Sunday, August 10, 2008
தொலைந்து போனவர்கள்...
காலை நேர பூபாளம்..
புளியமரத்து நிழல்..
.'கண்ணாமூச்சி ரே ரே '...
தாத்தா பாட்டியின் ஸ்பரிசங்கள்...
வண்ணத்து பூச்சியின் தரிசனம்..,
மயில் இறகுகள் சேகரிப்பு...
பூக்களின் புன்னகை...
ஆற்றோர குளியல்...
மார்கழி மாத கோலங்கள்..
பசுமை தோட்டம்..
மாலை நேர விளையாட்டு...
தாயின் தாலாட்டு..
இவை ஏதும் இன்றி....
புத்தகச் சுமை...
'கார்டூன் சேனல்',
அடுக்குமாடி குடியிருப்பு...
'வீடியோ கேம்'...,
கணினி மைய்யங்கள்...,
புள்ளியை தொலைத்த ஓவியங்கள்..
வாகன இரைச்சல்...
பரிமாறப்படாத உணவு...
அப்பா அம்மாவின் இன்ஜினியர் கனவு...
இன்றைய இயந்திர உலகில்..
நாளையின் நினைவுகளால் ,
நனவுகளில் ,
தொலைந்து போனார்கள்
இளந்தளிர்கள்..!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முகிலன்,நாகரீக வளர்ச்சியால் இயல்பு வாழ்வையே தொலைத்துத்தானே தவிக்கிறோம்.
தொலைத்தவைகளை அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்.
நன்றி ஹேமா.. நான் அனுபவித்தவைகளை.. என் அண்ணாவின் குழந்தைகள் அனுபவிக்க தவறிய ஏக்கத்தின் வெளிப்பாடே இக்கவிதை...
//இன்றைய இயந்திர உலகில்..
நாளையின் நினைவுகளால் ,
நனவுகளில் ,
தொலைந்து போனார்கள்// அருமைங்க... ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்வில் பொருள் தேடி, பொருளாதாரம் தேடி வாழ்வை; அதோடு குழந்தைகளின் சின்னச் சின்ன சந்தோஷங்களை தொலைத்த குற்றம் நம்மையே சாரும்.
Post a Comment