Sunday, April 18, 2010

காந்தி தேசமே... ஈரம் இல்லையா...?!!!



எங்கிருந்தோ பத்துக்கு மேற்பட்ட தீவிரவாதிகள், விசா பாஸ்போர்ட் எதுவும் இன்றி, பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு திருட்டு தோணி மூலம் மும்பை வந்து இருநூறு பேரின் உயிரை உருவி நாட்டின் பாதுக்காப்பையே எள்ளி நகையாடிவிட்டு செல்லலாம். ஒரு எண்பது வயது மூதாட்டி, ஆறு மாத விசாவோடு மருத்துவத்திற்காக தமிழகத்தின் மண்ணை மிதிக்க கூடாதாம். 

பல நாடுகளில் இருந்து பல ஊர்களில் இருந்து வந்து இங்கு வாழலாம்.  வந்தாரை வாழ வைக்குமாம் தமிழ் நாடு...ஆனால் தமிழ் தாயை மட்டும் திருப்பி அனுப்பி விடுமாம். காரணம். பாதுகாப்பாம்.உலகமே சிரிப்பாய் சிரிக்கிறது. தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு பூரண கும்ப மரியாதை. போர் வாசனை அறியாத ஒரு தமிழ் மூதாட்டிக்கு தமிழகத்தில் கால் வைக்க மறுப்பு. 

தமிழர்களின் மேல் உள்ள மத்திய அரசின் வெறுப்பும், தமிழகத்தை ஆள்வோரின் பச்சோந்தி தனமுமே இதற்க்கு காரணம்.

ஒரு இந்தியனாக, ஒரு  தமிழனாக இருப்பதற்கு வெட்கி தலை குனிகிறேன்.

7 comments:

raja said...

என்ன முகிலன் இப்படி கோவப்படறீங்க.. நம்ம சூடு சொரணையெல்லாம்...மூட்டை கட்டி சினிமாக்கரான், அரசியல்வாதி சூ.... ல வச்சி எவ்வளவோ நாளாச்சி....இப்ப போய்... நீங்க.. காந்தி தேசம்... அது இது ன்னுகிட்டு. ?

Anonymous said...

கா ந்தி தேசமா? அப்படியென்றால்....பகத் சிங் எனும் வீரனை தூக்கில் போட பரி ந்துரைத்தாரே! அ ந்த கா ந்தியா? பிறகு அவரின் தேசம் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பாமல் எப்படி இருக்கும்.

ஹேமா said...

தலைவிதி மாறினா இதுவும் ஆகும் இன்னும் ஆகும் முகிலன்.தாங்கப் பிறந்தவன் ஈழத்தமிழன்.வேறு வழி !

NILAMUKILAN said...

என்னோட ஆற்றாமையை சொன்னேன் ராஜா. நன்றி வருகைக்கும் உங்கள் கருத்துக்கும்

NILAMUKILAN said...

என்னாது பகத்சிங்கை தூக்கில் போடா காந்தி பரிந்துரைத்தாரா? எனக்கு இது புதிய சேதி அனானி.

NILAMUKILAN said...

வாங்க ஹேமா ரொம்ப நாளாச்சி இந்தபக்கம் வந்து.ஈழத்தமிழனுக்கும் ஒரு விடிவு நிச்சயம் பிறக்கும் நம்பிக்கை தானே வாழ்க்கை.

சக்திவேல் said...

கிழவி வருவதால் அதைவைத்து தமிழக மக்கள் மனம் மாறிவிடுவார்கள் என்று பயந்து அலறுறாங்களே. ஒரு விசயத்தை நினைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. வரவே மாட்டார் என்று நீங்கள் நம்பிக்கொன்டிருக்கும் அவர் வந்தால் என்ன ஆவார்கள்?

கிழவியைப்பர்த்து தமிழ் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கலவரம் செய்வார்கள் என்று பயந்து அப்பா நல்ல வேளை வரவில்லைன்னு ஒரு ஐயர் பதிவர் சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்காரு. காங்கிரசும் ஆமாம் கிழவியைக்காட்டி வைக்கோ அரசியல் செய்வார் என்று அலறியிருக்கு. அப்பன்ன என்ன அர்த்தம்? மக்கள் கிழவிமேல் பரிதாபப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம்?
சுப்பிரமனியசாமி இந்தியாவுக்கு முதலாளிபோல இது ஒன்னும் தர்ம சாலை இல்லைன்னு சொல்லுறான். அந்த ஐயர் பதிவர், சுப்பிரமனிய சாமி இவர்களுக்கு நான் குறைந்தவனில்லைன்னு கருனாநிதியும் ஒத்துக்கொன்டிருக்கிறார். கிழவியைப்பாத்து இப்படி பயந்து அலறித்துடிக்கிறீங்களேடா உங்களுக்கு இருக்குடா ஆப்பு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...