் என்பவர் 'ஆர்' என்ற ஆற்றின் படுகையில் இந்த நகரை கண்டுபிடித்து தான் வேட்டையாடிய ஒரு கரடியின் நினைவாக 'பெர்ன் ' என இந்நகரை பெயரிட்டார். ஆர் என்ற அந்த ஆறு நகரின் குறுக்கே வளைந்து வளைந்து ஓடுகிறது. நகரின் மத்தியில் வீற்றிருக்கும் 'ட்சீட்கிலோக்' (Zytglogge) (அப்படித்தானே சொல்லவேண்டும்?) என்ற மணிகூண்டு க்கு வயது பனிரெண்டு நூற்றாண்டுகள்.
                                                  பெர்ன் நகர தெரு ஒன்றில்...
தடுக்கி விழுந்தால் வங்கிகள். டென்னர், கூப் என காய்கறி கடைகள். பெர்ன நகர தெருக்கள் எப்போதும் திருவிழா பூண்ட நகரமாகவே இருக்கின்றன. மக்கள் அனைவரும் கொண்டாட்டமாகவே இருக்கின்றனர். எவர் முகத்திலும் எந்த ஒரு கவலையோ, டென்ஷனோ பாக்க முடியவில்லை. அனைவரின் முகத்திலும் புன்னகை. உங்களுக்கு எப்போதும் அவர்களின் 'ஹலோ' உண்டு.சுவிஸ்சிலேயே பெரிய நகரங்களாக ஜுரிச் மற்றும் ஜெனீவா இருந்தாலும் பெர்ன் நகர் தான் தலைநகரம். பெர்ன சிறிய நகரமாக இருந்தாலும், கனஅளவில் இங்கு மக்கள் பெருக்கம் அதிகம்.பெர்ன நகர தெருக்களில் மக்கள் முழங்கால் உயர செஸ் காய்களுடன், செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். டூரிஸ்டுகள் மிக அதிகமாக காணப்பட்டனர். சுவிஸ் தேசத்தின்  பாராளுமன்றம் இங்கு தான் உள்ளது( காண்க படம்.).
                                           சுவிஸ் தேசத்தின் பாராளுமன்றம்.
எங்கள் பயண அட்டவணைப்படி நாங்கள் செல்ல இருந்த நகரங்களான ஜெனீவா மற்றும் இண்டர்லாகன் பெர்னின் அருகே இருந்ததால், இந்த நகரில் தங்கினோம்.  மாலை பெர்ன நகரம் சுற்றி வந்தந்தால் அகோரப் பசி. அங்கே இருந்த ஒரு தென் தமிழ் உணவகம் கண்டு பிடித்து இட்லி சாம்பார் உண்டோம் .இட்லி குளிர் பதன பெட்டியில் இருந்து வந்ததால், சுவை குறைந்திருந்தாலும், விமானத்திலிருந்து சரியான உணவு எங்களுக்கு இல்லாததால், அமிர்தமாக இருந்தது சாம்பார். அனால் விலை எவ்வளவு தெரியுமா?. நான்கு இட்லி பதினைந்து சுவிஸ் பிராங்குகள். நமது இந்திய மதிப்பின் படி எழுநூறு ருபாய். இருந்தாலும் பசியில் விலை பெரிதாக தெரியவில்லை. ( அமெரிக்காவில் நான்கு இட்லி ஐந்து டாலர். சுவிஸ்சில் அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிகம். பயண அசதியையும் பொருட் படுத்தாது பெர்ன் நகரை நடை வலம் வந்து அறையில் அடைந்தோம்.                    ஆறு மணிக்கெல்லாம் உறங்கிவிடும் பெர்ன் நகர தெருக்கள்...
இரவு எட்டு மணி வரை வெளிச்சம் இருந்தாலும்,சுவிஸ் தெருக்கள் மாலை ஆறு மணிக்கெல்லாம் அமைதி ஆகி விடுகிறது. ஏழு மணிக்கு பிறகு திறந்திருப்பது உணவகங்களும் பார்களும் தான். சரியான சோம்பல் நகரம் என நாங்கள் பேசிக் கொண்டோம்.

வெளியே தெருவில் இரவு ஒரு மணி வரி லியோபாலத் என்ற பாரிலிருந்து திடும் திடும் என இசையும் கேளிக்கையும் நடந்து கொண்டிருந்ததை அரை தூக்கத்தில் கவனித்தவாறே உறங்கிப் போனோம்.

மறுநாள், ஜெனீவாவை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது.


பயணம் தொடரும்...
--

13 comments:

கோவி.கண்ணன் said...

நானும் சென்று வந்த நாடு. இன்னும் மறக்க இயலாத அழகு. மீண்டும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.

காவேரி கணேஷ் said...

அருமையா இருக்கு கட்டுரை..

வாழ்த்துக்கள்..

சங்கவி said...

அழகான பயணம்....

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

நிலா முகிலன் said...

நன்றி கோவி. உங்கள் கட்டுரையும் வாசிக்கிறேன். தீபாவளி வாழ்த்துக்கள்.

நிலா முகிலன் said...

நன்றி காவேரி கணேஷ் தீபாவளி வாழ்த்துக்கள்.

நிலா முகிலன் said...

நன்றி சங்கவி. தீபாவளி வாழ்த்துக்கள்.

Anonymous said...

thaks for your post,i really want to go swiss,dont take too long time ur post please , i wait eagely ur next post thx once again

Hameed said...

Rembo nalla irrukku

vanjimagal said...

Nice post. Its interesting-- My kids names are Nila and Mukil. I'll show them your blog.
Happy Deepavali

நிலா முகிலன் said...

நன்றி அனானி. கூடிய சீக்கிரம் அடுத்த பதிவை பதிவிடுகிறேன்.

நிலா முகிலன் said...

நன்றி ஹமீது

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...

நல்ல எழுத்து நடை என்னக்கு எட்டா கனி ம் ம் உங்களுக்கு ,,,enjoy..

ஹேமா said...

சோம்பல் நகரமா....கவனிக்காமப் போய்ட்டேனே உங்களை !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...