Saturday, August 23, 2008

டிராபிக் ராமசாமி..அகிம்சை 'அந்நியன்'

தன்னலமற்று பொதுநலத்துக்கு என வாழ்பவர்கள் மிக சிலரே. சுதந்திர போராட்ட நேரத்தில் வாழ்ந்த தியாகிகள் பலரை வரலாறுகள் மூலம் கண்டுணர்ந்துள்ளோம். அன்னை தெரசா, மேதா பட்கர் வரிசையில் இப்போது பலருக்கும் அறிமுகமாகிருப்பது நம் தமிழகத்தை சேர்ந்த டிராபிக் ராமசாமி.

'எப்போடா அம்பத்தெட்டு வயசாகும் நிம்மதியா வீட்டுல ஓய்வெடுக்கலாம்' என்பது தான் வேலைக்கு போகும் பலரது கனவு. தனது எழுபத்தி மூன்றாம் வயதில் தான் நேசிக்கும் சென்னை நகரம் ஒரு தூய்மையான நகராக மாற வேண்டும் என நடு ரோட்டில் நின்று கொண்டு டிராபிக் ஒழுங்கு படுத்துவது, பொது மக்களுக்கு இடையூறாக இருந்த மீன் பாடி வண்டிகளை ஒழித்தது, பொதுமக்கள் பஸ்சில் பயணம் செல்வதற்கு இடையூறாக சில வழித்தடங்களில் இருந்த ஆட்டோக்களை ஒழித்தது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெருமுனை ஆக்ரமிப்பு கடைகளை இடிக்க கோர்ட்டில் கேஸ் போட்டு வெற்றி அடைந்தது என இவரது பொதுநல சாதனைகள் நீளும்.
மீன் பாடி வண்டிகளை கேஸ் போட்டு ஒழித்ததால் இவர் மீது கோவம் கொண்ட சிலர் அடியாள் வைத்து அடித்து இவரது ஒரு கண்ணை செயலிழக்க வைத்தார்கள். இருந்தாலும் இவரது சாதனை பயணம் இன்னும் தொடர்கிறது.

ஒரு மில்லில் பியூனாக வேலை பார்த்த ராமசாமி சென்னை பாரி முனையில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போக்குவரத்து காவலர்க்கு உதவி இருக்கிறார். இதனால் அவரை பாராட்டும் வகையில் அவருக்கு அடையாள அட்டை வழங்கி இருக்கிறார்கள் போக்குவரத்து காவலர்கள். இதனாலேயே ராமசாமி என்ற பெயருக்கு முன்னால் 'டிராபிக்' என்ற அடையாள பெயர் ஒட்டி கொண்டு டிராபிக் ராமசாமி ஆனார்.

இப்படி பொதுநலம் ஒன்றையே குறிக்கோளாக வாழ்ந்து வருபவர்க்கு குடும்பம் எப்படி துணை நிற்கும்? அவர் முட்டாள்தனமான காரியம் செய்கிறார் என ஒதுக்கி வைத்துள்ளது அவரது குடும்பம். தனது பொது நல சேவையால் பல சமூக விரோதிகளின் எதிரி ஆகிவிட்டபடியால் தனது குடும்பத்துக்கு அவர்கள் மூலம் ஆபத்து வரலாம் என கருதி தற்போது நண்பர்களின் துணையுடன் தனியாக வசித்து வருகிறார்.

எந்த அரசு வந்தாலும், தப்பு நடக்கிற இடத்தில் எல்லாம் தட்டி கேட்கும் இவரால் அரசுக்கு தலை வலி தான். அதனால் தன் ஜெயலலிதா அரசில் இவர் போட்ட கேஸ் களுக்கு ஆதரவு அளித்த கருணாநிதி அரசு இன்று இவரை பொது நலத்துக்கு இடையூறு விளைவிக்கிறார் என அவ்வப்போது பிடித்து சிறையிட்டு விடுகிறது. அரசியல் கட்சிகள் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ இல்லையோ, தங்களுக்கு யாராவது இடையூறு செய்தால் அவர்களை இம்சிப்பதே வேலையாக பொய் விட்டது.

டிராபிக் ராமசாமி போல ஒரு பொது நலம் எனக்கும் உங்களுக்கும் எல்லோருக்கும் இருந்தாலும் குடும்பம் அல்லது தொழில் என ஏதாவது ஒன்று தடுக்கும். எனவே முழுதாக இறங்காவிட்டாலும் சமூகம் நன்றாக இருக்க களத்தில் இறங்கி களை எடுக்கும் டிராபிக் ராமசாமிகளுக்கு உதவியாக இருப்போமா?

12 comments:

ஹேமா said...

இப்படியான சமூக நலன், உறவுகளின் நலன்,எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ விசேஷமாக ஒரு மனசு வேணும் முகிலன்.1000%1 தான்.
எல்லோராலும் முடியாது.இவர்களை வெளியில்அறிமுகப்படுத்துங்கள்.
மகிழ்ச்சி முகிலன்.நன்றி.

Thangam.Murugesan said...

traffic ramasamy is a typical example and guide to the present and future generation to wage war against the government where ever corruption, nepotism,attrocities are earheading with the soupport of ruling party GOONDAS!

நிலா முகிலன் said...

நன்றி ஹேமா, மற்றும் தங்கம் முருகேசன். இவர்களின் பொதுநலனை புரிந்து கொள்ளாமல் தங்கள் சுயநலனுக்காக அரசியல் வாதிகள் இவரை போன்றவர்களை கொடுமை படுத்துவது தான் வேதனை.

Seemachu said...

நிலா முகிலன்,
ட்ராபிக் இராமசாமி ஐயாவின் பணிகளுக்கு நிதி உதவி செய்ய வேண்டுமாயின் எப்படி செய்ய வேண்டும் என்று தெரிவிப்பீர்களா?

அவர் நிறைய செய்கிறார். அவருக்கான செலவினங்கள் எப்படி கையாளப்படிகிறதென்று தெரியுமா?

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அவரைத் தொடர்புகொள்ள முடிந்தால் நலம்.

sharevivek said...

இவரை மிகவும் பெரியவர் ....

அதிரை ஜமால் said...

இவருக்கு உதவவேண்டும் போல் உள்ளது.
எந்த வகையில் இயலும் என தெரியப்படுத்தவும்.

வாசகன் said...

நல்ல பணி. அவர் வாழ்க வளமுடன்.

இவர்தானே தமிழ் புத்தாண்டு மாற்றத்தை எதிர்த்து வழக்குப்போட்டு தமிழ் மக்களுக்குச் சேவை செய்தவர்?

Anonymous said...

//அவர் நிறைய செய்கிறார். அவருக்கான செலவினங்கள் எப்படி கையாளப்படிகிறதென்று தெரியுமா?//

லஸ் சரவணபவன் ஒட்டல் அவருக்கு மதியம் இலவச சாப்பாடு கொடுக்கிறது.காலை மாலை எல்லாம் அவர் வசிக்கும் இடத்தில் அவருக்கு கையேந்திபவன் சாப்பாடுதான்.
மற்றபடி அவர் வழக்கு எல்லாம் சொந்தமாகவே வாதாடுகிறார்.

இவர் காந்தியவாதி இவரிடம் உதவி என்று பணம் கொடுத்தால் ஏற்று கொள்வார் என்பது சந்தேகமே..மிகவும் அருமையான அதொடு காந்திய கொள்கைளில் மிகவும் பிடிப்பு உள்ளவர். இவர் தினமும் இந்த வயதில் தினமும் 8 கிலோ மீட்டர் நடந்தே நீதிமன்றம் செல்கிறார்,

Anonymous said...

// வாசகன் said...

நல்ல பணி. அவர் வாழ்க வளமுடன்.

இவர்தானே தமிழ் புத்தாண்டு மாற்றத்தை எதிர்த்து வழக்குப்போட்டு தமிழ் மக்களுக்குச் சேவை செய்தவர்//

மக்கள் மத நம்பிக்கையில் யார் தலையிட்டாலும் அது தவறுதான். ஏன் முடிந்தால் கலைஞர் ரம்ஜான் அல்லது கிருஸ்துமஸ் தேதிகளை மாற்றி பார்க்கட்டுமே

ஊழல் அரசியல்வாதிகள் இதை போல செய்கைக்ள் மூலம் மக்கள் கவனத்தை திசை திருப்புவதை அறியாதா ஆளா நீர்??

yawaniga said...

hai, it,s me vinod.p from chennai. thanks 4 ur article. i like him very much. he is the real hero of chennai.

yawaniga said...

hai, it,s me vinod.p from chennai. thanks 4 ur article. i like him very much. he is the real hero of chennai.

gaya3 said...

I'm speechless. Can anyone suggest me how i could contact him?

Gayathri

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...