Wednesday, April 21, 2010

கிளைமாக்ஸ் கதைகள் -3 வள்ளி!விஜய் என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். நல்ல உயரம். எப்போதும் அலட்சியமாக தலையை ஒதுக்கி விட்டிருப்பான். அவனது காந்த கண்கள், என் அலுவலக பெண்கள் மத்தியை அவன் பால் ஈர்ப்பை ஏற்படுத்துவது உண்மை தான். அவனுக்கு மணமாகவில்லை.அவனை காதலிக்க என் அலுவலகத்து பெண்கள் எல்லாரும் போட்டி போட்டு கொண்டிருந்தனர்.

அனைவருடனும் நெருங்கி பழகுவதை போல என்னிடமும் பழகினாலும், என்னிடம் சற்று அதிகமாகவே பாசம் காட்டுவான். இதனால் அவனது தோழியருக்கு என் பால் சிறிது பொறாமையும் உண்டு. அவனுக்காக எதையும் செய்ய காத்திருந்தேன்.

ஆனால் அவன் 'இதை' கேட்ட பொது சற்று தடுமாறி தான் போனேன்.

'விஜய் நீ நெசமாத்தான் சொல்றியா. இதுலாம் தப்பு இல்லையா'

'இதன் மூலமா நாம வேற யாருக்கும் தீங்கு செய்யறோமா? நம்மால மத்தவங்களுக்கு பாதிப்பு இருக்கா வள்ளி?' என்றான் விஜய்.

'இல்லை ஆனால் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்'

'என்ன நீ அந்த காலத்துலேயே இருக்க. இப்போ சமூகம் எவ்ளோ முன்னேறிருச்சி தெரியுமா. இதுலாம் இப்போ தப்பே இல்ல'.

'ஏற்கனவே நாம சண்முகா லாட்ஜ் பக்கம் போயிட்டு வந்து வாந்தி வாந்தியா வந்துடுத்து. எங்கம்மா கூட ஒரு மாதிரி பாத்தா. நல்ல வேளை நின்னுடுத்து. அவளுக்கும் சந்தேகம் வரல. எதாச்சும் கோக்கு மாக்கு ஆகி எல்லாருக்கும் தெரிஞ்சிருந்ததுன்னா நான் என் உயிரையே விட்ட்ருப்பேன்'

'ஐயய உன்ன திருத்தவே முடியாது போல இருக்கே. நீ இந்த காலத்து ஆளே கெடயாது'

'நீ ஏன் சொல்லமாட்ட. உன்னை கேக்கறதுக்கு ஆள் கெடயாது. நீ தப்பு பண்ணினா வெளில தெரியாது. நான் அப்படியா?'

'சரி நா ஒன்னே ஒன்னு கேக்கறேன். போனவாட்டி சண்முகா லாட்ஜ் பக்கம் பொய் கச்சேரி நடத்தினோமே... அது உனக்கு புடிசிதா இல்லையா?'

சட்டென இப்படி கேட்டதும் விஜயிடம் என்ன பதில் சொல்வது என்றே புரிய வில்லை. எனக்கு அது தப்பு என்று தெரிந்தாலும் பிடித்து தான் இருந்தது. சலன படாமல் இருக்க முடியவில்லை.

'பிடிச்சிதான் இருந்தது...'

'பின்ன என்ன வள்ளி. மத்தவங்களுக்காக நாம வாழக்கூடாது நமக்கு என்ன சரி நு படுதோ நாம வாழ்ந்து பாத்திரனும்.'

'இல்ல விஜய் அந்த லாட்ஜ் கூட மோசம்னு பேசிக்கறாங்க. போலீஸ் ரைட் எல்லாம் வருதாம்'

' அதுலாம் இப்போ இல்ல தெரியுமா. மாமூல் கொடுத்து சரி படுத்திட்டாங்களாம்'.

புத்தி வேண்டாம்னு சொன்னாலும் மனசு விடுவதாக இல்லை. சம்மதித்தேன்.

சாயங்காலம் விஜயின் பைக்கில் அமர்ந்து  திடுக் திடுக் இதயத்துடனும், சபலத்தில் விளைந்த மகிழ்ச்சியும் ஒன்று சேர பயணித்தேன்.

சண்முகா லாட்ஜ் முன்னால் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் விஜய். நான் இறங்கி தெரிந்தவர் யாரும் வருகிறார்களா என சுத்தியும் முத்தியும் பார்த்தேன்.

நல்லவேளை யாரும் இல்லை. இருவரும் சண்முகா லாட்ஜ் முன்னால் சென்று நின்றோம்.

பக்கவாட்டில் உள்ள டாஸ்மார்க் கடை சென்று விஸ்கி வாங்கி கொண்டு கடையின் பின்னால் பம்மினோம்.

.வள்ளி நாயகம் என்ற நான் இரண்டாம் முறையாக என் நண்பன் விஜயுடன் மது அருந்த துவங்கினேன்.
--

2 comments:

ஹேமா said...

நினைச்சேன்..."தம்" ன்னு தான் நினைச்சேன்.அது விஸ்கியாப்ப் போச்சு முகிலன்.

நிலா முகிலன் said...

வாங்க ஹேமா. சிறிய பிழைதானே. புத்திசாலி தான் நீங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...