Friday, August 15, 2008

சுதந்திரம்...


வலது தோள்பட்டை
தீயில் பட்டது போல்
சுடுகிறது...
வலி,
இதயத்தில் நுழைந்து
முளையில் விழுகிறது.
எதிரி நாட்டு தோட்டா துளைத்திருகிறது.

தரையில்
விழுந்து கிடக்கிறேன் நான்...
பனி நிறைந்த வெள்ளை நிலம்
என்
ரத்தத்தால்
சிவபபாகிக்கொண்டிருகிறது...

என்னை
நாட்டின் ராணுவத்துக்கு
அர்ப்பணித்த
என்
தாய் தந்தைக்கு
முதல் வணக்கம்....

இன்று
எங்காவது ஒரு குழந்தை
பிறந்த நாள் கேக்கை
வெட்டிக்கொண்டிருக்கும்....

இன்று
எங்காவது ஒரு அரசியல் வாதி
யாரிடமாவது
லஞ்சம்
வாங்கிக்கொண்டிருப்பார்..

இன்று
எங்காவது
ஒரு கற்பழிப்பு
நடந்து கொண்டிருக்கும்...

இன்று
பிறந்த
பெண் குழந்தையை கொல்ல
யாராவது கள்ளிப்பாலை
அதன் வாயில்
ஊற்றிக்கொண்டிருப்பர்கள்.

இன்று
எதாவது ஒரு விடுதியில்
ஆணும் பெண்ணும்
பணத்துக்காகவும்,
உடல் பசிக்காகவும்
இணைந்து கொண்டிருப்பார்கள்..

இன்று
வரதட்சணைக்காக
ஏதாவது ஒரு வீட்டில்
ஸ்டவ் வெடித்திருக்கும்..

இன்று
திருமணமான ஏதாவது ஒரு ஜோடி
விவாகரத்துக்காக
கோர்ட் படி ஏறி கொண்டிருக்கும்...

இன்று
எதோ மதத்தை சேர்ந்த
சாமியார்
எதற்காகவோ கைது செய்யப்பட்டிருப்பார்.

இன்று
ஏதாவது ஒரு நடிகன்...
'அன்பான ரசிகனே' என
மூளை சலவை செய்ய ஆரம்பித்திருப்பார்.

இன்று
எங்காவது சாதி மோதலில்
பல உயிர்கள் மடிந்திருக்கும்...

இன்று
மதத்துக்காக
'மதம்' பிடித்த மனிதர்கள்
எங்காவது
மோதிக்கொண்டிருப்பர்கள்...

இன்று
எதாவது இளைஞன்
வேலைக்காக
எதாவது ஒரு அலுவலகத்தின்
கதவை
தட்டிக்கொண்டிருப்பான்...


இன்று
எதாவது ஒரு சினிமா நடிகனின்
முதல் நாள் காட்சியில்
அவன் கட் அவுட் மேலிருந்து
கீழே விழுந்த ரசிகன்
உயிரை விட்டிருப்பான்...

எனினும்,
நாட்டுக்காக துடித்து கொண்டிருக்கும்
இதயங்களுடன்
எனது இதயமும் துடிக்கட்டும்...

அருகில் இருக்கும் கம்பத்தில்
என் பையில் இருக்கும் கொடியை கட்டி
சர சர வென ஏற்றுகிறேன்.

நொறுங்கிப்போன எலும்புகளுடன்
வலக்கையை உயர்த்தி
கொடி வணக்கம் செய்து
செத்து மடிகிறேன்......

சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்....

5 comments:

jayaraj j said...

Manthai urukkivittai ...
Suthandira thinathil manam valikkirathu...
JJ

ஹேமா said...

முகிலன்,உணர்வு பூர்வமாக உலுக்கிவிட்டீர்கள்.நாட்டில் நடக்கக் கூடிய அவலங்கள் அத்தனையும் உங்கள் மனதின் சுமைகளாக இருந்திருக்கிறது.வரிகளாகச் சொல்லிவிட்டீர்கள்.இவற்றிற்கு நடுவிலும் நாட்டை நேசிக்கும் மனிதர்களும் வாழத்தான் செய்கிறார்கள்.என் மனம் நிறைந்த சுதந்திரதின வாழ்த்துக்கள் முகிலன்.

நிலா முகிலன் said...

நன்றி ஜெயராஜ் மற்றும் ஹேமா. நாம் அனைவரும் இங்கே குதூகலமாய் வாழ்க்கை கழித்துகொண்டிருக்கும் வேளையில்..நமக்காக எங்கோ போரிட்டு மரணமடையும் ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையை எண்ணி பார்க்கையில் முளைத்த கவிதை இது.

Shrav said...

ராணுவ வீரர்கள் தேவைப்பட்டால் எப்படி தனி ஆளாக நாட்டின் பாதுகாப்பிற்காக போராடுகிறார்களோ, அது போல ஒவ்வொரு குடி மகனும் நாம நாட்டு நலனுக்காக சிறிதேனும் சிந்த்தித்து செயல்பட்டால் இந்தியா வேகமாய் முன்னேறும். அதற்கு முதல் தேவை, நம் நாட்டை நாம் நேசிப்பதே! காந்தி, நேரு மாதிரி தேசம் முழுமைக்கும் அனைத்து மக்களின் நற்பெயரையும் நம்பிக்கையும் பெறவல்ல சுயநலமற்ற பெருந்தலைவர்கள் இல்லாததே நம் நாட்டின் தற்ப்போதைய பெருங்குறை என்பது எனது கருத்து..!

superlinks said...

வணக்கம் தோழரே
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...