Sunday, August 31, 2008

'ஆமிர்' (AAMIR) ஒரு அற்புதமான 'இந்தி'ய திரைப்படம்.






வழக்கமாக இந்தி திரைப்படங்கள் ஒரே மாதிர்யான கதைகள் கொண்டவைகளாக இருக்கும். ஒன்று காதல் கதைகள் அல்லது சரித்திர கதைகள் அல்லது நிழல் மனிதர்களின் கதைகள் அல்லது குடும்ப கதைகள். அத்தி பூத்தாற்போல சில அபூர்வ அற்புத படங்கள் வருவதுண்டு. அப்படி பட்ட ஒரு படம் தன் 'ஆமிர்'
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க... முற்றிலும் புதுமுகங்களான தொழில் நுட்ப கலைஞர்கள் கொண்டு எந்தவித மசாலாத்தனங்கள் இல்லாமல் மரத்தை சுற்றி பாடும் பாடல்கள் இல்லாமல், அமச்சூர்த்தனமான சண்டை காட்சிகள் இல்லாமல் அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகள் இல்லாமல் சமுதாயத்துக்கு நல்ல கருத்து சொல்லும் படமாக வெளி வந்திருக்கிறது.
நாட்டில் சில இஸ்லாமிய தீவிரவாதிகளால் பல நல்ல இஸ்லாமிய சகோதரர்கள் சமுதாயத்தால் பழி வாங்கப்படுவது முகத்தில் அறைந்தார் போல சொல்லப்படுகிறது. திரைப்படம் நடக்கும் காலம் சில மணித்துளிகளே. கதாநாயகனுக்கு படம் முழுவதும் ஒரே உடைதான். என பல புதுமைகள் இப்படத்தில் உள்ளன.

சரி கதை என்ன?
லண்டனில் வசிக்கும் டாக்டர் ஆமிர், தனது குடும்பத்தை காணுவதற்காக மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறான். தனது குடும்பத்தை காணப்போகும் ஆவல் அவன் உள்ளத்தில் படர சந்தோஷத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் அவனுக்கு முதல் சோதனை கஸ்டம்ஸ் அலுவலகரால் கேள்விகளால் துளைக்க படுகிறான். அவனுடைய உடைமைகள் நான்கு முறை சோதிக்கப்படுகிறது. அதற்க்கு காரணம் அவனுடைய பெயர் 'ஆமிர்' அவன் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவன் என்பதால் அவன் ஒரு தீவிரவாதியை போல பார்க்கப்படுகிறான்.(இப்போதும் இந்தியாவில் பல இடங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் பெரும்பாலானோர் தீவிரவாதிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் இதை போல கருப்பர்கள் அனைவரும் திருடர்களாக பார்க்கப்படுகிறார்கள்.).

தனது குடும்பம் தனக்காக காத்திருக்கும் என எண்ணியபடி விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் ஆமிர், தனது சொந்தங்கள் யாரையும் கானது குழப்பம் அடைகிறான். அப்போது ஒரு பைக்கில் வரும் இருவர் திடீரென அவனது கையில் ஒரு கைபேசியை எறிந்து விட்டு சென்று விடுகிறார்கள்.

அந்த அலைபேசிக்கு அழைப்பு வருகிறது. புரியாமல் அதனை எடுத்து பேசும் ஆமிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அலை பேசியில் பேசும் மனிதன் ஒரு வாடகை வண்டியின் எங்களை கூறி அதில் ஏறுமாறு சொல்கிறான். மறுக்கும் ஆமிரிடம் அவனது உடைமைகள் களவாடப்பட்டு அந்த வண்டியில் உள்ளதாக தெரிவிக்க ஆமிர் அப்போது தான் தனது பேட்டிகள் களவாடப்பட்டது உணர்ந்து அந்த வண்டியின் பின்னால் ஓடுகிறான்.

ஒரு கட்டத்தில் சோர்ந்து பொய் அமரும் சமயம் அவனுக்கு மீண்டும் அழைப்பு வருகிறது. அப்போது அவனது குடும்பம் கடத்தப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதுவும் நேராமல் இருக்க ஆமிர் அவன் சொல்படி நடக்க வேண்டும் என்றும் அவனுக்கு கூறுகிறான் அந்த மொட்டை மனிதன்.

பின்னர் ஒரு விடுதியில் காத்திருக்க வைக்க படுகிறான். அப்போது அங்கு ஒரு வேசி அவனை படுக்கைக்கு அழைக்க அவளை உதாசீனபடுத்துகிறான். பின்னர் ஒரு இடத்துக்கு சென்று ஒரு சிவப்பு பெட்டியை வங்கி வர சொல்கிறான். ஆமிர் வங்கி தனது விடுதி வந்த பின், கழிப்பறையில் கிடைத்த எங்களை அந்த பெட்டியில் அழுத்த அந்த பெட்டி திறந்து கொள்ள.. ஐந்நூறு ரூபாய் நோட்டு கட்டுகளை காண்கிறான். மீண்டும் அலைபேசி வருகிறது. அந்த பணம் முழுவதும் இஸ்லாமியரின் புனிதப் போருக்காக உலகம் முழுதும் இல்ல இஸ்லாமியரால் அனுப்பி வைக்க பட்ட பணம் என கூறுகிறான் மொட்டை தலை மனிதன். அதை எடுத்து இன்னொரு மனிதனிடம் சேர்த்து விட்டால் அவனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிடுவதாக கூற அந்த பெட்டியை எடுத்து கொண்டு அவன் சொன்ன அந்த இருட்டான சந்தின் வழியாக நடக்க ஆரம்பிக்கிறான் ஆமிர்.

அப்போது அங்கு வந்த திருடர்கள் ஆமிரை அடித்து போட்டுவிட்டு பெட்டியை பறித்து கொண்டு ஓட.. துரத்தி கொண்டு ஓடுகிறான் ஆமிர். அவனால் மேலும் ஓட முடியாமல் அவனுடைய ஆஸ்துமா வியாதி படுத்தி எடுக்க அங்கேயே அமர்ந்து விடுகிறான்.
சரியானதும் எழுந்து பெட்டியை தூக்கி கொண்டு ஓடியவனை தேட ஆரம்பிக்கிறான். அப்போது அவன் விடுதியில் சந்தித்த வேசி அவனுடைய உதவிக்கு வருகிறாள். திருடர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்கிறாள். மதுவின் மயக்கத்தில் இருக்கும் அவர்களை அடித்து போடுகிறான் ஆமிர். அவர்கள் பயந்த படி அந்த சிவப்பு பெட்டியை எடுத்து அவனிடம் கொடுக்க அதை பெற்று கொண்டு அந்த மொட்டை தலை மனிதன் சொன்ன பேருந்து நிறுத்தத்துக்கு வந்து காத்திருக்கிறான். அவனை மீண்டும் அலை பேசியில் அழைக்கும் மொட்டை தலை மனிதன், ஊர்தி எண் 83 இல் ஏற சொல்கிறான். ஏறி அமரும் ஆமிர், பஸ் செல்ல துவங்கியதும் வரும் அலைபேசி அழைப்பை எடுத்து பேச அவன் அமர்ந்திருக்கும் இருக்கையின் அடியில் அந்த பெட்டியை வைத்து விட்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி விடுமாறு கட்டளை வருகிறது. குழப்பமாக நடந்த நிகழ்வுகளை யோசனை செய்து பார்க்கும் ஆமிர், அந்த திருடர்கள் மூலம் பெறப்பட்ட சிவப்பு பெட்டி மாற்றப்பட்டிருப்பதையும் தற்போது அப்பெட்டியில் குண்டு இருப்பதையும் அந்த பஸ் வெடித்து சிதற தான் கருவி ஆக்க பட்டிருப்பதையும் உணர்கிறான்.
அந்த மொட்டை தலை மனிதன் சொன்னவாறு தன் இருக்கையின் அடியில் பெட்டியை வைத்து விட்டு பஸ் விட்டு கீழிறங்குகிறான். இன்னும் இரு நிமிடங்களில் குண்டு வெடிக்க போகிறது. அப்போது ஆமிர் அமர்ந்த இருக்கையில் ஒரு குழந்தை அமர்ந்து அவனுக்கு 'டாட்டா' காட்டுகிறது. உடைந்து போகிறான் ஆமிர். அடுத்து அவன் எடுத்த முடிவு கண் கலங்க வைக்கிறது.

ஒரு மிகவும் சிக்கலான கதையை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜ்குமார் குப்தா. படத்திற்காக எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் நேர்கோட்டில் கதை ராக்கெட் வேகத்தில் பயணம் செய்கிறது. படத்தின் மூலம் அழுத்தமாக சமூகத்துக்கு உண்டான சேதியும் வைத்திருக்கிறார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு தூண்கள். ஆமிராக நடித்திருக்கும் ராஜேஷ் கண்டேல்வால் பரபரப்பு,இயலாமை, மென் சோகம், தவிப்பு என தன் முகத்தில் அத்தனை உணர்ச்சிகளையும் லாவகமாக கொண்டு வந்து தேர்ந்த நடிப்பில் மின்னுகிறார்.
ஆமிர் தரமான ஒரு 'இந்தி'ய சினிமா.



12 comments:

உண்மைத்தமிழன் said...

உங்களது விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது நண்பரே.. நிச்சயம் பார்க்கிறேன்..

துளசி கோபால் said...

என்னங்க இப்படி மொத்தக் கதையையும் விலாவரியா எழுதியிருக்கீங்க?


போனமாசம் இதே படத்துக்கு நானும் ஒரு பதிவு போட்டுருந்தேன்.

இங்கே பாருங்க

Indian said...

It is the remake of Philipino movie 'Cavite'.

ஹேமா said...

அருமையான படம் போல இருக்கே.எங்கே பார்க்க முடியும் முகிலன்.இங்கே கிடைக்காதே.
இணையத்தில் பார்க்க முடியுமா முகிலன்.

சுரேகா.. said...

ஆஹா...

அழகா சொல்லியிருக்கீங்க!
ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சு...
இன்னிக்கு அதைப்பத்தி எழுதலாம்னு
உட்கார்ந்துட்டு...

தமிழ்மணத்துக்குள்ள வந்தா..நீங்க
பதிவு போட்டிருக்கீங்க!

பரவாயில்லை! நானும் போட்டுடறேன்!

:)

NILAMUKILAN said...

நன்றி உண்மை தமிழன் மற்றும் துளசி கோபால்.

NILAMUKILAN said...

நன்றி இந்தியன். cavite கண்டிப்பாக பார்க்கிறேன்

NILAMUKILAN said...

ஹேமா நன்றி whereweget.com இல் முயன்று பாருங்கள்.

NILAMUKILAN said...

நன்றி சுரேகா. நிச்சயம் படிச்சி பாக்கறேன்

பரத் said...

Gud review.

//போனமாசம் இதே படத்துக்கு நானும் ஒரு பதிவு போட்டுருந்தேன்//

repeatu!!

http://enn-ennangal.blogspot.com/2008/06/blog-post_27.html

பின் புலம் said...

as per your comment the film may get award

butterfly Surya said...

நல்ல விமர்சனம்.

பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

நன்றி நண்பா

சூர்யா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...