Friday, November 6, 2009
நகைச்சுவை குற்றங்கள் - 5
தன தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்ட கதை.
அமெரிக்காவில் எந்த ஒரு ஆபத்தில் இருந்தாலும் , மக்கள் உடனே தொலைபேசியில் அழைப்பது 911 என்ற எண்ணை. தொலைபேசியில் நமது விவரம், நம்மை சூழ்ந்துள்ள ஆபத்து, நமது முகவரி எல்லாம் சொல்லி விட்டால் ( சொல்லாவிட்டாலும் நமது எண்ணை வைத்து அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்), எண்ணி ஏழு நிமிடத்திற்குள் காவலர்கள் நமது வீட்டுக்கதவை தட்டுவார்கள்.
அப்படித்தான் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தில் உள்ள கைன்ச்வில் பகுதியை சேர்ந்த வான் போவெல் என்ற 22 வயது வாலிபனிடம் இருந்து வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. அவனுடைய அழைப்பின் காரணம் தான் கொள்ளை அடிக்கப்பட்டது தான்.
"சரி எங்கிருந்து அழைக்கிறீர்கள் உங்கள் முகவரி என்ன? "என கேட்கப்பட்டதும் மறுமுனையில் ஒரு சத்தமும் இல்லை. காரணம் அழைத்தவன் தனது முகவரியை மறந்து விட்டிருந்தான். எனினும் அவன் அழைத்த எண்ணை வைத்து அவனது வீட்டை கண்டுபிடித்து அவனிடம் விசாரணை மேற்க்கொண்ட போலீஸ் கடைசியில் அவனையே கைது செய்தது தான் வேடிக்கை. தான் வைத்திருந்த மரிவானா என்ற போதை பொருள் மூட்டையை இருநபர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்துவிட்டது. போதையில் இருந்ததால், 911 எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடிந்த அவனால் தனது முகவரியை சொல்ல முடியவில்லை. சட்டத்துக்கு விரோதமாக போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக அவன் கைது செய்யபட்டான். அவனிடம் போதை மூட்டையை கொள்ளை அடித்த அந்த இருவரை காவல்துறை தேடி வருகிறது.
நேரம் சரி இல்லை.
ஆளற்ற ஒரு கட்டிடத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடி விற்று காசு பார்க்க திட்டம் இட்டனர், கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜெம்ஸ் ஆயர் மற்றும் பிரேட்ரிச்க் கில்லீ. அவர்கள் அதற்க்கு தேர்ந்தெடுத்த நேரம் சரி இல்லாமல் பொய் விட்டது.
ஆம் அவர்கள் உள்ளே புகுந்து திருடி கொண்டிருந்த சமயம், காவல் துறையினரின் ஒரு படையணியினரின் பயிற்சி முகாம் அங்கு அன்று நடத்த திட்டமிட்டிருந்தது அவர்களுக்கு தெரியாமல் போயிற்று. கட்டிடத்தின் உள்ளே ஒரு காவலதிகாரி பதுங்கி கொண்டு காவல் நாய் தன்னை கண்டுபிடிக்கிறதா என பார்ப்பதற்காக எப்போதும் உள்ள வழக்கமாக... ஒலிபெருக்கியில், காவல் நாய் கட்டிடத்தினுள் வருகிறது என்றும் உள்ளிருப்பவர்கள் உடனே வெளியேறாவிட்டால் நாயினால் கடி வாங்கப்படும் சாத்தியம் உண்டு என்றும் கூற, பதுங்கி இருந்த ஜெம்ஸ் ஆயர் தன்னை காவல் துறை கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி நடுங்கி கொண்டே வெளியே வந்து சரணடைந்தான். திடுக்கிட்ட அந்த அதிகாரி அவனை மேலும் விசாரிக்க தான் திருட வந்ததை ஒத்துக்கொண்டு தனது நண்பன் கில்லியையும் போட்டு கொடுக்க..இப்போது இருவரும் சிறையில்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
போன வாரம் ஒரு கூத்து நடந்தது.
ஹாலோவீன் பார்ட்டி அன்னிக்கு இது.
911 க்கு ஒரு கால் வந்தது. காரில் ஒருவர் குடித்து விட்டு (ஹாலோவீன் பார்ட்டிகள் பல) தாறுமாறாக ஓட்டுவதாக. மறுமுனையில் இருந்தவர் கேட்டிருக்கிறார்- நீங்கள் அந்த காரை ஃபாலோ செய்கிறீர்களா என்று- வந்த பதில் என்ன தெரியுமா?
“இல்லை, அந்த காரை ஓட்டுவது நாந்தான்” - அப்புறம் கேக்கணுமா, அந்த பெண்மணியை போலீஸ் போய் அலேக்கா தூக்கி போயிடுச்சி..
மறுநாள் ரேடியோவில் சொல்லி சொல்லி சிரிக்கிறாங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இங்க சவூதியில தண்ணி அடிக்கிறதே குற்றம். என் சகோதரருடன் ஒரே பில்டிங்கில தங்கியிருந்த சில பிலிப்பைனிகள் ஒரு கிறிஸ்மஸுக்கு நல்லா வயிறுமுட்ட குடிச்சுட்டு, விடிய காலையில நண்பர்களை வழியனுப்ப டாக்ஸின்னு நினைச்சு கைகாட்டி நிப்பாட்டினது போலீஸ் வண்டியை. அப்புறம் என்ன, சவுக்கடிதான்!
Post a Comment