Monday, November 15, 2010

கிளைமாக்ஸ் கதைகள்-6: வயசுப் பொண்ணு..!

ரு இருபது வயது வாலிபனையும் ஒரு வயது வந்த பெண்ணையும் ஒரு இரவில் தனியே மூன்று மணி நேரங்கள் விட்டு சென்றால், எவ்வளவு பிரச்சனை வரும் என்பது உங்களுக்கு தெரியும் தானே. எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட என்னை வளர்த்தது என் அக்கா தான். அக்காவுக்கு ஒரு பெண் இருந்தாள். கிரிஜா என்பது பெயர். அவள் பிறந்த தினத்திலிருந்தே, இவன் தான் உன் தாய்மாமன் என என்னை காட்டி தான் வளர்த்தாள்.

இருந்தாலும் எனக்கும் கிரிஜாவுக்கும் பிடிக்காமல் போனது. அவளுக்கு வாய் பேச வரவில்லை. என்றாலும் என்னை அக்காவிடம் போட்டு கொடுக்க அவள் தயங்கியதில்லை. இப்படித்தான் ஒரு முறை, நான் திருட்டு தம் அடிக்க வைத்திருந்த ஒரு சிகரெட்டை அக்காவிடம் குடுத்து விட்டாள். இது பரவாயில்லையே.. நண்பர்கள் என்னிடம் கொடுத்து ஒளித்து வைக்க சொல்லியிருந்த மதுபுட்டியையும் நொண்டி எடுத்து உடைத்துப் போட அக்கா உடனே... 'உன்னை எப்படி எல்லாம் வளர்த்தேன்', என ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.அக்காவிடம் நான் எடுத்திருந்த நற்பெயர் தூள் தூளானது.

என்னை தேடி என் கல்லூரி நண்பர்கள் யாரேனும் வந்து விட்டாள் போதும், என் அறையிலேயே இங்கும் அங்கும் சுத்தி சுத்தி வருவாள். அவளுக்கு என் நண்பர்கள் கொடுக்கும் பறக்கும் முத்தங்களுக்கு வெக்கத்துடன் சிரிப்பதை கண்டு ஆத்திரமாக வரும் எனக்கு. என்னதான் இருபதாம் நூற்றாண்டு என்றாலும், என் வீடு முழுக்க அவள் குட்டை பாவாடையில் தான் வலம் வருவாள். என் அக்காவும் கண்டு கொள்வதில்லை.

அன்று அக்கா தயங்கி தயங்கி என்னிடம் வந்து நின்ற பொது அவள் மனதில் என்ன இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. மாமா வேறு அன்று சீக்கிரமே வந்து விட்டார்.
'இன்னிக்கு என்ன நாளு ன்னு நீ மறந்துட்ட சுந்தரேசா' என்று அக்கா சொன்னபோது கூட நான் யோசனை செய்து பார்த்து தோற்றுவிட்டதை ஒத்துக் கொண்டு...
' ஸாரிக்கா நேஜம்மாவே எனக்கு என்ன நாளுன்னு ஞாபகம் வரலை'

' அக்கா மேல பாசம் இருந்தா இதெல்லாம் மறப்பியா இன்னிக்கு என் கல்யாண நாள்..' எனக் கண்ணை கசக்க ஆரம்பித்து விட்டாள்.

' இல்லக்கா அது வந்து... ' என நான் சமாளிக்க ஆரம்பிக்க உடனே அக்கா கண்களை துடைத்துக் கொண்டு...( இந்த பொம்பளைங்க எப்டி தான் டக் னு அழுது டக் னு அழுகைய நிப்பாட்டிக்கறாங்களோ )

' வந்து... உன் மாமா என்னை இன்னிக்கு சினிமாக்கு கூட்டிட்டு போகனும்னு ஆசை படறார். நானும் சினிமா எல்லாம் பொய் ரொம்பா நாளாச்சா... வந்து இன்னிக்கு ஒரு மூணு மணி நேரம் நீ கிரிஜாக்கு தொணயா இருந்தின்னா நாங்க போய்ட்டு ஒடனே வந்துருவோம். அது என்னமோ அடல்ட் படமாம். கிரிஜாவ கூட்டிட்டு போகமுடியாது. அதனால...'

எனக்கு அந்த ஐடியா சுத்தமாக பிடிக்கவில்லை. நானாவது கிரிஜாவுடன் மூணு மணி நேரமாவது...என நினைத்தேன். என்றாலும் என் அக்காவை அழ வைத்து விட்டதால் உடனே சரி என்றேன்.

அக்காவும் மாமாவும் கிளம்பி சென்றதும், நான் கிரிஜாவிடம் இருந்து விலகியே இருந்தேன். இருந்தாலும்... அவள் மெல்ல என் அறைக்குள் நுழைந்தாள். புன்னகைகளையும் பார்வைகளையும் என்னால் சமாளிக்க முடியாமல், அவள் மேல் எனக்கிருந்த கோவம் எல்லாம் பொடிப் பொடியாக நான் அவளை மெல்ல நெருங்கினேன்...

மூன்று மணி நேரம் கழித்து படம் முடிந்து அக்காவும் அத்தானும் வீட்டில் நுழைந்தபோது, நான் கிரிஜாவை மடியில் வைத்து கொஞ்சி கொண்டிருந்ததை பார்த்து அக்காவும் மாமாவும் அதிர்ச்சி அடைந்தனர்.

' எலியும் பூனையுமா இருந்த மாமனும் மருமகளும் எப்படி கொஞ்சிக்கறாங்க பாருங்க..' என அக்கா சொல்ல...
' என்ன மச்சான் ரொம்ப படுத்தினாளா' என என் மாமா வினவ...
' இல்லை மாமா இவள் ரொம்ப சமத்து. நாங்க ரெண்டு பெரும் ரொம்ப நெருங்கின நண்பர்களா ஆய்டோம். உங்க ரெண்டு பேருக்கும் தான் நான் தேங்க்ஸ் சொல்லணும் ' என்றேன்.

என்ன புரிந்ததோ.. தனது பொக்கை வாய் திறந்து சிரித்தாள்.. ஒரு வயதே பூர்த்தி அடைந்த என் மருமகள் கிரிஜா!
--

13 comments:

philosophy prabhakaran said...

ஜோக் எங்கேயோ படித்த ஞாபகம்... உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்.. இனி பின்தொடர்கிறேன்...

சைவகொத்துப்பரோட்டா said...

கதையை நகர்த்திய விதம் நல்லா இருக்கு!

வெறும்பய said...

ரொம்ப நல்லா இருக்கு.. எதிர்பார்ப்புகளை தூண்டிய கதை... கிளைமாக்ஸ் செம செம...

தமிழ்க் காதலன். said...

எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் திசைதிருப்பி.... பார்வையாளனை தலைசொறிய வைக்கும் இந்த "பாக்கியராஜ்" டெக்னிக் நல்லா வருதுங்க உங்களுக்கு., மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். வருகை தாருங்கள்... ( ithayasaaral.blogspot.com )

சங்கவி said...

கதையை கொண்டு சென்ற விதம் அருமை...

இரவு வானம் said...

பாஸ் உங்க லாஜிக் இடிக்குது, வயசு வந்த பொண்ணுன்னு தலைப்புலயும், கதையோட ஆரம்பத்திலயும் சொல்லிட்டு கடைசியில ஒரு வயசு குழந்தைன்னு சொல்றிங்களே

நிலா முகிலன் said...

நன்றி பிரபாகரன்.

நிலா முகிலன் said...

நன்றி சைவகொதுபரோட்டா.

நிலா முகிலன் said...

நன்றி வெறும்பய.

நிலா முகிலன் said...

நன்றி தமிழ் காதலன். நிச்சயம் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.

நிலா முகிலன் said...

நன்றி சங்கவி.

நிலா முகிலன் said...

இரவு வானம், கதையில் 'ஒரு' வயது வந்த பெண் அப்பிடின்னு தான் இருக்கும். ஒரு வயதுக்கு வந்த பெண் அப்டின்னு இருக்காது.மீண்டும் படித்து பாருங்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அருண் பிரசாத் said...

முதல்லயே எதிர்பார்த்தேன் இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்கும்னு....

But Well done

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...