Tuesday, April 6, 2010

கூகிள்...!

கூகிள் ஆண்டவர், கூகிளாயினி..என பதிவர்கள் பலவாறும் இதற்க்கு பெயர் வைத்து அழைக்கிறார்கள்.  எதாவது தகவல் வேண்டுமா... கூகிளை அழைத்தால் போதும், தகவல்களை நொடி பொழுதில் கொண்டு வந்து கொட்டும் அமுதசுரபி. இது எப்படி சாத்தியமானது. இவ்வளவு பெரிய சாதனையை சாதித்தவர்கள் யார்? கூகிள் என ஏன் பெயர் வைத்தார்கள்...?

அதற்க்கு நாம் 1995   ஆம் ஆண்டுக்கு செல்ல வேண்டும்.

லாரி பேஜ் முதன் முதலாக அமெரிக்காவின் முதன்மை பல்கலை கழகமான ஸ்டான்போர்ட் யுனிவெர்சிட்டி இல் பி எச் டீ படிப்பதற்காக சேர்கிறான். அவனுக்கு பல்கலை கழகத்தை சுற்றிகாட்ட நியமிக்கப்பட்டவன் தான் செர்ஜி. அவர்களது முதல் சந்திப்பில் பல விடயங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன என தகவல் உண்டு. தங்களது பட்ட படிப்பின் ஆய்வுக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த செயல்முறை பாடம் தான் ஒரு தேடு தளத்தை(search engine) உருவாக்குவது.

அவர்கள் இருவரும் இணைந்து முதன் முதலாக உருவாகிய தேடு தளம் பாக் ரப்(Back Rub). (பெயரை கவனியுங்கள்...!). ஸ்டான்போர்ட் யுனிவெர்சிட்டி இல் ஒரு வருடமாக பாக் ரப் உபயோகப்படுத்தப்பட்டது. என்றாலும் அதிக அலைவரிசைகளை (bandwidth) உள்வாங்கி கொள்கிறது என்ற குற்றசாட்டு எழுந்தது. ஒரு நாடகத்தில் கூகாள்(googol)  என்ற முறை வந்தது. எண் ஒன்றும் அதற்க்கு பின்னால் நூறு பூஜ்யங்களுமே கூகாள் என அழைக்கப்பட்டது. இவர்களின் தேடு தளத்திற்கான பக்கங்கள் அனைத்தும் ஒன்றாலும் பூஜ்யங்களாலும் தேடப்படுவதால், தங்களது தேடு தளத்திற்கு சிறிது ஸ்பெல்லிங்கை மாற்றி கூகிள் (google) என பெயர் வைத்தனர்.

செப்டம்பர் 15 1997 இல் google.com என்ற கம்பனி பதிவு செய்யப்பட்டது. இந்த இளைஞர்களின் துடிப்பையும் இவர்களது தொலைநோக்கு பார்வையாலும் கவரப்பட்ட சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் இன் உரிமையாளர்களின் ஒருவரான ஆண்டி பெக்டோஷெய்ம   (Andy Bechtolsheim) இவர்களது ப்ரோஜெக்ட்க்கு 100,000 அமெரிக்க டாலர்களை அளித்தார். அதனை கொண்டு தங்களது தோழியான சூசனின் (Susan Wojcicki)  கார் கராஜில் 1998 செப்டெம்பரில் தங்களது கம்பனியை துவக்கினர். அதன் பின்னர் நடந்தது எல்லாம் வரலாறு.


கூகிள் இந்த கார் கராஜில் தான் முதன் முதலில் துவக்கப்பட்டது.

இன்று பல துறைகளில் கால் பதித்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் க்கு சிம்ம சொப்பனம் இவர்கள் இருவரும் தான்.  உலகத்திலயே மிக சிறந்த அலுவலகம் என்றால் அது கூகிள் அலுவலகம் தான். ஆம் தங்களது அலுவலகர்களை தங்கம் போல பாதுகாக்கிறது கூகிள் நிறுவனம்.


 லாரி பேஜ் மற்றும் செர்ஜி

கூகிள் அலுவலகம் இன்று...

கூகிளின் வியாபார தந்திரமாக 'கிளிக்கினால்' பணம் என்ற புதிய முறை உருவாக்கப்பட்டது. விளம்பரதாரர்களின் விளம்பரங்களை, கூகிள் உபயோகிப்பவர்கள் கிளிக் செய்தால், கூகிளுக்கு பணம் சென்று விடுகிறது. இதன் மூலம் பெரும் பணத்தை கூகிள் ஈட்டியது.மேலும் அவர்களது வியாபார டெக்னிக்குகள் பல கம்பனிகள் அறிந்திருக்கவில்லை.

கூகிள் மாப், கூகிள் போன், கூகிள் ப்ளாக்கர், கூகிள் நியூஸ், ஆர்குட்.கூகிள் எர்த்  என இவர்கள் எல்லைகள் விரிந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு சிறு பொறியில் உருவானது கூகிள். இன்று அது பலருக்கும் கேட்டதை கொடுக்கும் கடவுளாக இருக்கிறது.
--

7 comments:

Ammu Madhu said...

தகவலுக்கு நன்றி.ஓட்டு போட்டாச்சு.

Ammu Madhu said...

கூகிள் அலுவலகம் வெளியிலிருந்து பார்ப்பதை விட உள்ளே இன்னும் பிரமாதமாக இருக்கும்.

நிலா முகிலன் said...

நன்றி அம்மு. கூகிள் அலுவலகம் உள்ளே உள்ள புகைப்படங்கள், பல மின் அஞ்சல்களில் போர்வர்ட் மெய்ல்களில் வலம் வந்து கொண்டிருப்பதால் தான் இங்கே போட வில்லை.

My Dear Friend said...

google என்ற பெயர் இவர்கள் சூட்டவில்லை, மாறாக ப்ரோஜெக்டோட ஸ்பான்சர் கொடுத்த செக்கில் தவறுதலாக எழுதப்பட்ட பெயர்தான் google, என்று படித்ததாக ஞாபகம்.

punitha said...

சும்மா கலக்குறாங்க போங்க. நல்ல தகவல்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

நிலா முகிலன் said...

நன்றி புனிதா

aravind said...

nice

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...